Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தெவிட்டாத மாம்பழ பாயாசம் செய்வது எப்படி?| Mango Payasam Recipe in Tamil

Gowthami Subramani Updated:
தெவிட்டாத மாம்பழ பாயாசம் செய்வது எப்படி?| Mango Payasam Recipe in TamilRepresentative Image.

பொதுவாக பாயாசம் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் பெரும்பாலும் பருப்பு பாயாசம், சேமியா பாயாசம் மட்டுமே அதிகமாக தயார் செய்வர். ஆனால், இதைத் தவிர இன்னும் சில வெரைட்டியான பாயாச வகைகள் நிறைய உள்ளன. அந்த வகையில், மாம்பழ பாயாசமும் ஒன்று. மாம்பழ சாப்பாடு, மாம்பழ ஜூஸ் போன்றவற்றை கேள்விப்பட்டிருப்போம். அதென்ன மாம்பழ பாயாசம். அது எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தெவிட்டாத மாம்பழ பாயாசம் செய்வது எப்படி?| Mango Payasam Recipe in TamilRepresentative Image

இந்த சிறப்பான மாம்பழ பாயாசத்தை பண்டிகைக் காலத்திலும் செய்யலாம். இயற்கையாகவே, மாம்பழத்தில் உள்ள வைட்டமின் – சி சத்தானது, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் – ஏ சத்து, கண்பார்வை குறைபாடுகளைச் சரி செய்ய உதவுகிறது. கேரள மாநிலத்தில் மாம்பழ பாயாசம் ரெசிபிக்கு என ஒரு தனி சிறப்பிடமே உள்ளது. இதில், சுவையான மாம்பழ பாயாசம் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

தெவிட்டாத மாம்பழ பாயாசம் செய்வது எப்படி?| Mango Payasam Recipe in TamilRepresentative Image

தேவையான பொருள்கள்

மாம்பழம் – 1

வெல்லம் – 250 கிராம்

ஏலக்காய் – 1 தேக்கரண்டி

சுக்கு – ½ தேக்கரண்டி

பால் – 2 லிட்டர்

முந்திரி – 10

உலர் திராட்சை – 10

பாஸ்மதி அரிசி – 2 தேக்கரண்டி

நெய் – 2 தேக்கரண்டி

தெவிட்டாத மாம்பழ பாயாசம் செய்வது எப்படி?| Mango Payasam Recipe in TamilRepresentative Image

செய்முறை

✤ முதலில் மாம்பழத்தை எடுத்துக் கொண்டு, அதை நன்கு கழுவி தோலுரித்து துருவிக் கொள்ள வேண்டும்.

✤ வாணலி ஒன்றில் பாஸ்மதி அரிசியை லேசாக வறுத்து மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும்.

✤ பின், மிக்ஸி ஜாரில் ½ லிட்டர் பால், வெல்லம், ஏலக்காய், சுக்கு, துருவிய மாம்பழம் போன்றவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

✤ அதன் பிறகு, ஒரு அடிகனமான பாத்திரம் ஒன்றை எடுத்து, அதில் மீதமிருக்கும் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின், அதில் வறுத்து உடைத்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.

✤ அரிசி குழைய வெந்த பிறகு, அரைத்து வைத்துள்ள மாம்பழக் கலவையைச் சேர்க்க வேண்டும்.

✤ அதன் பின், குறைந்தது 10 நிமிடங்கள் வரை அதனை கொதிக்க விட வேண்டும். பின், மாம்பழக்கலவை சேர்த்த பின், நல்ல மணம் வருவதை உணரலாம்.

✤ அந்த சமயத்தில், நெய்யில் வறுத்த உலர் திராட்சை, முந்திரியைச் சேர்க்க வேண்டும். இதில் விருப்பம் இருந்தால் சிறிது குங்குமப் பூவைச் சேர்த்துக் கொள்ளலாம்.

✤ இந்த சுவையான மாம்பழ பாயாசத்தை சூடாகவோ, அல்லது ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.

தித்திக்கும் சுவையான மாம்பழ பாயாசத்தை வீட்டில் இப்படி செய்து சமைத்துப் பாருங்கள். இதன் சுவையை என்றும் மறக்க மாட்டீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்