Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Optical Illusion Game: இந்த காபி கொட்டைக்குள்ள ஒரு முகம் இருக்கு, ஒரு நிமிஷத்துல கண்டுப்பிடிக்கறவங்க புத்திசாலி...!!

Nandhinipriya Ganeshan May 24, 2022 & 13:50 [IST]
Optical Illusion Game: இந்த காபி கொட்டைக்குள்ள ஒரு முகம் இருக்கு, ஒரு நிமிஷத்துல கண்டுப்பிடிக்கறவங்க புத்திசாலி...!!Representative Image.

Optical Illusion Game: ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தரும் வகையில் இருக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும். அந்த வகையில், இன்று ஒரு புகைப்படம் (coffee bean optical illusion) சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த படத்தை நன்றாக பாருங்கள் அதில் ஒரு மனித முகம் மறைந்திருக்கும். அதை நீங்க ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்தால் நீங்க புத்திசாலி தான். முடிஞ்சா கண்டுபிடிங்க பார்க்கலாம். 

சின்னதா ஒரு விளையாட்டு... முடிஞ்ச இந்த ஓவியத்தில் மறைந்துள்ள 9 முகங்களை கண்டுபிடிங்க...!

சில நாட்களாகவே இணையத்தில் இம்மாதிரியான புகைப்படங்கள், ஓவியங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இது மூளைக்கு வேலை கொடுப்பதோடு, ஒரு பொழுதுபோக்கு புதிர் போட்டியாக விளையாடப்பட்டு வருகிறது. இந்த படத்தை நன்றாக கூர்ந்து கவனித்தால் அந்த காபி கொட்டைக்குள் மனித முகம் மறைந்திருக்கும். அதை நீங்க மிகச் சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், உங்க மூளை செயல்படும் விதத்தை பற்றி நிறைய தெரிந்துக் கொள்ளலாம். 

முடிஞ்சா இந்த போட்டோல ஒளிஞ்சிறுக்க ஆந்தைய கண்டுபிடிங்க பாக்கலாம்...

நீங்க மனித முகத்தை கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து வலது மூளை எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துமாம், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

அதாவது, சிலருக்கு வலது மூளையுடன் ஒப்பிடுகையில் இடது மூளை வளர்ச்சி அடைந்திருந்தால் அதிக பகுப்பாய்வு மற்றும் புத்திசாலி தனமாக சிந்திப்பவராக இருப்பார்கள் என்பது பொதுவான உண்மை. சரி, இப்போது இந்த காபி கொட்டைகளுக்கு இடையில் மறைந்திருக்கும் மறைந்திருக்கும் முகத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறா? உங்க மூளை எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்ள ஆசையா? இந்த படத்தை கவனமாக பார்த்து, அதைக் கண்டுபிடிக்க நீங்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை கணக்கிடுங்கள். 

நீங்க இதுல எத்தனை குதிரையை கண்டுப்பிடிக்கிறிங்களோ... அப்படி தான் உங்க குணம் இருக்குமாம்....!!!

என்ன கண்டுபிடிச்சிங்களா? நீங்கள் ஆக்கப்பூர்வமாக அல்லது தர்க்கரீதியாக இருக்கிறீர்களா என்றால், இந்த ஆப்டிக்கல் இல்யூசன் படத்தின் சோதனையில், நீங்கள் முதலில் என்ன பார்க்கிறீர்களோ அதன் அடிப்படையில் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும். 

இந்த படத்தின் கீழ் பாதியில் கவனம் செலுத்துங்கள். அங்கு ஒரு காபி கொட்டையில் உண்மையில் ஒரு மனிதனின் முகம் முழுமையுடன் கலந்ததாக இருக்கும். சரி நீங்க எத்தனை நிமிடத்தில் கண்டுபிடிக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்க மூளை செயல்பாடு எப்படி இருக்கும்னு தெரிந்துக் கொள்ளலாம். 

மூன்று வினாடிக்குள் - நீங்க மனித முகத்தை மூன்று வினாடிக்குள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால்,  உங்கள் வலது மூளையானது சராசரியைவிட வளர்ச்சியடையக்கூடும் என்று அர்த்தம்.

ஒரு நிமிடம் வரை - மூன்று வினாடி முதல் ஒரு நிமிடம் வரை எடுத்துக் கொண்டால், உங்கள் மூளையின் வலது பாதி முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளதாக அர்த்தம்.

மூன்று நிமிடங்களுக்குள் - மனித முகத்தை கண்டுபிடிக்க நீங்க ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்களுக்குள் எடுத்துக் கொண்டால் உங்களுடைய வலது பக்க மூளை மெதுவாகத் தகவலைப் பகுப்பாய்வு செய்கிறது என்று அர்த்தம்.

மூன்று நிமிடங்களுக்கு மேல் - கடைசியாக, மனித முகத்தை கண்டுபிடிக்க நீங்க மூன்று நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால், இதுபோன்ற மூளையை பரிசோதனை செய்யும் படங்கள் மூலம் பயிற்சி செய்ய தொடங்குவது நல்லது. 

இதில் 13 முகங்கள் ஒளிஞ்சிறுக்கு முடிஞ்சா கண்டுபிடிங்க….

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்