Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இயற்கை முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்? | How to Postpone Periods Naturally in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இயற்கை முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்? | How to Postpone Periods Naturally in TamilRepresentative Image.

மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மாதந்தோறும் இயற்கையாக உடலில் நடக்கும் மாற்றங்களால் வரக்கூடியது. இந்த மாதிரியான நாட்களில் பெண்கள் வெளியில் செல்ல விரும்பவே மாட்டார்கள். ஏனென்றால், ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விதமாக அசௌகரியங்கள் இருக்கும். இதனால், வீட்டில் இருக்கவே விரும்புவார்கள். ஆனால், மாதவிடாய் வரப்போகும் நாட்களில் முக்கிய விழாக்கள், கோவில் பண்டிகைகள் போன்றவை வந்தால் மாதவிடாயை தள்ளிப்போடவே நினைப்பார்கள். இதற்காக கடைகளில் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. 

இயற்கை முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்? | How to Postpone Periods Naturally in TamilRepresentative Image

ஆனால், மாத்திரை மூலம் ஒரு இயற்கை சுழற்சியை தடை செய்யும்போது, உடலில் ஹார்மோன் சுழற்சியில் குழப்பம் ஏற்படுத்துவதோடு, பல பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. அதனால் தான் மருத்துவர்களும் மாத்திரைகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் மாதவிடாயை தள்ளி வைக்கலாம். ஆனால் தொடர்ந்து பயன்படுத்த கூடாது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே. எனவே ரொம்ப தவிர்க்க முடியாத நாட்களில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

இயற்கை முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்? | How to Postpone Periods Naturally in TamilRepresentative Image

வெந்தயம்:

மிகவும் எளிமையான வழிமுறை என்பதோடு உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத ஒருமுறையும் கூட. உங்களுக்கு மாதவிடாய் வரப்போகும் ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே சிறிதளவு வெந்தயத்தை எடுத்து, வாயில்போட்டு நன்றாக மென்று சாப்பிட்டுவிட்டு, தண்ணீர் குடித்துவிடுங்கள். மாதவிடாய் தள்ளிப் போகும். வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்தும் குளிக்கலாம். இதனால் உடல்சூடு தணிந்து மாதவிடாய் தள்ளி போகும். 

இயற்கை முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்? | How to Postpone Periods Naturally in TamilRepresentative Image

வெள்ளரிக்காய்:

மாதவிடாய் வரப்போகும் சில நாட்கள் முன்பிருந்தே வெள்ளிரிக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். உடல் சூடு குறைந்தாலே மாதவிடாய் சிறிது நாட்கள் தள்ளி போகும். தர்பூசணி வயிற்றுக்கு இதமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே மாதவிடாய் வரப்போகும் 7 நாட்களுக்கு முன்பிலிருந்து தினமும் 1 கப் தர்பூசணி சாப்பிட்டு வரலாம். இதும் ஒரு எளிமையான இயற்கை வழிமுறையாகும். 

இயற்கை முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்? | How to Postpone Periods Naturally in TamilRepresentative Image

ஆப்பிள் சைடர் வினிகர்:

பொதுவாக, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை குறைக்க தான் ஆப்பிள் சைடர் வினிகரை பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். ஆனால், மாதவிடாய் தள்ளிப்போகவும் இதை பயன்படுத்தலாம். எனவே, மாதவிடாய் வரப்போகும் 10-12 நாட்களுக்கு முன்பிலிருந்தே  ஒரு டம்ளர் தண்ணீரில் 3 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து குடித்துவர வேண்டும். இது 4 முதல் ஒரு வாரம் வரை உங்கள் நாட்களை தள்ளிபோக செய்யும். 

இயற்கை முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்? | How to Postpone Periods Naturally in TamilRepresentative Image

எலுமிச்சை ஜூஸ்:

மாதவிடாயினைத் தாமதப்படுத்தும் பழமையான முறைகளில் இதுவும் ஒன்றாகும். அதாவது, ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து எலுமிச்சை சாற்றை கலந்து மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரம் முன்பிலிருந்து தினமும் குடித்துவந்தால், மாதவிடாய் தள்ளிப்போகும். மேலும், மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் வலியையும் இது குறைக்கிறது. 

இயற்கை முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்? | How to Postpone Periods Naturally in TamilRepresentative Image

பொட்டுக்கடலை:

மிகவும் எளிமையான வீட்டு வைத்தியம் என்றே சொல்லலாம். ஆமாங்க, மாதவிடாயை தள்ளிப்போடுவதில் பக்க விளைவுகள் இல்லாத, உடலுக்கு சிறந்த இயற்கையான பெஸ்ட் ரெமெடி இதுதான். அதாவது, மாதவிடாய் வரப்போகும் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் பொட்டுக்கடலையை நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வர வேண்டும். இப்படி செய்து வந்தால் எளிமையாக தள்ளி போடலாம். பொட்டுக்கடலையை நல்ல எண்ணெய்யில் கலந்து சாப்பிடு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்