Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

Cardiac Arrest Real Reason : இதனால் தான் இளம் வயதில் மாரடைப்பு வருகிறதா...?

Manoj Krishnamoorthi Updated:
Cardiac Arrest Real Reason : இதனால் தான் இளம் வயதில் மாரடைப்பு வருகிறதா...?Representative Image.

வயதானவர்களுக்கு தான் நோய்கள் வரும் இளவயதில் அந்த வருத்தம் இல்லை என்ற நிலையெல்லாம் மாறியாச்சு. இன்று மாரடைப்பில் உயிரிழப்போர்கள் அதிகமாக இளம் மற்றும் நடுத்தர வயதினர் ஆவர். 

அதுவும் முக்கியமாக ஆண்களை விட பெண்கள் தான் இருதய நோய் அதிகமாக வருகிறதாம். என்ன நம்ப முடியவில்லையா? ஆம், கடந்த 20 ஆண்டுகளில் அதிகமாக பெண்கள் மாரடைப்பு நோயால் இறந்ததாக 2019 ஆம் ஆண்டு பிரிட்டன் இதய நோய் பவுண்டேஷன் தெரிவித்தது. சரி..., எப்படி மாரடைப்பு ஏற்படுகிறது என்பதை பற்றி சிந்தித்து இருந்திருப்போம், ஆனால் பல சமயம் இது தான் மாரடைப்பு உண்டான அறிகுறி என்பது கூட தெரியாமல் போயிருக்கும். 

Cardiac Arrest Real Reason : இதனால் தான் இளம் வயதில் மாரடைப்பு வருகிறதா...?Representative Image

மாரடைப்பு அறிகுறி (Cardiac Arrest Real Causes And Symptoms)

நமக்கு ஆரோக்கியத்தில் குறை ஏற்படும் வரை நமக்கு உடலின் மீது அக்கறை இருக்காது. ஆனால் நம் உடலில் ஒரு பாகம் தன் செயலை சரிவர செய்யவில்லை என்றால் தான் ஆரோக்கியத்தின் அருமை. இது யாரும் மறுக்க முடியாத கருத்தாகும்.  பொதுவாக நெஞ்சு வலி தான் மாரடைப்பு என்று நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இவ்விரண்டும் வேறுவேறு ஆகும். 

மாரடைப்பின் அறிகுறிகள் யாதென்றால்,  

உடல் செயல்பாட்டில் திடீர் சரிவு

துடிப்பு இல்லாது இருப்பது

மூச்சு இல்லாமல் இருப்பது

சுய நினைவு இழப்பது 

மூச்சு விட சிரமப்படுவது

சோர்வு

வேகமான இதய துடிப்பு அல்லது இதயத்தில் படபடப்பு போன்றவை ஆகும். ஆனால் பெரும்பாலும் மாரடைப்பு அறிகுறியில்லாமல் திடீரென வரும். 

Cardiac Arrest Real Reason : இதனால் தான் இளம் வயதில் மாரடைப்பு வருகிறதா...?Representative Image

மாரடைப்பு காரணம் (Cardiac Arrest Real Reason)

இன்று இருக்கும் சூழலில் இளம் வயதினருக்கும் மாரடைப்பு வரக்காரணம் உணவு பழக்கம் ஆகும். உடற்பயிற்சியின்மையால் அதிகரிக்கும் உடல் எடை பின் உயர் ரத்த அழுத்தம், அதிகமான சர்க்கரை அளவு போன்றவையும் மாரடைப்பு ஏற்படுத்தும். 

வெளிப்படையான வாழ்வு என்பதே கனவு என்பது போல் மாறி, ஒவ்வொருக்கு பஞ்சமே இல்லாத அளவு மன அழுத்தம் உள்ளது. இந்த மன அழுத்தம் தூக்கமின்மை, பயம் போன்றவை ஏற்படுத்தி மாரடைப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்