Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே பால் கடம்பு செய்வது எப்படி | How to make milk kadambu at home

Vaishnavi Subramani Updated:
வீட்டிலேயே பால் கடம்பு செய்வது எப்படி | How to make milk kadambu at homeRepresentative Image.

பால் என்பது அனைவருக்கும் பிடிக்கும் ஆனால் குழந்தைகளுக்கு பால் குடிக்க வைப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். பால் கால்சியம் நிறைந்த ஒரு திரவபொருள் ஆகும். அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்புகளூக்கு வலிமை பெருவதற்கும், உதவும். அதனால் பால் பயன்படுத்தி ஒரு ரெசிபி பார்க்கலாம். அதுவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ரெசிபி வீட்டிலே எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அந்த ரெசிபி தான் பால் கடம்பு இது பார்ப்பதற்கு சீம் பால் போல் இருக்கும் ஆனால் சுவையாகவும் அருமையாகவும், இருக்கும். சரிவாங்க அந்த ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

வீட்டிலேயே பால் கடம்பு செய்வது எப்படி | How to make milk kadambu at homeRepresentative Image

தேவையான பொருள்கள்

✤ பால் -1/2 லிட்டர் (தண்ணீர் சேர்க்காத பால்)

✤ சர்க்கரை -1/2 கப்

✤ பால் பவுடர் – 1/2கப்

✤ அகர்அகர்- 50 கிராம் (கடற்பாசி)

✤ ஏலக்காய்-3 டீஸ்பூன்

✤ நெய் – 5 டீஸ்பூன்

வீட்டிலேயே பால் கடம்பு செய்வது எப்படி | How to make milk kadambu at homeRepresentative Image

செய்முறை

✤ முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்றாக காய்ச்சவும்.

✤ அதில் அரை கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக கரைந்து வரும் வரை கிளறிவிடவும்.

✤ அதில் அரை கப் அளவிற்கு பால் பவுடர் சேர்த்து அது நன்றாக கரைந்து வரும் வரை கிளறவும்.

✤ பால் பவுடர் கரைந்த பிறகு, அதில் ஐந்து கிராம் அளவிற்கு, கடற்பாசி சேர்த்து நன்றாக கரைந்து வரும் வரை கிளறிவிடவும்.

✤ கடற்பாசிகள் கரைந்து பால் நன்றாக கெட்டியாக ஆரம்பித்ததும் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

வீட்டிலேயே பால் கடம்பு செய்வது எப்படி | How to make milk kadambu at homeRepresentative Image

✤ பால் கெட்டியான பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கவும்.

✤ மற்றொரு பாத்திரத்தில் நெய் முழுவதுமாக தேய்த்து அதில் சூடாக இருக்கும் பாலை ஊற்றி அதை ஃப்ரிஷரில் ஒன்றிலிருந்து இரண்டு மணிநேரம் வைக்கவும்.

✤ இரண்டு மணிநேரத்திற்கு பிறகு, அதை எடுத்தால் சுவையான பால் கடம்பு தயார். அதை பார்த்தால் சீம் பால் போல் இருக்கும் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்