Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உஷார் மக்களே... அதிக அளவு நீரும் ஆபத்து… என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

Gowthami Subramani Updated:
உஷார் மக்களே... அதிக அளவு நீரும் ஆபத்து… என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..? Representative Image.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்று சொல்வது பொய் என்று கூறுவது முற்றிலும் உண்மை. இதில் அமுதத்திற்குப் பதில் நீரைச் சேர்த்து சொன்னால் அதுவும் உண்மை தான். ஏனெனில், அளவுக்கு அதிகமாக நீரைக் குடிப்பதன் மூலம், நாம் நிறைய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நம் உடலானது, 60 விழுக்காடு நீரால் ஆனது ஆகும். நாம் குடிக்கும் குடிநீரானது நமது உடலில் உள்ள செல்களுக்குத் தேவையான சத்துக்களை எடுத்துச் செல்ல மற்றும் உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை அகற்றுவதில், நீர் முக்கிய பங்காற்றுகிறது. இருப்பினும், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதும் உடலிற்கு மிகுந்த ஆபத்தைத் தரக் கூடியதாக அமையும்.

உஷார் மக்களே... அதிக அளவு நீரும் ஆபத்து… என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..? Representative Image

சிறுநீர் கலர் அறிகுறிகள்

உடலிற்கு தண்ணீர் எந்த அளவில் இருக்கிறது என்பதையும், அதிக அளவு தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறோமா என்பதை நம் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் நிறத்தை வைத்து அறிந்துக் கொள்ளலாம்.

✤ சிறுநீரகமானது இளம் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால், தண்ணீர் உடலுக்குப் போதுமான அளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

✤ தண்ணீர் உடலுக்குப் போதுமானதாக இல்லை. உடலில் தண்ணீர் தேவை என்பதை உணர்த்துவதாக, சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் தோன்றும்.

✤ சிறுநீர் வெள்ளையாக வெளியேறினால், நாம் அதிக அளவு தண்ணீரைக் குடித்திருக்கிறோம் என்பதை உணர்த்தும்.

உஷார் மக்களே... அதிக அளவு நீரும் ஆபத்து… என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..? Representative Image

ரத்தத்தில் அபாயம்

தண்ணீர் தேவையானது, உடலமைப்புக்கு ஏற்ப மாறுபடும். எனவே, இதனைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல தண்ணீரை அருந்துவது அவசியமாகிறது. அதிக அளவு தண்ணீர் குடிப்பதால், நாம் பல்வேறு விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அந்த வகையில், நாம் குடிக்கும் அதிக அளவு தண்ணீரானது ரத்த நாளங்களில் சேர்ந்து விடும்.

இதனால், சோடியத்தின் அளவு குறைவதுடன் உடல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இவ்வாறு சோடியத்தின் அளவு குறைந்து காணப்படும் போது, உடலில் பிற சத்துக்களின் அளவிலும் மாற்றம் உண்டாகும். இதன் காரணமாக, உடலில் பல்வேறு உபாதைகளைச் சந்திக்க நேரிடும்.

உஷார் மக்களே... அதிக அளவு நீரும் ஆபத்து… என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..? Representative Image

கண்டறியும் முறை

தேவைக்கு அதிகமாக தண்ணீரைப் பருகுவதை சில அறிகுறிகளை வைத்துக் கண்டறியலாம். இரவு நேரங்களில் ஒரு சிலர் குறைந்தது 7 முறைக்கு மேல் சிறுநீர் செல்வார்கள். இதன் மூலம், அவர் அதிக அளவு தண்ணீர் குடிக்கிறார் என்பதை உறுதி செய்யலாம். இவ்வாறு தேவைக்கு அதிகமாக நீர் அருந்தும் போது குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். அது மட்டுமல்லாமல், ஒரு சிலருக்கு உடல் எடையில் பல்வேறு மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதாவது, கைகள், உதடு, பாகங்கள் போன்றவை வெளிரிய நிறத்தில் காணப்படும்.

உஷார் மக்களே... அதிக அளவு நீரும் ஆபத்து… என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..? Representative Image

குறையும் சோடியம்

இவ்வாறு அதிக அளவு தண்ணீரை குடிக்கும் போது, குறையும் சோடியத்தின் அளவு, உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். சோடியம் நம் உடலில் முக்கியமான ஒன்றாகும். இது தான் நம் உடலில் உள்ள செல்கள் அனைத்திற்கும் தகவல்களை அனுப்பவும், செயல்பாடுகளை நினைவூட்டவும் உதவுகிறது.

உடலில் அதிக தண்ணீர் இருப்பதால், ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இது இதயத்திற்கு அதீத வேலைப்பளு தருகிறது. இதனால், நமது செயல்பாடு குறையத் தொடங்கும். இதன் உச்சகட்ட பாதிப்பாக, அதிக தண்ணீர் பருகுவதால், மூளை வலுவிழந்து, கோமா நிலைக்குச் செல்லவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இது போன்ற எண்ணற்ற பாதிப்புகள் இருப்பதால், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. அது போல, தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் உடலுக்குக் கேடு தரும். உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடித்தால், உடலும், மனமும் நலமுடன் இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்