Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

கர்ப்பிணிகளுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகமாக்கும் டிராகன் பழம்.. சுகருக்கும் நல்லது

Nandhinipriya Ganeshan Updated:
கர்ப்பிணிகளுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகமாக்கும் டிராகன் பழம்.. சுகருக்கும் நல்லதுRepresentative Image.

நம்மில் பலருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த பழத்தை சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆசை மனதில் குடிக்கொண்டிருக்கும். அப்படி நம்மில் பலரும் சாப்பிட துடிக்கும் பழங்களில் இந்த டிராகன் பழமும் ஒன்று. கண்ணை பறிக்கும் நிறத்தை கொண்ட இந்த பழத்தை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறும். பொதுவாகவே, எந்தஒரு பழத்தை சாப்பிடுவதற்கு முன்பும் அதன் நன்மைகள் தீமைகளை தெரிந்துக்கொண்டு சாப்பிடுவது நல்லது தானே. அந்தவகையில், இந்த அழகான பழத்தை சாப்பிடுவதால் நமது உடல் பெறும் நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். 

கர்ப்பிணிகளுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகமாக்கும் டிராகன் பழம்.. சுகருக்கும் நல்லதுRepresentative Image

டிராகன் பழத்தின் அற்புத பயன்கள்:

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு டிராகன் பழம் பெஸ்ட் சாய்ஸ், ஏனென்றால் இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது உங்களை நீண்ட நேரத்திற்கு முழுமையாக வைத்திருக்க உதவும், இதனால் அதிகமாக சாப்பிடுவதை குறைக்க இயலும். இது கல்லீரல் நோய் அபாயத்தையும் குறைக்கிறது.

கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்துமாம். கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து அதிகம் கொண்ட இந்த பழத்தை சாப்பிட்டால் இரத்த சோகையைத் தடுக்கவும்,  உடலின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் முடியும். இந்த பழத்தில் இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு உறுதியான எலும்பு உருவாக்கத்திற்கும், சிறந்த இரத்த ஓட்டத்திற்கும்,  மூளை ஆரோக்கியத்திற்கும் உதவிபுரிகின்றன. 

கர்ப்பிணிகளுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகமாக்கும் டிராகன் பழம்.. சுகருக்கும் நல்லதுRepresentative Image

சர்க்கரை நோயாளிக்கு அன்றாடம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் போராட வேண்டியிருக்கும். அப்படிபட்டவர் இந்த டிராகன் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். இந்த பழம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் ஏற்றது. பார்வை திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. 

டிராகன் பழம் நமது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. இந்த பழத்தை ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து அரைத்து மாஸ்க் மாதிரி முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் மென்மையான சருமத்தை பெற முடியும். ஃப்ரீ ரேடிக்கல்கள் சருமத்தை காயப்படுத்தாமலும் தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவுகிறது, இதனால் என்றும் இளமையான சருமத்தை கொண்டிருப்பீர்கள். 

கர்ப்பிணிகளுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகமாக்கும் டிராகன் பழம்.. சுகருக்கும் நல்லதுRepresentative Image

டிராகன் பழத்தில் உள்ள ப்ரீபயாடிக்குகள் குடலில் உள்ள லாக்டிக் அமில பாக்டீரியா மற்றும் பிஃபிடோபாக்டீரியா போன்ற ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த ப்ரீபயாடிக்குகள் நமது செரிமான மண்டலத்தில் தொற்று, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. 

கவனம்:

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அப்படி, இத்துனை நன்மைகளை வழங்கும் டிராகன் பழத்தை அளவோடு எடுத்துக்கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அளவுக்கு மீறினால், வயிற்று போக்கு, வயிறு உப்பசம் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வழிவக்கும்.

Also Read: சளி, இருமல் உடனே குணமாக கற்பூரவல்லி டீ…! காசே செலவில்லாம முழுவதும் குணமாக இப்படி செஞ்சி குடிங்க…

Tag: Dragon Fruit Benefits In Tamil | Health Benefits Of Dragon Fruit In Tamil | Red Dragon Fruit Benefits In Tamil | Dragon Fruit Benefits For Pregnancy In Tamil | Dragon Fruit Benefits For Skin | Dragon Fruit Benefits For Diabetes | Which Fruit Is Good For Diabetes | Fruits For Diabetes | Dragon Palam Nanmaigal | டிராகன் பழத்தின் நன்மைகள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்