Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்.. அப்ப இது உங்களுக்குத் தான்…!

Gowthami Subramani November 21, 2022 & 16:05 [IST]
குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்.. அப்ப இது உங்களுக்குத் தான்…!Representative Image.

எந்த காலநிலை மாற்றத்திலும், நாம் தினசரி செய்ய வேண்டிய அன்றாடக் கடமைகளில் ஒன்றாக இருக்க வேண்டியது உடற்பயிற்சி ஆகும். ஏனெனில், மனதுக்கும், உடலுக்கும் ஏற்ற தனித்துவமான பலன்களைத் தர ஏதுவாய் அமைவது உடற்பயிற்சி ஆகும். பொதுவாக குளிர் காலத்தில் அதிலும் குறிப்பாக விடியற்காலை நேரங்களில் எழுந்து உடற்பயிற்சி செய்பவர்களை அவ்வளவு எளிதில் காண முடியாது. சரி, இந்தப் பதிவில் எப்படி குளிர் காலத்திலும் நம்  உடல் மற்றும் மனதுக்குத் தேவையான சக்திகளைப் பெற முடியும் என்பதைப் பார்க்கலாம்.

குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்.. அப்ப இது உங்களுக்குத் தான்…!Representative Image

குளிர் காலத்தில் உடற்பயிற்சி செய்யும் முறை

குளிர் காலத்தில் காலையில் எழுந்திருப்பதே மிகவும் கடினமாக இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி உடற்பயிற்சி செய்வது என்ற சிந்தனையே இருந்து கொண்டிருக்கும். இருப்பினும், குளிர் காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சி செய்வதால், பல்வேறு நன்மைகள் பெறலாம். இதில் குளிர் காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சி குறித்து காண்போம்.

குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்.. அப்ப இது உங்களுக்குத் தான்…!Representative Image

நடைபயிற்சி அல்லது வாக்கிங்: நடைபயிற்சி என்பது ஒருவரது உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

விறுவிறுப்பான நடையுடன் காலை நேரத்தில் நாம் செய்யும் உடற்பயிற்சி இதயத் துடிப்பை அதிகரிப்பதுடன், மன ரீதியாக சிறந்த பலன்களை அளிக்கும்.

ஓடுதல் அல்லது ஜாகிங்: ஜாகிங் செய்வதன் மூலம், நாம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவோம். ஜாகிங் செய்து சில நிமிடங்களாவது நமது கை, கால்களை நீட்டவும், மடக்கவும் செய்ய வேண்டும். இது தசைகளை வலுவாக்கும்.

குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்.. அப்ப இது உங்களுக்குத் தான்…!Representative Image

சூரிய நமஸ்காரம்: சூரிய நமஸ்காரம் என்பது முழுமையான உடற்பயிற்சிகளில் ஒன்றாக விளங்குகிறது. இதில் பல்வேறு உடல் அமைப்புகளில் உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல், மனம் இரண்டுமே பலமாகக் காணப்படும். குளிர்காலத்தில், பிராணயாமம் செய்வதன் மூலம், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளைத் தீர்க்கலாம்.

தியானம்: உடல் வலிமை எவ்வளவு பெரிதோ, அதே போல மன வலிமையும் மிக முக்கியமானதாகும். குளிர்காலத்தில் நாம் தியானம் செய்வதன் மூலம் நேர்மறையான ஆற்றல் உருவாகி உடலை சுறுசுறுப்பு அடையச் செய்யும்.

குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்.. அப்ப இது உங்களுக்குத் தான்…!Representative Image

குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

நம் உடல் மற்றும் மன வலிமைக்கு உடற்பயிற்சி ஒரு சிறந்த தீர்வாக அமையும். அந்த வகையில் எந்தவொரு காலநிலை மாற்றமாக இருந்தாலும் உடற்பயிற்சி என்பது கட்டாயமாகிறது.

கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்வதை விட குளிர் காலத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் அதிக கலோரிகளைக் குறைக்க முடியும்.

ஏனெனில், குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்தால், வியர்வை குறைவாக வரும். இதனால், எளிதில் சோர்வு ஏற்படாது நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யலாம்.

அதன் படி, எந்த காலமாக இருந்தாலும் உடற்பயிற்சி என்பது கட்டாயம் தேவையான ஒன்று. அதிலும், குறிப்பாக குளிர் காலத்தில் உடற்பயிற்சி செய்தால் நிறைய சிறப்புப் பலன்களைப் பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்