Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அசத்தலான சுவையில் காரைக்குடி இறால் மசாலா! எப்படி செய்வது..? | Karaikudi Eral Masala

Gowthami Subramani Updated:
அசத்தலான சுவையில் காரைக்குடி இறால் மசாலா! எப்படி செய்வது..? | Karaikudi Eral MasalaRepresentative Image.

ஒவ்வொரு இடத்திற்கும் தனி ஒரு ஸ்பெஷல் ரெசிபி உண்டு. அந்த இடத்தை ஞாபகம் வைத்துக் கொள்வதை அந்த ரெசிபியை வைத்தே நினைவில் வைத்துக் கொள்வர். அதிலும் குறிப்பாக, செட்டி நாட்டு சமையலுக்கு என ரசிகர் பட்டாளமே உள்ளனர். செட்டி நாட்டு சமையலில் சுவையான உணவாக காரைக்குடி இறால் மசாலாவைக் கூறலாம். இதனை எளிதாக தயார் செய்யலாம். இந்த காரைக்குடி இறால் மசாலாவை சாதம் அல்லது பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிடுவது அவ்வளவு ருசியைத் தரும். இந்தப் பதிவில், காரைக்குடி இறால் மசாலா தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

அசத்தலான சுவையில் காரைக்குடி இறால் மசாலா! எப்படி செய்வது..? | Karaikudi Eral MasalaRepresentative Image

தேவையான பொருள்கள்

சுத்தம் செய்யப்பட்ட இறால் – 500 கிராம்

எண்ணெய் – 4 டீஸ்பூன்

வெங்காயம் – 2

தக்காளி – 2

இலவங்கப்பட்டை – 1 அங்குல துண்டு

ஏலக்காய் – 2

கறிவேப்பிலை – 2 கொத்து

இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

பெருஞ்சீரகம் விதைகள் – 1 டீஸ்பூன்

கருப்பட்டி – 2 டீஸ்பூன்

கருமிளகாய் – 1 நிமிடம்

கொத்தமல்லி விதைகள் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

அசத்தலான சுவையில் காரைக்குடி இறால் மசாலா! எப்படி செய்வது..? | Karaikudi Eral MasalaRepresentative Image

செய்முறை

✤ முதலில் இறால்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.

✤ பிறகு, பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் கருப்பு மிளகு, பெருஞ்சீரகம் விதைகள், சீரகம், சிவப்பு மிளகாய், கொத்தமல்லி விதைகளைச் சேர்த்து வறுக்க வேண்டும்.

✤ பின், அவற்றைச் சிறிதளவு தண்ணீர் விட்டு, விழுதாக அரைக்க வேண்டும். இந்த மசாலாவுடன், மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறி தனியாக எடுத்துக் கொள்ளவும்.

✤ அதன் பின், கடாய் ஒன்றில் எண்ணெயை சூடாக்கி அதில் இலவங்கப்பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வதைக்கவும்.

✤ தக்காளி கூழ் சேர்த்து, இதனை நன்கு வதக்க வேண்டும். இதுடனுன், அரைத்து வைத்த செட்டிநாடு விழுதைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

✤ மசாலாவில் சுத்தம் செய்யப்பட்ட இறால் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். குறைந்த தீயில் இறாலை 10-15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

இப்போது சுவையான காரைக்குடி இறால் மசால் தயார் ஆகி விட்டது. இதனை சூடான சாதம் அல்லது பரோட்டாவுடன் சேர்த்துப் பரிமாறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்