Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எல்லோருக்கும் பிடித்த ஆளுமைப் பண்பைப் பெற வேண்டுமா.! இதோ உங்களுக்கான டிப்ஸ்!

Gowthami Subramani Updated:
எல்லோருக்கும் பிடித்த ஆளுமைப் பண்பைப் பெற வேண்டுமா.! இதோ உங்களுக்கான டிப்ஸ்!Representative Image.

அனைவருக்கும் உங்களைப் பிடிக்க வேண்டும் என்றால், அதற்கான ஆளுமைப் பண்பைப் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். இத்தகைய ஆளுமைப் பண்பைப் பெறுவதற்கு சில குறிப்புகள் உள்ளன.

எல்லோருக்கும் பிடித்த ஆளுமைப் பண்பைப் பெற வேண்டுமா.! இதோ உங்களுக்கான டிப்ஸ்!Representative Image

கவனத்தை ஈர்ப்பது

ஒரு சிலர், எல்லா நேரத்திலும் அவர்களைச் சுற்றி ஆட்களால் சூழப்பட்டிருப்பர். அவர்களுடன் பேசுவதில் எந்த சங்கடமோ, கூச்சமோ இல்லாமல் இருப்பர். அவர்களுடன் பேசும் போது மிகவும் வசதியாக உணர்வார்கள். அத்தகையவர்கள், எங்கு சென்றாலும் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பர். இதற்கு அவர்களது ஆளுமைத் திறனே காரணமாகும். அதே போல, மற்றவர்களிடம் இருந்து எல்லா வகையான உதவிகளையும் பெறுவார்கள். அவர்களுக்கு தனிமை என்ற ஒன்றே இருக்காது.

எல்லோருக்கும் பிடித்த ஆளுமைப் பண்பைப் பெற வேண்டுமா.! இதோ உங்களுக்கான டிப்ஸ்!Representative Image

வசீகர ஆளுமை

இந்த ஆளுமைத் திறன் ஆனது, காந்தத்தைப் போன்றது. இது அனைவரையும் ஈர்ப்பதுடன், உங்களைச் சுற்றியுள்ள இடத்தில் இனிமையான சூழலை உருவாக்குகிறது. இது உங்களைச் சுற்றி ஒரு நெட்வொர்க்கை அதிகரிப்பதுடன், தொழில்துறை முன்னேற்றத்திற்கும் உதவுவதாக அமையும். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே சமயம், இந்த உணர்வுகள் மனதில் இருந்து வெளிவருவதில்லை. ஆனால், இவர்களிடம் நல்ல குணமும், ஆளுமையும் இருப்பினும் அது வெளிக்காட்டப்படுவதில்லை. இருப்பினும், இந்த கவர்ச்சிகரமான ஆளுமையை வெளிப்படுத்துவற்கு ஒரு சில குறிப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி இதில் காணலாம்.

எல்லோருக்கும் பிடித்த ஆளுமைப் பண்பைப் பெற வேண்டுமா.! இதோ உங்களுக்கான டிப்ஸ்!Representative Image

ஈர்க்கும் ஆளுமைப் பண்புக்கான உதவிக் குறிப்புகள்

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன்னும், கட்டாயம் பின்பற்ற வேண்டியதில் ஒன்று அனைவரும் அவரவர்களைச் சுற்றி ஒரு இனிமையான சூழலை உருவாக்குவதாகும். இதன் மூலம், ஒரு நல்ல ஆளுமைப் பண்பைப் பெறலாம். இது மேலும் சில குறிப்புகளை விரிவாகக் காண்போம்.

எல்லோருக்கும் பிடித்த ஆளுமைப் பண்பைப் பெற வேண்டுமா.! இதோ உங்களுக்கான டிப்ஸ்!Representative Image

மகிழ்ச்சியாக இருப்பது

வாழ்க்கையில் என்ன சோகமான நிகழ்வுகள் நடந்தாலும், சோகத்தை வெளிப்படுத்தாமல், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். கஷ்டங்களை எண்ணி வருத்தப்படாமல், அந்த பிரச்சனையை எப்படி போக்கலாம் என்ற வழிமுறைகளைக் காண வேண்டும். பல மகிழ்ச்சியான விஷயங்களைக் கவனித்து, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்து சிரிக்கக் கூடாது. மற்றவர்களுடன் சிரிக்கவும், மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவும். எனவே, புன்னகையானது ஒரு நல்ல ஆளுமைப் பண்பை எடுத்துக் கூறுவதாக அமைகிறது. சிரித்த முகமாக இருந்தால், அது மக்களைக் கவரும் வண்ணமாக அமைகிறது. உங்கள் முகத்தை சோகமாக வைத்திருக்கும் போது, யாரும் உங்களைச் சுற்றி இருக்க மாட்டார்கள். இது உங்களை வருத்தப்பட வைக்கும்.

எல்லோருக்கும் பிடித்த ஆளுமைப் பண்பைப் பெற வேண்டுமா.! இதோ உங்களுக்கான டிப்ஸ்!Representative Image

திறந்த மனம்

எப்போதும் அடுத்தவர்களிடம் பேசும் போது, உங்கள் மனதில் இருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். அதே சமயம், நீங்கள் கூறும் கருத்துக்கள் அவர்களுக்குக் கஷ்டத்தைத் தருவதாக இருக்கக் கூடாது. மற்றவர்கள் சொல்வதையும் கவனமாகக் கேக்க வேண்டும். இது அவர்களுக்கு உங்களுடன் பேசுவதற்கான தூண்டுதலை ஏற்படுத்தும்.

எல்லோருக்கும் பிடித்த ஆளுமைப் பண்பைப் பெற வேண்டுமா.! இதோ உங்களுக்கான டிப்ஸ்!Representative Image

அமைதியாக இருப்பது

மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போதும், கோபப்படும் போதும் நிதானமாக சூழலை எதிர்கொள்வது அவசியம் ஆகும். இது உங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் நல்லதாக அமையும். இவ்வாறு இருப்பவர்களின் மேல், நல்ல அபிப்ராயம் உண்டாகும். மற்றவர்கள் உங்களிடம் கோபத்தை வெளிப்படுத்தினாலும், நீங்கள் நிதானமாக பதிலளிப்பது, உங்கள் மரியாதையை அதிகரிக்கும் விஷயமாக அமையும். தொடர்ந்து எரிச்சல், கோபத்தைக் காட்டுபவர்களிடம் அதிகமாக பேச மாட்டார்கள். அவர்களை விட்டு வெளியேறவும் செய்வர்.

எல்லோருக்கும் பிடித்த ஆளுமைப் பண்பைப் பெற வேண்டுமா.! இதோ உங்களுக்கான டிப்ஸ்!Representative Image

சுயநலம் இருக்கக் கூடாது

சுயநலம் மிக்கவராக இருக்கக் கூடாது. எவரையும் இழிவாகப் பார்க்கக் கூடாது. அதே போல, அடுத்தவர்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. தான் தான் பெரியவர் என்ற கர்வமும், மற்றவர்கள் நம்மை விடச் சிறியவர்கள் என்ற அகந்தையும் இருக்கக் கூடாது. இது பெற்றிருப்பவர்கள், தானாகவே புறக்கணிக்கப்படுவார்கள். அகங்கார மனப்பான்மையை ஒழித்து, அனைவரும் சமம் என்ற எண்ணம் பெற்றிருத்தல் வேண்டும்.

எல்லோருக்கும் பிடித்த ஆளுமைப் பண்பைப் பெற வேண்டுமா.! இதோ உங்களுக்கான டிப்ஸ்!Representative Image

மற்றவர்களை நேசிப்பது

நம்மால் முடிந்த அளவிற்கு, மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். மற்றவர்களை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவருடைய தோற்றம் மற்றும் குணங்களை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு காட்டி, சிலரிடம் அன்பாகவும், சிலரிடம் கோபமாகவும் இருக்கக் கூடாது. அனைவரையுமே நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களைக் குறை கூறுவதற்கு நேரத்தை செலவிடக் கூடாது. மற்றவர்கள் நமக்கு தீமைகளே செய்திருப்பினும், அதை மறந்து அவர்கள் செய்த நன்மைகளை நம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லோருக்கும் பிடித்த ஆளுமைப் பண்பைப் பெற வேண்டுமா.! இதோ உங்களுக்கான டிப்ஸ்!Representative Image

நீங்களே முன்னிலை

நீங்கள் மற்றவர்களை நேசிக்கும் முன், உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும். இது உங்களுக்கு நேர்மறை எண்ணங்களை அளிக்கிறது. மற்றவர்களைப் பற்றியும், நேர்மறையாக சிந்தனையை வளர்க்க உதவும். இது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்களிய நீங்களே நேசிப்பதன் மூலமே, தெளிவான சிந்தனையுடன் வாழ்க்கையை வாழ முடியும். அதே போல, சரியான வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்க வேண்டும். இது அனைவருக்கும் ஆதரவை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். இது உங்களுக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இது போன்ற குறிப்புகளைக் கையாள்வதன் மூலம், நீங்கள் நல்ல ஆளுமைப் பண்பைப் பெறுவீர்கள். இது மற்றவர்களை உங்களிடம் ஈர்க்கும் திறன் கொண்டதாக அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்