Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய அடிப்படை சட்ட உரிமைகள் | Women’s Rights

Priyanka Hochumin Updated:
பெண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய அடிப்படை சட்ட உரிமைகள் | Women’s RightsRepresentative Image.

இந்த சமுதாயத்தில் பலகீனமானவர்களை எளிதில் தாக்கி விடுகின்றனர். ஆண் பெண் என்பவர்களுள் எந்த ஒரு சூழ்நிலையிலும் பெண்களை காரணம் காட்டி தாக்குகின்றனர். ஏனெனில் அப்போது தான் அவர்கள் கௌரவத்திற்காக அமைதி காத்து பிரச்சனையை முடிப்பார்கள். ஆனால் பெண்கள் இதைப் பற்றி நன்றாக சிந்திக்க வேண்டும், இப்படி செய்வதால் அவர்கள் மீண்டும் அதை தான் செய்வார்கள். எனவே, பெண்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் நிறைய துன்புறுத்தல்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சந்திக்கின்றனர். அதில் இருந்து காத்துக்கொள்ள சில அடிப்படை சட்டங்களை தெரிந்துக் கொள்வது நல்லது. இந்த பதிவில் அப்படியான பெண்கள் உரிமைப் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

பெண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய அடிப்படை சட்ட உரிமைகள் | Women’s RightsRepresentative Image

சம வருமான உரிமை

ஆரம்ப காலத்தில் ஆண்கள் மட்டுமே வேலைக்கு செல்வார்கள். ஆனால் தற்போது பெண்கள் செய்யாத வேலைகளே இல்லை என்ற நிலை உள்ளது. அப்படி இருக்கையில் ஆண் பெண் என்று பாரபட்சம் பார்க்காமல் சம்பளம் தர வேண்டும். அப்படி உங்களுக்கு சரியான ஊதியம் தரவில்லை என்றால் நீங்கள் அதனை எதிர்த்து குரல் கொடுக்கலாம்.

பராமரிப்பு உரிமை

திருமணமான பெண்கள் தங்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம், உடை, கல்வி சார்ந்த அடிப்படை விஷயங்களை கணவர் வீட்டில் தர வேண்டும். அதே போல விவாகரத்தான பெண்கள் தங்களின் வாழ்க்கைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கணவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். எனவே, உங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெற நீதிமன்றத்தை நாடி முறை படி பெற்றுக்கொள்ளலாம்.

பெண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய அடிப்படை சட்ட உரிமைகள் | Women’s RightsRepresentative Image

பணியிட உரிமை

வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு தர வேண்டிய பாதுகாப்பு, மரியாதை மற்றும் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். இரவு நேரங்களில் பெண்கள் வேலை செய்தால் அவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பு. அதே போல பாலியல் ரீதியாக பெண்கள் ஏதேனும் கொடுமைகளை மேற்கொண்டால் அதனையும் எதிர்த்து குரல் கொடுத்து நீதி கேட்கலாம்.

வன்கொடுமைக்கு எதிரான உரிமை

பெண்களின் உடல் மற்றும் மனம் ரீதியாக ஏற்படும் அனைத்தும் வன்கொடுமையின் கீழ் வரும். அதனை உங்களுக்கு பாலியல் தொந்தரவு, கடுமையான வார்த்தைகளால் கஷ்டப்படுத்துவது, அடித்துத் துன்புறுத்துவது போன்ற செயல்களை யார் செய்தாலும் நீங்கள் அவர்களை தண்டிக்கலாம்.

பெண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய அடிப்படை சட்ட உரிமைகள் | Women’s RightsRepresentative Image

தற்காத்துக் கொள்ளும் உரிமை

பெண்கள் தனிமையில் இருக்கும் போது யாரேனும் உங்களை தாக்க முயன்றால் நீங்கள் தற்காப்பிற்காக அவர்களை தடுக்கலாம் அல்லது தாக்கலாம். ஆபத்து நேரத்தில் மற்றவர்களுக்காக காத்திருக்காமல் நீங்களே உங்களை காத்துக்கொள்ளலாம். இது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விஷயமாகும்.

இலவச சட்ட உதவிக்கான உரிமை

பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை எதிர்த்து போராடாமல் அதனுடன் வாழ பழகிவிடுகின்றனர். அதே போல ஏழ்மை காரணமாகவும் குற்றங்களை எதிர்த்து குரல் கொடுக்க தயங்குகின்றனர். இவர்களுக்காகவே அரசாங்கம் இலவச சட்ட ரீதியான உதவிகளை வழங்க அனுமதிக்கின்றனர். இதன் மூலம் நீங்கள் பயன்பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்