Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவிட் தாக்கம்! விந்தணுக்களின் தரத்தைப் பாதிக்கும் கோவிட்! இது தான் காரணமா?

Gowthami Subramani Updated:
கோவிட் தாக்கம்! விந்தணுக்களின் தரத்தைப் பாதிக்கும் கோவிட்! இது தான் காரணமா? Representative Image.

கொரோனா தொற்று, ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை எதிர்மறையாகப் பாதிக்கலாம் என AIIMS மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்த விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

கோவிட் தாக்கம்! விந்தணுக்களின் தரத்தைப் பாதிக்கும் கோவிட்! இது தான் காரணமா? Representative Image

கொரோனா தொற்று

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்த கொடிய நோய் கொரோனா தொற்று. இதன் உருமாறிய வைரஸின் தாக்கம் இன்றளவும் இருந்து கொண்டு தான் வருகிறது. அதன் படி, உருமாறிய வைரஸான SARS-CoV-2 என்ற வைரஸ் ஆனது, ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை எதிர்மறையாகப் பாதிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கோவிட் தாக்கம்! விந்தணுக்களின் தரத்தைப் பாதிக்கும் கோவிட்! இது தான் காரணமா? Representative Image

AIIMS தகவல்

இந்தியா முழுவதிலும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட விந்தணுக்களின் தரம் குறைவதாக ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர். இதில் அக்டோபர் 2020 முதல், ஏப்ரல் 2021 வரை எய்ம்ஸ் பாட்னா மருத்துவமனையில், கோவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட ஆண்களைத் (19 முதல் 45 வயதுக்குட்பட்ட) தேர்ந்தெடுத்து சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

கோவிட் தாக்கம்! விந்தணுக்களின் தரத்தைப் பாதிக்கும் கோவிட்! இது தான் காரணமா? Representative Image

விந்தணு சோதனை

இதில், முதலில் அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட விந்தணுக்கள் முதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் பிறகு, இரண்டாவது சோதனையானது 74 நாள்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், முதலில் நடந்த சோதனையில் விந்தணுவில் கொரோனாவின் பாதிப்பு இல்லை என்றாலும், அதன் எண்ணிக்கையும், இயக்கமும் குறைவாக இருந்துள்ளது. பிறகு இரண்டாவதாக நடத்தப்பட்ட சோதனையில், நேர்மாறாக விந்தணுக்களின் எண்ணிக்கையும், அதன் அளவு மற்றும் இயக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதுக் கண்டறியப்பட்டுள்ளது.

கோவிட் தாக்கம்! விந்தணுக்களின் தரத்தைப் பாதிக்கும் கோவிட்! இது தான் காரணமா? Representative Image

மோசமான தரத்தில் விந்தணு

இதன் முடிவுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிடுகையில், “ஆண்களிடம் இருந்து பெறப்பட்ட விந்துவில் SARS –CoV-2 நோய்த் தொற்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், இரண்டாவது மாதிரி எடுக்கப்படும் வரை விந்தணுக்களின் தரம் மோசமானதாகவே இருந்தது. அதன் படி, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்களின் விந்தணுவைப் பெறுவதிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்களைப் பரிசோதிக்கவும் வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்