Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நோய்களைத் தவிர்க்கும் முட்டைக்கோஸ்.! கிடைக்கும் பல்வேறு நன்மைகள்.!| Benefits of Cabbage

Gowthami Subramani Updated:
நோய்களைத் தவிர்க்கும் முட்டைக்கோஸ்.! கிடைக்கும் பல்வேறு நன்மைகள்.!| Benefits of CabbageRepresentative Image.

நாம் தினந்தோறும் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளில் பல்வேறு வித நன்மைகள் உள்ளன. ஆனால் நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய காய்கறிகளை ஒதுக்கி வைத்து விடுகிறோம். அதே சமயம் உடலுக்கு தீமை தரக்கூடியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வோம். அந்த வகையில், நோய்களைக் குறைக்கவும், உடலுக்குப் பல்வேறு வித நன்மைகளை ஏற்படுத்தவும் அமைவது முட்டைக்கோஸ் ஆகும். முட்டைக்கோஸை அதிகமாக விரும்புபவர்களும் உண்டு, அதிகமாக வெறுப்பவர்களும் உண்டு. ஆனால், முட்டைக்கோஸின் பயன்கள் குறித்து தெரிந்து கொள்வதும் அவசியம் ஆகும். இதில் முட்டைக்கோஸ் பயன்கள் பற்றி காண்போம்.

நோய்களைத் தவிர்க்கும் முட்டைக்கோஸ்.! கிடைக்கும் பல்வேறு நன்மைகள்.!| Benefits of CabbageRepresentative Image

ஆரோக்கியத்திற்கு

முட்டைக்கோஸின் அறிவியல் பெயர் Brassica Oleracea. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உடலில் பல்வேறு வித பிரச்சனைகளிலிருந்து நம்மைக் காக்கிறது. மேலும், இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. அது மட்டுமல்லாமல், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன. முட்டைக்கோஸ் சாப்பிடுவதன் மூலம், உடலில் செரிமானம் நன்றாக இருக்கும். மேலும், இது உடல் எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது.

நோய்களைத் தவிர்க்கும் முட்டைக்கோஸ்.! கிடைக்கும் பல்வேறு நன்மைகள்.!| Benefits of CabbageRepresentative Image

ஆன்டிபாடி

முட்டைக்கோஸில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பயன்படுகிறது. இதன் நோயெதிர்ப்பு சக்தி, நோய்த் தொற்றுக்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. முட்டைக்கோஸின் பல்வேறு நன்மைகள் குறித்து இதில் காண்போம்.

நோய்களைத் தவிர்க்கும் முட்டைக்கோஸ்.! கிடைக்கும் பல்வேறு நன்மைகள்.!| Benefits of CabbageRepresentative Image

உடல் எடை குறைய

முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின்கள், நார் பண்புகள், தாதுக்கள் போன்றவை காணப்படுகின்றன. முட்டைக்கோஸ் பசியிலிருந்து நம்மைக் காப்பாற்ற உதவும் காய்கறியாகவும் உள்ளது. அதாவது இது பசி எடுப்பதைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும்.

நோய்களைத் தவிர்க்கும் முட்டைக்கோஸ்.! கிடைக்கும் பல்வேறு நன்மைகள்.!| Benefits of CabbageRepresentative Image

சர்க்கரை நோயாளிகளுக்கு

முட்டைக்கோஸ் ஆனது, சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது. அதாவது முட்டைக்கோஸ் சாறு ஆண்டிஹைபர்கிளைசெமிக் என்ற விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இது குளுக்கோஸ் சகிப்புத் தன்மையை மேம்படுத்த உதவும். மேலும், இது உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

நோய்களைத் தவிர்க்கும் முட்டைக்கோஸ்.! கிடைக்கும் பல்வேறு நன்மைகள்.!| Benefits of CabbageRepresentative Image

இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு

முட்டைக்கோஸில், அந்தோசயனின் பாலிஃபீனால்கள் உள்ளது. இதன் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடுகள், உடலின் இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த செயல்பாட்டை அளிக்கிறது. அதாவது இதயத்தின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, அதனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

நோய்களைத் தவிர்க்கும் முட்டைக்கோஸ்.! கிடைக்கும் பல்வேறு நன்மைகள்.!| Benefits of CabbageRepresentative Image

செரிமானப் பிரச்சனைகளுக்கு

செரிமானப் பிரச்சனையால் அவதிப்படும் நபர்களுக்கு, சிறந்த மருந்தாக இருப்பது முட்டைக்கோஸ் ஆகும். இதனை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம், செரிமானம் சரியாக அமைவதாக உள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான செயல்முறையை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.

இது போன்ற பல்வேறு விதமான நன்மைகளை முட்டைக்கோஸ் அளிக்கிறது. எனவே, உடலில் உள்ள பிரச்சனைகளைக் குணப்படுத்து விதமாக அமையும் முட்டைக்கோஸை நம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்