Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உங்க கை, கால்களில் இந்த அறிகுறிலாம் இருக்கா..? அப்ப உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருக்கு..! | High Cholesterol Symptoms in Tamil

Gowthami Subramani Updated:
உங்க கை, கால்களில் இந்த அறிகுறிலாம் இருக்கா..? அப்ப உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருக்கு..! | High Cholesterol Symptoms in TamilRepresentative Image.

கொலஸ்ட்ரால் என்பது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படக்கூடிய மெழுகு, கொழுப்பு போன்ற பொருளாகும். உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் இது முக்கிய பங்காற்றுகிறது. இது இரன்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது HDL எனும் நல்ல கொலஸ்ட்ரால், LDL எனும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். அந்த வகையில், இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பின், அதனை உயர் கொலஸ்ட்ரால் என்று அழைக்கலாம்.

உங்க கை, கால்களில் இந்த அறிகுறிலாம் இருக்கா..? அப்ப உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருக்கு..! | High Cholesterol Symptoms in TamilRepresentative Image

உயிருக்குப் பாதிப்பு

இது போல, ஒருவரது இரத்தத்தில் அதிகமாக கெட்ட கொழுப்பு காணப்பட்டால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமையும். இவ்வாறு அதிக கெட்ட கொழுப்பைக் கொண்டவர்களுக்கு, ஒரு சில குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றும். இதனை அடிப்படையாகக் கொண்டு, நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, சரியான நேரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

உடலில் இந்த கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ஆர்ட்டரிகளில் சிறிது சிறிதாக கொழுப்பு சேகரித்து, ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். இது தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால், இதயத்தில் இருந்து வெளிவரும் மற்றும் உட்செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். இது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமையும்.

உங்க கை, கால்களில் இந்த அறிகுறிலாம் இருக்கா..? அப்ப உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருக்கு..! | High Cholesterol Symptoms in TamilRepresentative Image

கால்களில் அறிகுறி தோன்றுதல்

அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு பல்வேறு அறிகுறிகள் உள்ளது. அந்த வகையில், காலில் தோன்றக் கூடிய அறிகுறிகள் சமீபத்தில் கண்டறியப்பட்டது. நமது கால்கள் மற்றும் பாதங்களிலும் ஆர்ட்டரிகள் உள்ளன. எனவே, நம்முடைய உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கும் போது, ஆர்ட்டரிகளில் கொழுப்பு சேர்ந்து பெரிஃபெரல் ஆர்ட்டரி என்ற நோயை உருவாக்கும். இது ஒருவரது உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. மேலும், கால்களில் வலி, மரத்துப் போகும் தன்மை, காயம் பட்டால் சறாமல் இருப்பது, கால்களில் நிறம் மாறுவது, நகங்கள் உடைவது போன்றவை ஏற்படும். அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள், கால்களுக்கு அதிக வேலை கொடுத்தால் தீவிரமான வலி ஏற்படலாம்.

உங்க கை, கால்களில் இந்த அறிகுறிலாம் இருக்கா..? அப்ப உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருக்கு..! | High Cholesterol Symptoms in TamilRepresentative Image

கைகளில் வலி

கொழுப்புகள், தமனிகளின் உட்புறத்தில் குவிந்திருக்கும் போது கொழுப்புப் பொருள்கள், செல்லுலார் கழிவுப் பொருள்கள், ஃபைப்ரின் போன்றவற்றால் ஒரு கட்டி உருவாக்கப்படுகிறது. இவ்வாறு உருவாகும் கட்டியானது இரத்த ஓட்டத்தில் தடைகளை உருவாக்குகிறது. இதனால் பெருந்தமனி தடிப்பு அழற்சி ஏற்படும். இந்த சூழலில் கைகளில் வலி உண்டாகும். மேலும், தசை பிடிப்பு ஏற்படுவதுடன், மரத்துப் போகும் நிலை உன்டாகும்.

உங்க கை, கால்களில் இந்த அறிகுறிலாம் இருக்கா..? அப்ப உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருக்கு..! | High Cholesterol Symptoms in TamilRepresentative Image

கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் நோய் வராமல் தவிர்ப்பது எப்படி?

பொதுவாக, நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருள்களின் பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலம் கொலஸ்ட்ராலை குறைக்கலாம். அதில் மிக முக்கியமாகக் கூறப்படுவது, எண்ணெயில் பொறித்த உணவுகள், வறுத்த உணவுகள் குளிர்பானங்கள் போன்றவற்ரை முடிந்த வரை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

கொழுப்பு குறைவதற்கு, உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி என்பது முக்கியமானதாகும். உடற்பயிற்சி செய்யும் போது, இரத்த ஓட்டம் சீராகி அதன் தசைகள் வலுப்படும். இதன் மூலம் பல்வேறு நோய்களைத் தடுக்க முடியும். அதே சமயம், அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்வதும் அவசியமாகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்