Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

மறந்தும் சிவராத்திரி அன்று சிவனுக்கு இந்த உணவுகளை படைக்காதீர்கள்.! இல்லையெனில் பெரும் ஆபத்தை சந்திக்க நேரும்.

Gowthami Subramani Updated:
மறந்தும் சிவராத்திரி அன்று சிவனுக்கு இந்த உணவுகளை படைக்காதீர்கள்.! இல்லையெனில் பெரும் ஆபத்தை சந்திக்க நேரும்.Representative Image.

மகா சிவராத்திரி தினமானது, மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் சிறப்பான தினமாகும். இந்த தினத்தில் மக்கள் சிவபெருமானை கண் விழித்து நோன்பு இருந்து வழிபடுவர். கோடிக்கணக்கான பக்தர்கள் சிவபெருமானைத் தொழுது வணங்கி பல்வேறு பலன்களைப் பெறுவர். ஆனால், சிவனை வழிபடும் போது சரியான வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். அதன் படி, சிவபெருமானுக்கு படைக்க வேண்டியவற்றிலும் சரியான முறையைக் கையாள வேண்டும். மேலும், சிவபெருமானுக்கு படைக்கக் கூடாது என சில உள்ளன. அவ்வாறு சிவனுக்கு படையலாக வழங்கக் கூடாத உணவுப் பொருள்கள் பற்றி இதில் காணலாம்.
 

மறந்தும் சிவராத்திரி அன்று சிவனுக்கு இந்த உணவுகளை படைக்காதீர்கள்.! இல்லையெனில் பெரும் ஆபத்தை சந்திக்க நேரும்.Representative Image

மகா சிவராத்திரி விரதம்

சிவனின் மீது கொண்ட அதீத பக்தியினாலும், அவர் மீதுள்ள நம்பிக்கையினாலும் பக்தர்கள் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு பலன்களைப் பெறுவர். இந்த விரதத்தில் சிவனுக்கு படைக்கப்படும் உணவுப் பொருள்களும் அடங்கும். சிவனுக்குப் படைக்க வேண்டியவை என சில உள்ளன. முக்கியமாக, மகா சிவராத்திரி தினத்தன்று அசைவ உணவு எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது அவசியம். அதே போல, சிவபெருமானுக்குப் படைக்கக் கூடாத சில உணவுப் பொருள்களும் உள்ளன. அவற்றைப் பற்றித் தான் இங்கு பார்க்கப் போறோம்.
 

மறந்தும் சிவராத்திரி அன்று சிவனுக்கு இந்த உணவுகளை படைக்காதீர்கள்.! இல்லையெனில் பெரும் ஆபத்தை சந்திக்க நேரும்.Representative Image

தேங்காய் தண்ணீர்

பொதுவாக கடவுளுக்குத் தேங்காய் வைத்துப் படைப்பது வழக்கம். சிவனுக்கும் தேங்காய் வைத்து படையல் போடலாம். ஆனால், தேங்காய் நீரை சிவனுக்குப் படைக்கக் கூடாது எனக் கூறப்படுகிறது. ஏனெனில், சிவனுக்குப் படைத்தவற்றை நாம் குடிப்பது தவறு. இந்த காரணத்தினாலேயே தேங்காய் தண்ணீர் படைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 

மறந்தும் சிவராத்திரி அன்று சிவனுக்கு இந்த உணவுகளை படைக்காதீர்கள்.! இல்லையெனில் பெரும் ஆபத்தை சந்திக்க நேரும்.Representative Image

மஞ்சள்

மகா சிவராத்திரி தினத்தில், படைக்கக் கூடாத மற்றொன்று மஞ்சள் ஆகும். மஞ்சளை சிவனுக்கு வைத்துப் படைக்கக் கூடாது எனக் கூறுவர். ஏனெனில், மஞ்சளானது பெண்களின் அழகிற்காகப் பயன்படுத்தக் கூடியது. எனவே, சிவனுக்குப் படையலாக மஞ்சள் வைக்கக் கூடாது எனக் கூறுவர்.

மறந்தும் சிவராத்திரி அன்று சிவனுக்கு இந்த உணவுகளை படைக்காதீர்கள்.! இல்லையெனில் பெரும் ஆபத்தை சந்திக்க நேரும்.Representative Image

குங்குமம்

மனிதனாய் பிறந்தால் என்றாவது ஒரு நாள் அழிவு உண்டு. மனிதனாய் பிறந்து இறப்பது பாப விமோட்ஷனம் பெறுவதற்கு சமமாகும். இத்தகைய அருளை அதாவது அழிக்கும் சக்தியைக் கொண்ட கடவுளாக விளங்குபவர் சிவபெருமான். ஆனால், குங்குமமானது சிவப்பு நிறத்தில் இருப்பதால், இது அவரை மேலும் ஆக்ரோஷம் செய்து விடும். எனவே, தான் சிவன் கோவில்களில் குங்குமத்தைப் பிரசாதமாகத் தர மாட்டார்கள். அதே போலவே, குங்குமத்தை மகா சிவராத்திரியில் சிவனுக்குப் படைக்கவும் மாட்டார்கள்.
 

மறந்தும் சிவராத்திரி அன்று சிவனுக்கு இந்த உணவுகளை படைக்காதீர்கள்.! இல்லையெனில் பெரும் ஆபத்தை சந்திக்க நேரும்.Representative Image

துளசி

வீட்டின் சுற்றுப்புறத்தில் துளசி செடி வைப்பதன் மூலம், வீட்டிற்கு நன்மை தரும் எனக் கூறப்படுகிறது. ஆனால், சிவபுராணத்தின் படி சிவபெருமானுக்கு எந்த காரணத்தைக் கொண்டும் துளசியைப் படைக்கக் கூடாது எனக் கூறுவர். இதற்கு புராணத்தின் படி, தனி ஒரு வரலாறே உள்ளது. அதாவது, ஜலந்தர் என்ற அசுரனாலேயே, துளசி சிவனுக்கு ஆகாத மரமாக ஆனதாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே, சிவபெருமானுக்கு துளசி வைப்பதைத் தவிர்ப்பது முற்றிலும் நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்