Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மகா சிவராத்திரி விரதத்தில் சாப்பிட வேண்டிய சில உணவுகள் | Maha Shivaratri Foods to Eat

Gowthami Subramani Updated:
மகா சிவராத்திரி விரதத்தில் சாப்பிட வேண்டிய சில உணவுகள் | Maha Shivaratri Foods to Eat Representative Image.

மகா சிவராத்திரி விரதம் இருப்பதால், பல்வேறு வகையான பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். அவற்றில் நாம் கடைபிடிக்க வேண்டியவற்றில் நிறைய உள்ளன. விரதம் இருக்கும் போது, நாம் சில வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் ஆகும். இந்த மாதத்தில் நாம் சாப்பிட மற்றும் சாப்பிடக் கூடாத சில உணவுப் பொருள்கள் உள்ளன. மகா சிவராத்திரி தினமானது சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சிவபெருமானின் நினைவாகக் கொண்டாடப்படும் நிகழ்வு ஆகும். இந்த சிவராத்திரி விரதத்தில் விரதம் இருப்பவர்களுக்கு எந்நாளும் நீங்காத துன்பங்களும் விலகி நல்ல சிறப்பான நாளாக அமையும். சிவனின் மகா சிவராத்திரி விரதத்தை குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், முதியவர்கள் போன்றோர் கடைபிடிக்க வேண்டாம் எனவும் கூறப்படுகின்றனர்.
 

மகா சிவராத்திரி விரதத்தில் சாப்பிட வேண்டிய சில உணவுகள் | Maha Shivaratri Foods to Eat Representative Image

சிவராத்திரி உணவுகள்

சிவனின் சிறப்பம்சமாகக் கொண்டாடப்படும் சிவராத்திரி தினத்தில், நாம் அசைவ உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதே சமயம், விரதம் இருக்கும் போது குறிப்பிட்ட சில உணவுப் பொருள்களை உண்ணலாம். அதே போல, ஒரு சில உணவுப் பொருள்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இதில், சிவராத்திரி விரதத்தைக் கடைபிடிக்க நினைப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் போது உண்ணக் கூடிய சில உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.
 

மகா சிவராத்திரி விரதத்தில் சாப்பிட வேண்டிய சில உணவுகள் | Maha Shivaratri Foods to Eat Representative Image

பால் கலந்த இனிப்புகள்

பொதுவாக சிவபெருமானுக்கு பால் மிகவும் பிடிக்கும் ஒன்றாகும். எனவே, தான் சிவலிங்கத்திற்கு மாதந்தோறும் வரும் சிவராத்திரியில் பாலாபிஷேகம் செய்து வணங்குகிறார்கள். எனவே, மகா சிவராத்திரி தினத்தில் பால் மற்றும் பால் சார்ந்த பானங்கள் இரண்டுமே விரதத்தின் போது உண்ணப்படும் உணவு வகைகளாகும். அந்த வகையில், பாயாசம், பாதாம் கீர் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.
 

மகா சிவராத்திரி விரதத்தில் சாப்பிட வேண்டிய சில உணவுகள் | Maha Shivaratri Foods to Eat Representative Image

பழங்கள் மற்றும் உலர் பழங்கள்

பக்தர்கள் பால், தண்ணீர், பழங்கள் போன்ற உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வது சிறப்பைத் தரும். பொதுவாக, எந்த விரதம் மேற்கொள்ளும் போதும் இது போன்ற பால், பழங்கள், தண்ணீர் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வது சிறந்தது. பழங்களைத் தவிர, மற்ற உலர் பழங்களையும் சாப்பிடலாம். பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சம்பழம் போன்றவற்றை உண்ணலாம்.
 

மகா சிவராத்திரி விரதத்தில் சாப்பிட வேண்டிய சில உணவுகள் | Maha Shivaratri Foods to Eat Representative Image

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சார்ந்த உணவுகளை நாம் மகா சிவராத்திரி விரதத்தில் எடுத்துக் கொள்ளலாம். இதில், வெங்காயம், இஞ்சி, பூண்டு அல்லது மஞ்சள் போன்றவற்றைச் சேர்க்கக் கூடாது. இந்த விரதத்தில் கல் உப்பு சாப்பிடலாம். இந்த உருளைக்கிழங்கு கொண்டு ஆலு டிக்கி, இனிப்பு உருளைக்கிழங்கு சாட், ஆலு கிச்சடி போன்ற உருளைக்கிழங்கு கொண்டு செய்யக் கூடிய உணவுப் பொருள்களைச் சாப்பிடலாம்.
 

மகா சிவராத்திரி விரதத்தில் சாப்பிட வேண்டிய சில உணவுகள் | Maha Shivaratri Foods to Eat Representative Image

பக்கோடா, வடை

விரதம் இருக்கும் போது திண்பண்டங்களும் உண்ணலாம். அதன் படி, பச்சை வாழைப்பழ வடையை செய்து சாப்பிடலாம். மேலும், நோன்பு இருக்கும் போது மசாலாப் பொருள்கள் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஆனால், சீரகம் அல்லது சீரகப்பொடி, பச்சை ஏலக்காய், இலவங்கப்பட்டை, கருப்பு மிளகுத்தூள், போன்றவற்றைப் பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

மகா சிவராத்திரி விரதத்தில் சாப்பிட வேண்டிய சில உணவுகள் | Maha Shivaratri Foods to Eat Representative Image

தானியம் அல்லாத உணவுகள்

மரவள்ளிக்கிழங்கு, ராகி போன்றவற்றால் செய்யப்படக்கூடிய தானியம் அல்லாத உணவுகளும் இந்த மகா சிவராத்திரி விரதத்தின் போது அனுமதிக்கப்படுகின்றன. இதில், மரவள்ளிக்கிழங்கு வைத்து கிச்சடி, வடை உள்ளிட்டவையும் செய்யலாம். இந்த சிறப்பான நாளில் பக்தர்கள் தானியம் அல்லாத உணவு வகைகளை உண்ணலாம்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்