Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உஷார் மக்களே! கொரோனா போன்றே மற்றொரு வைரஸ்.. இதமட்டும் பண்ணிடாதீங்க.. | H3N2 Influenza Symptoms in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
உஷார் மக்களே! கொரோனா போன்றே மற்றொரு வைரஸ்.. இதமட்டும் பண்ணிடாதீங்க.. | H3N2 Influenza Symptoms in TamilRepresentative Image.

கொரோனா போன்றே உடல் பாதிப்புகளுடன் புதிய வகையான மர்ம காய்ச்சல் தமிழகத்தில் பரவத் தொடங்கியுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 [Influenza H3N2] என்ற வைரஸால் ஏற்படும் இந்த காய்ச்சல் சாதாரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல், மோசமானதாக உள்ளது. மருந்து எடுத்தாலும் குணமாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அறிகுறிகள் என்ன? எப்படி வருகிறது? காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம்.

இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 அறிகுறிகள்:

முக்கியமாக கடுமையான உடல் வலிதான் இதன் முக்கியமான அறிகுறி ஆகும். இந்த காய்ச்சலால் வரும் இருமல் மூன்று வாரங்கள் நீடிக்கும்.

  • ஓயாத இருமல்
  • சளி
  • அதிக காய்ச்சல்
  • கடும் உடல்வலி
  • தலைவலி
  • தும்மல்
  • மூக்கு அடைப்பு
  • தொண்டை புண்
  • கண்களில் நீர் வடிதல்
  • மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல்
உஷார் மக்களே! கொரோனா போன்றே மற்றொரு வைரஸ்.. இதமட்டும் பண்ணிடாதீங்க.. | H3N2 Influenza Symptoms in TamilRepresentative Image

இந்த காய்ச்சல் வந்தா என்ன செய்யணும்?

உங்களுக்கு மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி அது பாக்டீரியாவால் ஏற்பட்ட காய்ச்சலா, வைரஸ் காய்ச்சலா என்பதை பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

அதைவிட்டுவிட்டு, சொந்த வைத்தியம் செய்வது, ஆண்டிபாடிகளை எடுத்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். 

அதாவது, 'ஆன்டி பயாடிக்' மருந்தை எடுப்பதால் அந்த கிருமிகளுக்கு 'ஆன்டி பயாடிக்' மருந்தை எதிர்க்கும் ஆற்றல் சுலபமாக ஏற்பட்டுவிடும் வாய்ப்புள்ளது. 

உஷார் மக்களே! கொரோனா போன்றே மற்றொரு வைரஸ்.. இதமட்டும் பண்ணிடாதீங்க.. | H3N2 Influenza Symptoms in TamilRepresentative Image

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

  • இந்த வைரஸ் பரவலை தடுக்க அடிக்கடி கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். 
  • மாஸ்க் அணிந்து கொண்டே வெளியே செல்ல வேண்டும்.
  • முகம், வாய், மூக்கைத் தொடும் முன்பும் கைகளைக் கழுவ வேண்டும்.
  • இருமல் அல்லது தும்மும்போது வாயை மூடிக்கொள்ள மறக்காமல் மூடிக்கொள்ள வேண்டும்.
  • கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.
  • சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்