Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மூளையை தின்னும் வைரஸ்.. அறிகுறிகள் இப்படி தான் இருக்கும்.. | Brain Eating Amoeba Symptoms in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மூளையை தின்னும் வைரஸ்.. அறிகுறிகள் இப்படி தான் இருக்கும்.. | Brain Eating Amoeba Symptoms in TamilRepresentative Image.

உலகளவில் லட்சக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் சிக்கவைத்த கொரோனா தொற்றுநோயின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மற்றொரு புதிய வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்த புதிய வைரஸ் மனிதனின் மூளைக்கு சென்று மூளையை முழுவதுமாக அரித்து மரணத்தை ஏற்படுத்துகிறது. அது என்ன வைரஸ்? எப்படி பரவுகிறது? அறிகுறிகள் எப்படி இருக்கும்? என்பதை பற்றி பார்க்கலாம்.

மூளையை தின்னும் அமீபா:

மருத்துவ உலகில் பிரைன் ஈட்டிங் அமீபா என்று சொல்லப்படும் 'நாக்லேரியா பவ்லேரி அமீபா' தான் இந்த கொடிய தொற்றை ஏற்படுத்துகிறது. இந்த அமீபா மனித மூளையைக் தாக்கி உயிரை பறிக்கும் அளவிற்கு கொடியது. மேலும், இவை மனிதர்களை மட்டுமே பாதிக்கிறது. 

மூளையை தின்னும் வைரஸ்.. அறிகுறிகள் இப்படி தான் இருக்கும்.. | Brain Eating Amoeba Symptoms in TamilRepresentative Image

எப்படி பரவுகிறது?

இந்த வகை அமீபா நன்னீர் குளங்கள், ஏரிகள், குழாய் தண்ணீர், ஹீட்டர், ஆறுகள் ஆகியவற்றில் வாழும் தன்மைக் கொண்டது. இந்த அமீபா இருக்கும் தண்ணீரை நாம் பயன்படுத்தி மூக்கை சுத்தம் செய்யும்போதோ, உரியும்போதோ மூக்கு வழியாக உள் நுழைந்து மூளைக்கு சென்று மூளை திசுக்களை சேதப்படுத்தி அழிக்க கூடியது. 

முதன்முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

முதன்முதலில் 1937இல் அமெரிக்காவில் தான் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கில் தென் கொரியாவை சேர்ந்த 50வயதான ஒருவர் இறந்துள்ளார். இந்த வைரஸ் மனிதர்களால் பரவும் வாய்ப்பு குறைவு தான். இருந்தாலும், ஆறு, குளம், ஏரி, ஓடைகளை பயன்படுத்தும்போது மிக எளிதில் பரவக் கூடியது. 

மூளையை தின்னும் வைரஸ்.. அறிகுறிகள் இப்படி தான் இருக்கும்.. | Brain Eating Amoeba Symptoms in TamilRepresentative Image

அறிகுறிகள்:

இந்த அமீபாவால் துவங்கும் மூளை பாதிப்பின் அறிகுறிகள் 5 நாட்களிலேயே தெரிய துவங்கி விடுமாம். அதன்படி, முதலில் தலையின் முன்பகுதியில் கடுமையான வலி ஏற்படும். அதன்பிறகு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகிய அறிகுறிகள் தென்படுமாம்.

நோயின் தாக்கம் முற்றிப்போனால் கவனசிதறல், இறுக்கமான கழுத்துப்பகுதி, குழப்பம், பதட்டம், வலிப்பு, பிரம்மை, கோமா ஆகியவை கூட ஏற்படும். 

இது அரிதான நோய்தொற்று என்பதால் இதற்கென்று தனியாக மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பிற நோய்களுக்கான மருந்துகளே சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மூளையை தின்னும் வைரஸ்.. அறிகுறிகள் இப்படி தான் இருக்கும்.. | Brain Eating Amoeba Symptoms in TamilRepresentative Image

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

இந்த நோய் தொற்று பரவாமல் இருக்க வடிகட்டிய நீரையே குடிக்க வேண்டும். 

ஏதாவது காரணத்தால் நேரடியாக குழாய் தண்ணீரை குடிக்க வேண்டி வந்தால், அதை குறைந்தபட்சம் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து குடிக்கவும்.

கொதிக்க வைப்பதால் பச்சைத் தண்ணீரில் இருக்கும் கிருமிகள் முற்றிலும் இறந்துவிடும், அதன் பிறகு, அதை ஆறவைத்து குடிக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்