Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,086.15
-402.84sensex(-0.56%)
நிஃப்டி21,868.60
-127.25sensex(-0.58%)
USD
81.57
Exclusive

ஹெட்செட் பயன்படுத்துவதனால் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதா?

Vaishnavi Subramani Updated:
ஹெட்செட் பயன்படுத்துவதனால் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதா?Representative Image.

நம்மில் பலரும் ஹெட்செட் பயன்படுத்துவது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாட்டுக்கேட்பதற்கும் மற்றும் கேம் விளையாடுவதற்கும் மற்றும் பல செயலிகள் உபயோகிப்பதற்கும் ஹெட்செட் பயன்படுத்துகின்றார்கள். அதனால் செவித்திறனின் அளவு குறையும். ஹெட்செட் மட்டும் இல்லாமல் பல தீயைப் பழக்கங்களால் செவித்திறன் பாதிக்கப்படுகிறது. எந்த பழக்கங்கள் செவிகளுக்குப் பிரச்சனைகள் ஏற்படுத்தும் மற்றும் அதை எப்படிச் சரிசெய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஹெட்செட் பயன்படுத்துவதனால் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதா?Representative Image

புகைப்பிடிப்பதால் செவிகளில் ஏற்படும் பாதிப்புகள்

✤ புகைப்பிடிப்பது என்பது ஒரு தீயைப் பழக்கம். அதிலும் அதிகளவில் புகைப்பிடித்தால் இருதயம் மற்றும் நுரையீரலில் பாதிக்கப்படுகிறது.

✤ இதனால் செவிப் பகுதிகள் விரைவில் பாதிக்கப்படும். அதனால் புகைப்பிடிப்பதை தவிர்ப்பது நல்லது. இது புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் அதைச் சுவாசிக்கும் நபர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்பது தான் மிகவும் வருத்தக்கூடிய ஒன்று.

✤ அதனால் புகைப்பிடிப்பதை தவிர்க்கவும். இதனைச் செய்வதால் நமக்கும் மற்றும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நன்மை தரும்.

ஹெட்செட் பயன்படுத்துவதனால் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதா?Representative Image

ஹெட்செட் பயன்படுத்துவதால் செவிகளில் ஏற்படும் பாதிப்புகள்

✤ ஹெட்செட் பயன்படுத்தும் போது அதிகளவில் சத்தம் வைத்துப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதிகளவில் சத்தம் வைத்துக் கேட்பதால் தலை மற்றும் செவியில் வலிகள் ஏற்பட்டு விரைவில் செவிப்பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் ஹெட்செட்டில் இரைச்சல் ரத்து செய்யும் ஹெட்செட்டை பயன்படுத்துவது நன்மை மற்றும் குறைவாகச் சத்தம் வைத்துக் கேட்பது நல்லது. ஹெட்செட்டை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

 

ஹெட்செட் பயன்படுத்துவதனால் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதா?Representative Image

இருதய பிரச்சனையால் செவியில் பாதிப்புகள் ஏற்படுமா?

✤ ஒவ்வொரு மனிதருக்கும் உடலில் இருதயம் என்பது முக்கியமான ஒன்று. அதனை பரிசோதனை செய்வது அவசியம். இருதயம் மற்றும் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் செவியில் பிரச்சனைகள் ஏற்படும். கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருந்தாலும் செவியில் பல்வேறு வகையில் பாதிப்புகள் ஏற்படும். அதனால் உடலை பரிசோதனை செய்வது நல்லது.

ஹெட்செட் பயன்படுத்துவதனால் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதா?Representative Image

ஒலியினால் பல வகையான பாதிப்புகள் செவித்திறனில் ஏற்படுகிறது

✤ ஒலி மாசு என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதிலும் கிரமப்புரங்களை விட நகரங்களில் கூடுதலாக உள்ளது. அதைத் தவிர்ப்பது என்பது கடினம். அதனால் ஒலி மாசு என்பது அதிகமாக இருந்தால் அந்த சமயத்தில் மட்டும் ஹெட்செட் வெறுமனேப் பயன்படுத்தலாம்.           

✤ அதிகமாகவும் ஹெட்செட்ப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக அனைவரும் ஹெட்ஃபோன்னை பயன்படுத்தி பாட்டுக் கேட்பது வழக்கமாக மாறுகிறது. அதைத் தவிர்க்க வேண்டும். ஒலி மாசுகள் குறைப்பதற்காக ஹெட்ஃபோன் அல்லது ஹெட்செட் வெறுமனே காதுகளில் பெறுத்தி கொள்ளவும். இதனால் காதுகளில் ஒலிமாசு மிகவும் குறைவாக மாறும்.

ஹெட்செட் பயன்படுத்துவதனால் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதா?Representative Image

உடற்பயிற்சியினால் செவித்திறனை மேம்படுத்தலாமா?

✤ உடற்பயிற்சி செய்வதால் உடலில் ரத்த ஒட்டம் ஆனது மிகவும் சீராகப் பாயும். அதனால் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் கூட அது தினத்தேறும் செய்யும் உடற்பயிற்சியினால்  விரைவில் குணமாகும். ரத்த ஒட்டம் உடலில் சீராகச் செல்லவில்லை என்றால் காதுகளில் பாதிப்புகள் ஏற்படும். அதைச் சரிசெய்வதற்குத் தினமும் உடற்பயிற்சி செய்வதால் செவியின் பாதிப்புகள் விரைவில் குணமாகும்.

ஹெட்செட் பயன்படுத்துவதனால் இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதா?Representative Image

✤ காதுகளின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதை எந்த விதமான பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமானவை. அதனால் காதுகள் வலிகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக காதுகளை பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்