Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கர்ப்பக்காலத்தில் நிம்மதியான தூக்கத்திற்கு இத பண்ணுங்க.. | How to Sleep During Pregnancy in Tamil

Nandhinipriya Ganeshan March 30, 2022 & 17:36 [IST]
கர்ப்பக்காலத்தில் நிம்மதியான தூக்கத்திற்கு இத பண்ணுங்க.. | How to Sleep During Pregnancy in TamilRepresentative Image.

Health Tips for Pregnant Women: கர்ப்ப காலம் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான தருணமாகும். அதேசமயத்தில் ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பக்காலத்தில் கோபம், பயம், பதற்றம், மனஅழுத்தம், குழப்பம் போன்ற உணர்வுகள் ஏற்படுவது வழக்கம். அதேபோல சீரான தூக்கம் கிடைப்பதும் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. கர்ப்பக்காலத்தில் நிம்மதியான தூக்கத்திற்கு என்ன செய்யலாம், எப்படி படுக்கலாம் என்பது பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கர்ப்பக்காலத்தில் நிம்மதியான தூக்கத்திற்கு இத பண்ணுங்க.. | How to Sleep During Pregnancy in TamilRepresentative Image

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பிணி பெண்கள் தூங்குவதற்கு ரொம்பவே சிரமப்படுவார்கள். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து எப்படி ரொம்ப முக்கியமானதாக இருக்கிறதோ அதே போன்று ஓய்வும் அவ்வளவு முக்கியம். இரவில் நிம்மதியான தூக்கம் பெற வேண்டும் என்றால் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்துவிட வேண்டும். அப்போதுதான் செரிமான கோளாறுகள், நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படாமல் இருக்கும்.

கர்ப்பக்காலத்தில் நிம்மதியான தூக்கத்திற்கு இத பண்ணுங்க.. | How to Sleep During Pregnancy in TamilRepresentative Image

தினமும் இரவு உணவு சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். வேகமாக நடக்க வேண்டாம். அதன்பிறகு, வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு காற்றோட்டமான ஆடைகளை (நைட்டி, நைட் ஷூட்) அணிந்துகொள்ளலாம். 2 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடுவதால் லேசாக பசி எடுக்கும். அதனால், இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடிக்கலாம். அதற்குபின் எப்போது தூக்கம் வருகிறதோ அப்போது சிறுநீர் கழித்துவிட்டு படுக்க வேண்டும்.

கர்ப்பக்காலத்தில் நிம்மதியான தூக்கத்திற்கு இத பண்ணுங்க.. | How to Sleep During Pregnancy in TamilRepresentative Image

படுத்தபிறகு அதிகம் தண்ணீர் குடிக்க கூடாது. கர்ப்பிணி பெண்கள் மெத்தை மீதுதான் படுக்க வேண்டும் என்றில்லை, கீழே பாய்விரித்தும் கூட படுக்கலாம். உண்மையில் சொன்னால் அவ்வாறு படுப்பதுதான் நல்லதும் கூட. அப்படி பாயில் படுக்க விரும்பினால் இரண்டு பெட்ஷீட் போட்டு அதன் பிறகு படுக்க வேண்டும். ஆனால், எங்கு படுத்தாலும் உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாதவாறு படுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பக்காலத்தில் பயன்படுத்துவற்கு தனியாக தலையணைகள் கடைகளில் கிடைக்கிறது. அதை வைத்து படுக்க பழகிக்கொள்ளுங்கள் (early pregnancy care tips). கர்ப்பக்காலத்தில் ஒரு சிலருக்கு கால், கைகளில் வீக்கம் ஏற்படும். காலில் தலையணை வைத்து உறங்கினால் கால் வீக்கம் குறையும்.

கர்ப்பக்காலத்தில் நிம்மதியான தூக்கத்திற்கு இத பண்ணுங்க.. | How to Sleep During Pregnancy in TamilRepresentative Image

கர்ப்பிணி பெண்கள் எப்போது இடது பக்கம் படுப்பது நல்லது. எல்லா நேரங்களிலும் இடது பக்கமே படுக்க முடியவில்லை என்றால், சிறிது நேரம் வலதுபக்கம் திரும்பி படுக்கலாம். ஆனால், அப்படியே படுக்கையில் இருந்து திரும்பாமல் எழுந்து உட்கார்ந்து பிறகு திரும்பி படுக்க வேண்டும். இதை எப்பவும் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல், 2வது ட்ரைமெஸ்டர் காலத்துக்கு (pregnancy care tips in tamil) பிறகு கர்ப்பிணி மல்லாந்து படுக்க கூடாது. ஏனெனில், அப்படி படுக்கும்போது கர்ப்பப்பை ரத்தக்குழாய்களை அழுத்துவதால் போதுமான ரத்த ஓட்டம் சீராக கிடைக்காமல் மூச்சுதிணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு சிலர் கருவுற்ற முதல் மாதங்களில் பழக்கதோஷத்தில் குப்புறப்படுப்பதும் உண்டு ஆனால் அவ்வாறு கூடாது.

பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்