Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹெல்மெட் பயன்படுத்துவதால் ஏற்படும் முடி உதிர்வைத் தவிர்ப்பது எப்படி ?

Vaishnavi Subramani Updated:
ஹெல்மெட் பயன்படுத்துவதால் ஏற்படும் முடி உதிர்வைத் தவிர்ப்பது எப்படி ?Representative Image.

ஹெல்மெட் பயன்படுத்துவது என்பது ஆண்கள் பெரும்பாலும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது வழக்கம். ஆனால் இப்பொழுது ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வண்டிகள் அதிகமாக ஓட்டுகிறார்கள். அதனால் ஹெல்மெட் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதால் முடி உதிர்வில் ஆரம்பித்து வறண்ட கேசம் மற்றும் அதிகளவில் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் வரும்.

“தலைக்கவசம் நமது உயிர்க் கவசம்” என்பதால் அது மிகவும் முக்கியமான ஒன்று அதைத் தவிர்க்க முடியாது. அதனால் ஹெல்மெட் பயன்படுத்துவதனால் முடியில் ஏற்படும் பிரச்சனைகளைச் சரிசெய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஹெல்மெட் பயன்படுத்துவதால் ஏற்படும் முடி உதிர்வைத் தவிர்ப்பது எப்படி ?Representative Image

ஹெல்மெட் பயன்படுத்துவதனால் ஏற்படும் முடி உதிர்வை தவிர்ப்பது

✤ ஹெல்மெட் பெண்கள் பயன்படுத்தும் போது “ஹார்ஸ்டால்” என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷியம். நீங்கள் முடியை முழுவதுமாக விரித்துவிட்டால் மற்றும் டைட்டாக போனிடெய்ல், பின்னல் இது போன்ற ஹார்ஸ்டால் செய்தால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.

✤ அதற்குப் பதிலாக அனைத்து முடிகளையும் சேர்த்து ஹார் பேண்ட் போட்டுவதால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம்.

✤ பெண்கள் முடியில் எண்ணெய் மற்றும் பொடுகு போன்றவை இருந்தால் அது  ஹெல்மெட்டில் ஓட்டாமல் இருப்பதற்கு, ஒரு காட்டன் துணியை எடுத்து தலையில் கட்டிக்கொண்ட பின், ஹெல்மெட் அணியலாம். இதனால் தலையிலிருந்து வரும் வியர்வை துணியில் உறிஞ்சு கொள்ளும்.

ஹெல்மெட் பயன்படுத்துவதால் ஏற்படும் முடி உதிர்வைத் தவிர்ப்பது எப்படி ?Representative Image

✤ ஹெல்மெட் பயன்படுத்து போது நமது கேசத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இருந்தால் மட்டும் தான் ஹெல்மேட்டினால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க முடியும்.

✤ ஹெல்மெட் வைக்கும் இடம் என்பது மிகவும் முக்கியம். காற்றோட்டம் இல்லாதா இடத்தில் வைத்தால் அதில் கிருமிகள் மற்றும் அழுக்குகள் சேரும் அதனால் அதைக் காற்றோட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் வைப்பது என்பது மிகவும் முக்கியம்.

✤ ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது ஹெல்மெட் சுத்தம் செய்யவேண்டும். அதை சானிடைசர் அல்லது கடைகளில் விற்கும் டிஸின்ஃபெக்டண்ட் கொண்டும் சுத்தம் செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்