Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி | Hair straightening at home

Vaishnavi Subramani Updated:
வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி | Hair straightening at home  Representative Image.

பலரும் தலை முடிக்கு அதிகமாகக் கவனம் செலுத்துகிறார்கள். குறிப்பாகப் பெண்கள் அதிகமாக ஹேர் ஸ்ட்ரெய்டனிங் மற்றும் ஹேர் கலரிங் செய்வது என முடியை மிகவும் அழகாக வைத்து கொள்கிறார்கள். பலரும் வாரம் அல்லது மாதம் ஒரு முறையாவது பியூட்டி பார்லர் சென்று ஹேர் கட் மற்றும் ஹேர் கலர், ஹேர் ஸ்ட்ரெய்டனிங், ஹேர் வாஷ் என அனைத்தும் செய்கிறார்கள்.

அதற்குப் பணம் அதிகமாகத் தேவைப்படும். அப்படிச்செய்தாலும் சில நாட்களில் அது செய்த அடையாளம் இல்லாமல் பழையபடி மாறும். மீண்டும் பியூட்டி பார்லர் சென்றால் அதற்கு அதிகமாகச் செலவு ஆகும். எந்த செலவும் இல்லாமல் வீட்டிலேயே ஸ்ட்ரெய்ட்னிங் செய்தால் எப்படி இருக்கும். இந்த பதிவில் வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி | Hair straightening at home  Representative Image

ஹேர் ஸ்ட்ரெய்டனிங்

✤ இதில் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் வீட்டிலேயே இரண்டு முறை மூலம் செய்யலாம். முதல் முறையில் அரிசிமாவு மற்றும் இரண்டாம் முறையில் முட்டை வைத்து இந்த ஹேர் ஸ்ட்ரெய்டனிங் எளிதில் செய்யலாம்.

✤ முட்டை என்பது இயற்கையாகவே முடிக்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு பொருள். அத்துடன் முல்தானி மட்டி என்பது முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். முகத்திற்கு இது பயன்படுத்துவார்கள். முடிக்கும் இது பயன்படுத்தலாம்.

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி | Hair straightening at home  Representative Image

முதல் முறை

✤ இந்த முறையில் அரிசி மாவு மற்றும் முல்தானி மட்டி வைத்து ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

✤ அரிசி மாவு – 5 டிஸ்பூன்

✤ முல்தானி மட்டி – 1 கப்

✤ முட்டை- 2

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி | Hair straightening at home  Representative Image

செய்முறை

✤ முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று முட்டையை உடைத்து அதில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

✤ அதில் ஐந்து டிஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்க்க வேண்டும். அத்துடன் ஒரு கப் அளவிற்கு முல்தானி மட்டி சேர்த்து நன்றாகக் கலக்கவேண்டும்.

✤ அந்த பேஸ்ட் முடி அடர்த்திக்கு ஏற்றவாறு கலக்கிக் கொள்ளவேண்டும். அதை முடியின் அடி வேரிலிருந்து முடியின் நுனி வரை நன்றாகத் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி | Hair straightening at home  Representative Image

✤ அதை ஐந்து நிமிடங்கள் விட்டு, அதற்குப் பிறகு, பெரிய பற்கள் உள்ள சீப்பில் நேராகச் சீவி விடவேண்டும். அதைச் செய்வதால் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் ஆகும்.

✤ அதனை அப்படி ஒரு 10 முதல் 20 நிமிடங்கள் உலரவிடவேண்டும். அதற்குப் பின், சூடான மற்றும் வெதுவெதுப்பான நீரில் தலையை நன்றாகக் கழுவ வேண்டும். அதற்குப் பின், தலையில் பெரிய பற்கள் உள்ள சீப்பில் சீவ வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி | Hair straightening at home  Representative Image

இரண்டாம் முறை

✤ இந்த முறையில் முல்தானி மட்டி மற்றும் முட்டை பயன்படுத்தி வீட்டிலேயே எப்படி ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

✤ முட்டை – 2

✤ முல்தானி மட்டி – 2கப்

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி | Hair straightening at home  Representative Image

செய்முறை

✤ முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை உடைத்து அதில் உள்ள வெள்ளை கருவை மட்டும் தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.

✤ அத்துடன் இரண்டு கப் அளவிற்கு முல்தானி மட்டியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாக பேஸ்ட் போல் கலக்க வேண்டும்.

✤ முடியின் அடர்த்தியை வைத்து தேவையான அளவிற்கு பேஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாகத் தேவைப்பட்டால் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி | Hair straightening at home  Representative Image

✤ அந்த பேஸ்டை தலையில் நன்றாகத் தடவ வேண்டும். அதை அப்படியே 10 முதல் 15 நிமிடங்கள் உலர விடவேண்டும்.

✤ அதன் பின், சூடான மற்றும் வெதுவெதுப்பான நீரில் தலையைக் கழுவ வேண்டும். கழுவிய பின், பெரிய பற்கள் உள்ள சீப்பில் தலை முடிகளைச் சீவினால் பார்ப்பதற்கு ஹேர் ஸ்ட்ரெய்டனிங் ஆக இருக்கும். இதை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால் போதும்.

✤ இந்த இரண்டு முறை மூலம் பியூட்டி பார்லர் செல்லாமல் வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்டனிங் எளிதில் செய்யலாம். இதனால் முடிக்கு ஏற்படும் பயன்களைப் பற்றிப் பார்க்கலாம்.

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி | Hair straightening at home  Representative Image

முடிக்கு ஏற்படும் பயன்கள்

✤ இந்த முறையால் முடிக்கு ஏற்படும் பயன்பாடுகளைப் பற்றிப் பார்க்கலாம்.

முட்டை

✤ முட்டை என்பது இயற்கையாகவே ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. அதை முடிக்குப் பயன்படுத்தும் போது முடியின் வளர்ச்சி மற்றும் அதன் ஊட்டச்சத்து மிகவும் அதிகமாகும். இதனால் தலை முடியின் வளர்ச்சி அதிகமாகவும் மற்றும் வறட்சி தன்மை நீங்கி ஈரப்பதம் தன்மை உள்ளவையாக மாறும்.

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி | Hair straightening at home  Representative Image

முல்தானி மட்டி

✤ முல்தானி மட்டி என்பது அழுக்குகள் நீக்கவும் மற்றும் முகத்தை அழகாக வைக்கவும். ஊட்டசத்துமிக்கவையாக மாறுவதற்கு உதவியாக இருக்கும். இதை முடிக்குப் பயன்படுத்தும் போது ஊட்டசத்துமிக்கவையாக மாறும்.

✤ முல்தானி மட்டி முடி வளர்ச்சிக்கும் மற்றும் முடி உதிர்விலிருந்து குறைக்கவும் உதவும். முடியில் பொடுகுகள் வராமல் மட்டும் பொடுகுகள் இருந்தால் எளிதில் இது சரிசெய்யும்.

 

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி | Hair straightening at home  Representative Image

✤ இது தலையின் வேரிலிருந்து முடி வரை தடவுவதால் அது முடியில் மற்றும் உச்சந்தலையில் இரத்தை ஓட்டத்தைச் சீராக மாறும்.

✤ முல்தானி மட்டியில் மினரல் அதிகமாக உள்ளதால் அது தலை முடியில் உள்ள அழுக்குகள் மற்றும் பொடுகுகளை சுத்தம் செய்யும். இந்த முல்தானி மட்டியில் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்வதால் முடியில் சேதம் குறைவாகத் தான் இருக்கும்.

✤ இது முடியில் உள்ள எண்ணெய் தன்மையைத் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் நீரேற்றம் நன்றாக இருக்கும். இதன் மூலம் வீட்டிலேயே முல்தானி மட்டியைப் பயன்படுத்தி ஹேர் ஸ்ட்ரெய்டனிங் எளிதில் செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்