Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அம்மை தழும்புகளை நீக்குவது எப்படி ?

Vaishnavi Subramani Updated:
அம்மை தழும்புகளை நீக்குவது எப்படி ?Representative Image.

பலருக்கும் சிறுவயதில் மற்றும் அன்மையில் அம்மை வந்திருக்கும் அதனால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் வடுக்கள் முகத்தில்  இருக்கும். அதை எப்படிச் சரிசெய்வது என யோசிக்கிறீங்களா. அம்மையில் ஏற்பட்ட தழும்புகள் அதிகளவில் முகத்தில் வடுக்களாக மற்றும் தழும்புகளாகவும் இருக்கும் அதை எப்படிச்  சரிசெய்வது என நினைக்கிறீர்களா. இந்த பதிவில் அம்மையால் ஏற்பட்ட தழும்புகளை நீக்குவதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அம்மை தழும்புகளை நீக்குவது எப்படி ?Representative Image

சருமத்தில் ஏற்பட்ட தழும்புகள்

✤  முதலில் உங்கள் முகத்தில் ஏற்பட்ட தழும்புகளின் அளவு மற்றும் அந்த தழும்பின் ஆழத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அதை வைத்துத் தான் எந்த சிகிச்சை செய்தால் சரியாக இருக்கும் என முடிவு செய்ய வேண்டும்.

✤  சிறுவயதில் அம்மை தழும்புகள் என்றால் அந்த தழும்புகளின் ஆழம் மிகவும் அதிகமாக இருந்தால் அதற்கு இந்த க்ரீம் அப்ளை செய்தால் மூன்று மாதத்தில் சரியாகும் எனச் சொன்னால் அது தவறு.

✤  ஆழம் அதிகமாக இருந்தால் அதற்குத் தனியாகக் கடைகளில் விற்கும் க்ரீமை வாங்கி பயன்படுத்துவது என்பது தவறான ஒன்று. அப்படிச் செய்தால் அது சரியாகாது. அப்படி இருந்தால் முதலில் மருத்துவரை அணுக வேண்டும்.

✤  அவர்கள் தழும்பின் ஆழத்தை ஸ்கேன் செய்து எந்த அளவிற்கு ஆழமாக உள்ளது எனப் பார்த்து அதற்கு ஏற்ற சிகிச்சை செய்வார்கள்.

✤  அந்த தழும்புகளின் ஆழம் மிகவும் அதிகமாக இருந்தால் லேசர் மற்றும் மைக்ரோ நீட்லிங், ஃபில்லர்ஸ் போன்ற பல உள்ளது.

✤  இதில் அம்மை தழும்புகளின் ஆழத்தைப் பற்றி நன்றாக பரிசோதனை செய்து அதன் பின், மருத்துவர் எந்த சிகிச்சை செய்யவேண்டும் என முடிவு செய்வார்கள்.

அம்மை தழும்புகளை நீக்குவது எப்படி ?Representative Image

முகத்தில் ஏற்பட்ட அம்மை தழும்புகளின் சிகிச்சை

✤  உங்களுக்கு அன்மையில் அம்மையால் ஏற்பட்ட தழும்புகள் சிறியதாகவும் மற்றும் முகத்தில் சிறியதாக இருந்தால் மட்டும் கடைகளில் விற்கும் க்ரீமை வாங்கி பயன்படுத்தலாம்.

✤  அந்த தழும்புகளின் ஆழம் மிகவும் அதிகமாகவும் மற்றும் முகத்தில் அதிகமாக இருந்த தோல் சார்ந்த மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

அம்மை தழும்புகளை நீக்குவது எப்படி ?Representative Image

இயற்கை முறையில் அம்மையால் ஏற்பட்ட தழும்புகளை நீக்குவது எப்படி

தேவையான பொருள்கள்

✤  மஞ்சள் – 1 துண்டு  (கட்டி மஞ்சள்)

✤  கறிவேப்பிலை – 10 இலைகள்

✤  கசகசா – சிறிதளவு

✤  பாசிப்பருப்பு  - அரைகப்

அம்மை தழும்புகளை நீக்குவது எப்படி ?Representative Image

✤  முதலில் உரலில் சிறிதளவு கசகசா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.

✤  துண்டு மஞ்சளைச் சிறிது சிறிதாக உடைத்து அதில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதை முழுவதுமாக அரைத்து பத்து போடும் பதத்திற்கு வரும் வரை இடித்துக் கொள்ள வேண்டும்.

✤  முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். அதன் பின், முகத்தில் ஏற்பட்ட தழும்புகளில் அந்த அரைத்த கலவையைத் தடவ வேண்டும். அதை அப்படியே 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

✤  அதன் பின், அரை கப் அளவிற்குப் பாசிப்பருப்பு எடுத்து அதை மிக்ஸி, ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.அதைத் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.

✤  அந்த தண்ணீரைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பதிலாக பயத்த மாவு அல்லது கடலை மாவும் பயன்படுத்தலாம். இதை வாரத்தில் மூன்று நாட்கள் செய்தால் விரைவில் தழும்புகள் சரியாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்