Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,863.26
10.32sensex(0.01%)
நிஃப்டி22,401.30
-1.10sensex(-0.00%)
USD
81.57
Exclusive

ஜிம்மை தேர்வுசெய்வது எப்படி| How to select gym

Vaishnavi Subramani Updated:
ஜிம்மை தேர்வுசெய்வது எப்படி| How to select gymRepresentative Image.

ஜிம் என்றால் ஆண்கள் மட்டும் பயிற்சி செய்யும் இடம் என நினைத்தால் இப்பொழுது ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் பயிற்சி செய்கிறார்கள். அதனால் ஜிம் பல இடங்களில் ஆரம்பித்துவிட்டனர். அதில் எந்த ஜிம் நமக்கு சரியாக இருக்கும் என தேர்வுசெய்வது என்பது பலரும் யேசிக்கிறார்கள். ஜிம் பல வகைகள் உள்ளது. அதில் எந்த ஜிம் நமக்குப் பொருத்தமாகவும் பயிற்சி செய்வதற்கு எளிதாகவும் மற்றும் பல வசதிகளுடன் இருக்கும் ஜிம்மை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 

ஜிம்மை தேர்வுசெய்வது எப்படி| How to select gymRepresentative Image

ஜிம்மை தேர்வுசெய்யும் வழிமுறைகள்

✤ நீங்கள் ஜிம்மை முதன்முதலாகச் சேர்ந்துபயிற்சி செய்பவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்குத் மிகவும் உதவியாக இருக்கும்.

✤ நீங்கள் உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் ஜிம்மை அணுகுங்கள்.ஏன் என்றால் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் ஜிம்மை தேர்வுசெய்தால் அந்த ஜிம்மிற்கு போக்குவரத்தில் சிக்கல் ஏற்றப்பட வாய்ப்புகள் அதிகம்.

✤ அந்த ஜிம்மில் உங்கள் எடையைக் குறைக்கும் கருவிகள் உள்ளதா என உறுதிசெய்துகொள்ளுங்கள். ஒருமாதத்திற்குத் தேவையான பணம் செலுத்தும் முன்பு இதைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

✤ முதலில் நீங்கள் ஜிம்மில் சேர்வதற்கு முன், அவர்களிடன் ஜிம்மில் சமந்தமான அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்து தெளிவிப் பெற்ற பிறகு ஜிம்மில் சேருங்கள்.

ஜிம்மை தேர்வுசெய்வது எப்படி| How to select gymRepresentative Image

✤ ஒரு வருடத்திற்க்கான பணம்  மிகவும் குறைவாக உள்ளது என உடனடியாக முழுவதுமாக செலுத்தவேண்டாம். சேர்ந்து ஒருமாதத்திற்குப் பிறகு, உங்களுக்கு அந்த ஜிம் பிடிக்கவில்லை என்றாலும், உங்களுக்குச் செல்வதற்கு ஆர்வம் இல்லாமல் இருந்தாலும் கூட நீங்கள் செலுத்திய பணம் திரும்பப் பெற முடியாது.

✤ உறுதி வார்த்தைகள் பேசுவார்கள் “எங்கள் ஜிம்மில் சேர்ந்தால் உங்கள் எடை மூன்று மாதத்தில் குறைக்க முடியும்” எனப் பல உறுதி வார்த்தைகளை பார்த்து நீங்கள் சேர்வதைத் தவிர்க்கவும்.

✤ ஒருவரின் எடை மற்றும் உடல் அமைப்பு,உடற்பயிற்சி செய்யும் விதம் போன்றவற்றை வைத்து அதை முடிவு செய்யவேண்டும். ஆனால் பொதுவாக வாக்குறுதி அளித்தால் அதைப் பற்றி நன்றாக யோசித்துச் சேருங்கள்.

✤ நீங்கள் ஜிம்மில் சேர்வது என்பதில் உறுதியாக இருந்தால் நீங்கள் தினமும் காலையில் எழும்போது இன்றைக்கு நான் ஜிம்மிக்கு செல்வேன் என உறுதியாக இலக்கு செட் செய்து செல்லவும்.

✤  நீங்கள் தனியாக செல்லாமல் பல வருடங்களாக ஜிம் செல்லும் ஒரு குழுவுடன் சேர்ந்து சென்றால் அவர்கள் செல்வதைப் பார்த்து நீங்களும் பயிற்சி செய்ய வேண்டும் என நினைவிற்கு வரும்.

✤ நீங்கள் ஜிம்மில் சேர்ந்ததும் அனைத்து கருவிகளைப் பயன்படுத்தலாம் என நினைக்காமல் உங்கள் எடைக் குறைவதற்கு எந்த கருவி பயன்படுத்த வேண்டுமே அதை மட்டும் பயிற்சி செய்யவும்.

✤ஒருமாதம் ஒருஜிம் அடுத்தமாதம் வேறுஒரு ஜிம் எனமாறமால் தொடர்ச்சியாக ஒரு ஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடல் எடைக்குறையும்.

✤ உடற்பயிற்சி செய்யும் ஜிம்மில் எந்த வகையான ஊட்டச்சத்து உணவுகள் தினத்தோறும் பட்டியலிட்டுச் சாப்பிட செல்கிறார்களே அதை மட்டும் சாப்பிடுவது நல்லது. அதைத் தவிர வேறு வகை உணவுகளை எடுக்காமல் அந்த பட்டியலை பின்பற்றி தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் நன்மை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்