Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொடர்ந்து வரும் விக்கலில் இருந்து மீள்வது எப்படி | How to get rid of persistent hiccups

Vaishnavi Subramani Updated:
தொடர்ந்து வரும் விக்கலில் இருந்து மீள்வது எப்படி | How to get rid of persistent hiccupsRepresentative Image.

விக்கல் என்பது அனைவரும் சாப்பிடும் போது ஒரு முறை அல்லது இருமுறையாவது வரும். ஆனால்  இரண்டு முறைக்கு மேல் வந்தால் கூட தண்ணீர் குடித்தால் நின்று விடும். ஆனால் தொடர்ச்சியாக வரும் விக்கலைச் சரிசெய்வது என்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதிலும் தினம்தோறும் தொடர்ந்து வரும் விக்கலை எப்படிச் சரிசெய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தொடர்ந்து வரும் விக்கலில் இருந்து மீள்வது எப்படி | How to get rid of persistent hiccupsRepresentative Image

தொடர்ந்து வரும் விக்கலை எப்படித் தடுப்பது மற்றும் சரிசெய்வது என்பதற்கான சில வழிகள்

 விக்கல் வருவதைத் தவிர்ப்பது எப்படி

✤ நாம் உணவு சாப்பிடும் போது தான் விக்கல் அடிக்கடி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காலையில் உணவு சாப்பிடும் போது பரபரப்பாக உணவு சாப்பிடுவதால் உணவு நன்றாக அரைப்படமால் உணவு குழாய் வழியாக உள்ளே செல்வதால் இரைப்பைக்குச் சென்று வெகுநேரம் இரைப்பையில்  இருந்தால் அதன் மூலம் உறுத்தல் உணர்வு ஏற்பட்டு அது விக்கலாக மாறுகிறது.

✤ அதனால் நாம் சாப்பிடும் உணவை மெதுவாக வாய்யில் நன்றாக அரைத்த பிறகு, முழுங்கினால் அது உணவு குழல் வழியாக இரைப்பைக்குச் சென்று அதில் சுரக்கும் அமிலத்தில் முழுவதுமாக செரிமானம் அடைந்து கடைசியாக சிறுக்குடலிக்கு சென்றடையும்.

தொடர்ந்து வரும் விக்கலில் இருந்து மீள்வது எப்படி | How to get rid of persistent hiccupsRepresentative Image

தொடர்ச்சியாக வரும் விக்கலுக்கான காரணம்

✤ நாம் சாப்பிடும் உணவானது முழுவதுமாக வாய்யில் அரைத்துச் சாப்பிடாமல் விழுங்குவதால் தொடர்ந்து இதே போன்று செய்வதால் இரைப்பையில் வெகு நேரம் இருக்கும்.

✤ அதனால் வெகு விரைவில் புண் ஏற்படும்.அதனைத் தொடர்ந்து புண்கள் அதிகளவில் வளர்ந்தால் இந்த மாதிரியான விக்கல் தொடர்ந்து ஏற்படும்.

✤ காலையில் உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது மற்றும் குறைவாக உணவை எடுத்துக் கொள்வது போன்ற பிரச்சனைகள் மூலம் இந்த விக்கல் தொடர்ந்து வருகிறது.

✤ அதைச் சரிசெய்வது மிகவும் கடினம். அது மட்டும் இல்லாமல் வயிற்றில் பல பிரச்சனைகளின் துடக்கம் தான் இந்த விக்கல் ஆகும்.

✤ அதாவது வயிற்றில் புண்கள், வயிற்றில் அதிகமாகக் காற்று அடைத்துப் போதல், இரைப்பைப் புற்றுநோய் போன்ற காரணங்களால் தான் தொடர்ச்சியான விக்கல் இது துடக்கத்தில் சிறிது நேரத்தில் ஆரம்பித்துப் போகப்போக அதிகமாகத் தொடர்ந்து ஒருநாள் முழுவதுமாக விக்கல் வரலாம்.

✤ தொடர்ந்து விக்கல் வந்தால் தண்ணீர் குடித்த பிறகும் விக்கல் சரியாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

தொடர்ந்து வரும் விக்கலில் இருந்து மீள்வது எப்படி | How to get rid of persistent hiccupsRepresentative Image

தொடர்ச்சியான விக்கலைச் சரிசெய்வது எப்படி

✤  ஆரம்ப நிலையில் விக்கல் என்றால் உணவு சாப்பிட்ட பிறகு, சிறிதுநேரம் தொடர்ச்சியாக விக்கல் வந்தால் அதைச் சரிசெய்யலாம். முதலில் நேரத்திற்கு உணவு மெதுவாக நன்றாக வாய்யில் அரைத்துச் சாப்பிட்டால் எளிதில் செரிமானம் அடையும்.அதனால் வயிற்றில் புண் இருந்தால் சரியாகும்.

✤  மூன்று வேலை கட்டாயமாக உணவு சாப்பிடவேண்டும். வயிற்றில் உள்ள புண் சரிசெய்வதற்கு இளநீர்,மற்றும் பல சத்து நிறைந்த பழங்கள் மற்றும் உணவுகள் சாப்பிடுவதால் புண்கள் விரைவில்  சரியாகும். இந்த முறை தொடர்ந்து வரும் விக்கல் சரிசெய்யவில்லை என்றால் மருத்துவரை அணுகவும். வயிற்றில் வேறு பிரச்சனைகளை உள்ளதா எனப் பார்த்துச் சரிசெய்து கொள்ளவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்