Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,316.88
373.20sensex(0.51%)
நிஃப்டி22,276.85
128.95sensex(0.58%)
USD
81.57
Exclusive

இயற்கையான முறையில் வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி | natural wax at home

Vaishnavi Subramani Updated:
இயற்கையான முறையில் வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி | natural wax at homeRepresentative Image.

வேக்ஸிங் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது பியூட்டிபார்லர் தான். பியூட்டிபார்லருக்கு சென்றால் பணம் அதிகமாக தேவைப்படும் மற்றும் பல ரசனைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட க்ரீம் பயன்படுத்திச் செய்வதால் அது சிலரது தோலுக்கு சேராமல் பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. அதனால் வீட்டிலேயே இயற்கையாக எந்த விதமான செலவுகளும் இல்லாமல் எப்படிச் செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இயற்கையான முறையில் வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி | natural wax at homeRepresentative Image

தேவையான பொருள்கள்

✤ எலுமிச்சை பழம் – 1

✤ சர்க்கரை – 1/4கப்

✤ தண்ணீர் -1/4கப்

இயற்கையான முறையில் வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி | natural wax at homeRepresentative Image

வேக்ஸிங் எப்படி தயாரிப்பது பற்றும் பயன்படுத்துவது

✤ முதலில் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். அதை நன்றாகப் பிழிந்து அதில் இருக்கும் விதைகளை எடுத்துக் கொள்ளவும்.

✤ ஒரு பாத்திரத்தில் 1/4கப் அளவிற்கு எலுமிச்சை சாறு ஊற்றிக் கொண்டு அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து நன்றாக கிளறவும்.

✤ அது நிறம் மாற ஆரம்பித்த உடன் அடுப்பைச் சிறிதளவு வேகப்படுத்த வேண்டும். அதை நன்றாகக் கலக்கவும். அது நிறம் மாறி பழுப்பு நிறம் போல் வந்த உடன் அதைச் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.

✤ அதைத் தண்ணீரில் போட்டு உடன் பிரியாமல் தண்ணீர் அடிப்பகுதிக்குச் சென்றால் பதத்திற்கு வந்துவிட்டது, அடுப்பை அணைத்து விடவும்.

இயற்கையான முறையில் வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி | natural wax at homeRepresentative Image

✤ அப்படி வராமல் தண்ணீரில் பிரிந்து விட்டால் மீண்டும் அந்த பதத்திற்கும் வரும் வரை நன்றாகக் கிளறிவிட்டுக் காய்ச்ச வேண்டும்.

✤ பதத்திற்கு வந்த உடன் அதை எடுத்து நன்றாக கைபெறுக்கும் சூட்டிற்கு வரும் வரை ஆறவிடவும்.

✤ அதை எடுத்து தோலில் மூடிகள் எங்கு உள்ளது எனப் பார்த்து அங்கு அப்ளை செய்ய வேண்டும். 10 முதல் 20 நிமிடங்கள் அதை உலரவிடவும்.

✤ அதன் பின், அதை நீக்கவும். நீக்கிய பிறகு, அந்த இடம் சிவப்பாக இருந்தால் ஐஸ்கட்டிகள் வைத்தால் சரியாகும். இந்த பேஸ்ட் மீதம் இருந்தால் அதை ஒரு சில்வர் பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது அதைச் சூடு செய்து பயன்படுத்தலாம்.

✤ இந்த வேக்ஸிங் முதலில் கைகளில் பயன்படுத்தி எந்த வித பாதிப்புகள் இல்லை என்றால் மட்டும் முகம் மற்றும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம். இந்த மாதிரியான எளிய முறையில் வீட்டிலேயே வேக்ஸிங் செய்து கொள்ளலாம். எந்த பியூட்டிபார்லர்களுக்கும் செல்ல தேவையில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்