Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,748.42
0.00sensex(0.00%)
நிஃப்டி22,055.70
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

பஜ்ஜி மாவு இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் மொறு மொறு பஜ்ஜி செய்வது எப்படி?

Nandhinipriya Ganeshan September 23, 2022 & 14:40 [IST]
பஜ்ஜி மாவு இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் மொறு மொறு பஜ்ஜி செய்வது எப்படி?Representative Image.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - 1 கப் அளவு

பெருங்காயம் - சிறிதளவு

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

கடலை மாவு - 1 கப்

பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்

வாழைக்காய் - 2

நெய் - 1 ஸ்பூன்

KFC சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்.. 

செய்முறை:

முதலில் வாழைக்காயை தோல் நீக்கி வாழைக்காய் சீவும் கட்டையில் சீவி, தண்ணீரில் 5 நிமிடம் ஊற வையுங்கள். 

பின்பு, ஒரு பாத்திரத்தில் அரிசி மாவும், கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பேக்கிங் சோடா, மிளகாய் தூள் ஆகியவற்றை போட்டு 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும். 

இதனுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொண்டால் நல்ல மணமாக டீக்கடையில் கொடுக்கும் பஜ்ஜி போல மொருமொரு என்று வரும்.

மொறு மொறு சமோசா இப்படி செஞ்சி பாருங்க...!!

பின்னர், நாம் தண்ணீருக்குள் வெட்டி வைத்திருந்த வாழைக்காயை எடுத்து கொஞ்சம் நேரம் உலர வைத்துக்கொள்ளுங்கள். இதை நாம் கலக்கி வைத்துள்ள மாவில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து எடுக்க வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் போட்ட வாழைக்காயை கொதிக்கும் எண்ணெயில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். 

தீய வைத்துவிடாதீர்கள். அவ்வளவு தான் 5 நிமிடத்தில் சூடான வாழைப்பழ பஜ்ஜி ரெடி. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்