Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

KFC சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்.. 

Nandhinipriya Ganeshan September 19, 2022 & 14:20 [IST]
KFC சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்.. Representative Image.

பொதுவாக, KFC சிக்கன் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதற்காக அடிக்கடி கடைக்குபோயோ அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால், சமீப காலமாக பல ஹோட்டல், ரெஸ்டோரன்ட்களில் உணவுகள் தரமற்று இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இதனாலே கடைகளில் உணவுகளை வாங்கி சாப்பிடுவதற்கு கொஞ்சம் பீதியாக தான் கிளப்புகிறது. ஆனால், இனி அதுபோன்ற சிக்கனை நாம் வீட்டிலேயே எளிமையாக சமைக்கலாம். வாங்க கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான நாட்டுக்கோழி பிரியாணி குழையாமல் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்:

சிக்கன் லெக் பீஸ் - 1 கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

சோள மாவு - 1/4 கப்

கரம் மசாலா - 1 ஸ்பூன்

மைதா மாவு - 3/4 கப்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

மிளகுத்தூள் - 1 ஸ்பூன்

முட்டை - 1

சோயா சாஸ் - 1 ஸ்பூன்

ஓட்ஸ் - 1 கப்

தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்

ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு

ஈரோடு ஸ்டைல் ஆட்டு ஈரல் கிரேவி..

செய்முறை:

முதலில் லெக் பீசை நன்றாக சுத்தம் செய்து கத்தி கொண்டு கீறிவிடவும். இப்போது ஒரு பாத்திரத்தில் இந்த லெக் பீசை போட்டு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து விடவும். 

அதில் முதலில் சோள மாவு மற்றும் மைதா இரண்டையும் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் மிளகாய் தூள், சோயா சாஸ், கரம் மசாலா தூள், டொமேட்டோ சாஸ், இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிதளவு உப்பு மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக பிசைந்துக் கொள்ளவும். 

லெக் பீசில் படும்படி நன்றாக பிசைந்து சுமார் 1 மணி நேரம் வரை ஃபிரிட்ஜில் வைத்து ஊறவிடுங்கள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெளியே எடுத்து லெக் பீஸை ஓட்ஸில் நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். 

வித்தியாசமான சுவையில் மொறுமொறு வாழைப்பூ கட்லெட்…

இதே மாதிரியான எல்லா லெக் பீசையும் ஓட்ஸில் பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நாம் ரெடி பண்ணி வைத்த லெக் பீஸை ஒவ்வொன்றாக போட்டு பொன்நிறமாக பொரித்து எடுக்கவும்.

லெக் பீசில் ஈரம் இருப்பதால் எண்ணெயில் போடும் போது வெடிப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே, ஜாக்கிரதையாக கையாள வேண்டும். அவ்வளவு தான் சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி.. சூடாக எடுத்து பரிமாறுங்கள்...

இந்த குறிப்பு பிடித்திருந்தால் வீட்டில் முயற்சித்து பாருங்கள். 

எளிமையான முறையில் டேஸ்ட்டான கேரள ஸ்டைல் முட்டை தொக்கு ..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்