Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மொறு மொறு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் செய்வது எப்படி? | How to Make Crispy Potato Sticks at Home

Nandhinipriya Ganeshan Updated:
மொறு மொறு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் செய்வது எப்படி? | How to Make Crispy Potato Sticks at HomeRepresentative Image.

நம்மில் பலருக்கும் உருளைக்கிழங்கில் செய்யும் ரெசிபி என்றாலே ரொம்ப பிடிக்கும். அதிலும், சாப்பிடுவதற்கு மொறு மொறுப்பாக இருந்தால் அளவே இல்லாமல் சாப்பிடுவோம். ஆனால், பெரும்பாலும் உருளைக்கிழங்கில் செய்யும் ஸ்நாக்ஸ் அனைத்துமே கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். இனி கடைகளில் வாங்கி சாப்பிட வேண்டிய அவசியமில்லை, வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதுவும் மாலை நேரத்தில் என்ன ஸ்நாக்ஸ் செய்து தரலாம் என்று குழப்பும் இருக்காது. சரி, வாங்க உருளைக்கிழங்கை வைத்து செய்யும் உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் (Potato Sticks) வீட்டிலேயே மொறு மொறுப்பாக செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்க்கலாம். 

மொறு மொறு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் செய்வது எப்படி? | How to Make Crispy Potato Sticks at HomeRepresentative Image

தேவையானப் பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 5-6

எண்ணெய் - தேவையான அளவு

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

கொத்தமல்லி இலை - 1/2 கப் 

சீஸ் - 1/2 கப்

உப்பு - தேவைக்கேற்ப

இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்

சோளமாவு - 5 டீஸ்பூன்

மொறு மொறு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் செய்வது எப்படி? | How to Make Crispy Potato Sticks at HomeRepresentative Image

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை எடுத்து நன்றாக கழுவிவிட்டு, தோலை உரித்து சின்ன சின்ன தூண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொஞ்சமாக உப்பு சேர்த்து 20 நிமிடம் வேக வைத்துக்கொள்ளுங்கள். 

பின்னர், உருளைக்கிழங்கில் இருந்து தண்ணீரை வடிகட்டி எடுத்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். மசித்த உருளைக்கிழங்குடன் இஞ்சி - பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், சோள மாவு, சீஸ், கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

அடுத்ததாக, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சப்பாத்திக்கட்டையில் உருட்டி, சின்ன சின்ன குச்சிகள் வடிவத்தில் கத்தியால் வெட்டி கொள்ளுங்கள்.

இப்போது, ஒரு கடாயில் எடுத்துவைத்துள்ள எண்ணெயை ஊற்றி நன்றாக காய்ந்ததும், வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு குச்சிகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சூடான மொறு மொறு உருளைக்கிழங்கு ஸ்டிக்ஸ் தயார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்