Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடியரசு தின ஸ்பெஷல் தோக்லா ரெசிபி.! | Republic Day Special Recipes

Vaishnavi Subramani Updated:
குடியரசு தின ஸ்பெஷல் தோக்லா ரெசிபி.! | Republic Day Special RecipesRepresentative Image.

வருகின்ற ஜனவரி 26 அன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடக் குடியரசு தினம் ஆனது 74வது குடியரசு தினமாகக் கொண்டாடப்பட உள்ளது. நமது தேசப்பற்றைப் போற்றும் வகையில் மூவர்ண நிறத்தில் ஒரு ரெசிபி செய்து நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து அளித்து இந்த குடியரசு தின விழாவில் நாம் தேசப் பற்றை போற்றுவோம்.

குடியரசு தின ஸ்பெஷல் தோக்லா ரெசிபி.! | Republic Day Special RecipesRepresentative Image

மூவர்ண நிறம்

மூவர்ண நிறத்தில் ரெசிபியா அதை எப்படி வீட்டில் செய்வது? 

✤மூவர்ண நிறம் என்பது தேசியக் கொடியில் உள்ள காவி, வெள்ளை, பச்சை என மூன்று வண்ணங்களைக் குறிக்கும். காவி நிறம் வலிமையின் அடையாளமாகவும், வெள்ளை நிறம் உண்மை மற்றும் தூய்மையையும் குறிக்கிறது. மேலும், பச்சை நிறமானது நமது நாட்டின் வளத்தை குறிக்கிறது. இவ்வளவு பெருமை நிறைந்த கொடியைப் பற்றி நினைத்தாலே நமக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அதிலும் ஒரு ரெசிபி என்றால் மிகவும் சந்தோசமாக உள்ளது.

✤மூவர்ண நிறத்தில் பல வகையான ரெசிபிக்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக இனிப்பு வகையில் மூவர்ண லஸ்ஸி (Tiranga Lassi) மற்றும் கார வகையில் மூவர்ண தோக்லா (Tiranga Dhokla) எனப் பல ரெசிபி உள்ளது. நாம் இந்த பதிவில் மூவர்ண தோக்லா பற்றிப் பார்க்கலாம்.

குடியரசு தின ஸ்பெஷல் தோக்லா ரெசிபி.! | Republic Day Special RecipesRepresentative Image

மூவர்ண தோக்லா செய்வதற்குத் தேவையான பொருட்கள்

✤அரிசி -1/2 கப்

✤உளுந்து- 1 கப்

✤தயிர் -1 கப்

✤பச்சை மிளகாய் -3 

✤இஞ்சி விழுது-1 ஸ்பூன்

✤மிளகாய்த் தூள் (காஷ்மீரி மிளகாய்த் தூள்) - தேவைக்கேற்ப

✤கீரை -தேவைக்கேற்ப

✤உப்பு-தேவையான அளவு

குடியரசு தின ஸ்பெஷல் தோக்லா ரெசிபி.! | Republic Day Special RecipesRepresentative Image

செய்முறை

✤முதலில்  ஒரு பாத்திரத்தில்  அரைக் கப் அளவிற்கு  அரிசி மற்றும் ஒரு கப் அளவிற்கு உளுந்து சேர்த்து அத்துடன்  தண்ணீர் சேர்த்து நன்றாக ஊறவைக்கவும்.

✤ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்து அத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாகக் கோதுமை மாவு பதத்திற்கு அரைத்து  மூன்று பகுதியாக எடுத்துக் கொள்ளவும்.

✤முதல் பகுதி மாவில் எதையும் சேர்க்காமல் எடுத்துக் கொள்ளவும் அது உங்களுக்கு வெள்ளை நிறத்தைத் தரும்.

குடியரசு தின ஸ்பெஷல் தோக்லா ரெசிபி.! | Republic Day Special RecipesRepresentative Image

✤இரண்டாவது பகுதி மாவில் தக்காளி சாஸ் மற்றும் காரத்திற்கேற்ப காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கினால் ஆரஞ்சு நிறம் கிடைக்கும்.

✤மூன்றாவது பகுதி மாவில் கீரை துருவல், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி விழுது சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொண்டால் பச்சை நிறம் கிடைக்கும்.

✤இந்த மூன்று கலவையையும் எடுத்து அதனை உருண்டை வடிவில் பிடித்துக் கொண்டு வேக வைத்து எடுத்தால் நீங்கள் எதிர்பார்த்த மூவர்ண நிற தோக்லா ரெடி. சூடாக நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து அளித்து தேசப் பற்றை போற்றுவோம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்