Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மண மணக்கும் ஃபில்டர் காஃபி…! எப்படி செய்யலாம்னு பாருங்க…

Gowthami Subramani October 03, 2022 & 17:10 [IST]
மண மணக்கும் ஃபில்டர் காஃபி…! எப்படி செய்யலாம்னு பாருங்க…Representative Image.

டீ பிரியர்கள் எப்படியோ, அதே போல காஃபி பிரியர்களும் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும், காஃபி குடிப்பர். அதனின், நறுமணமே அனைத்தையும் மாற்றக் கூடியதாக அமையும். அதிலும், தென்னிந்தியாவில் ஃபில்டர் காஃபி பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக, கும்பகோணம் ஃபில்டர் காஃபி என்றாலே மிகவும் பிரபலமானதாகும். இந்த ஃபில்டர் காபியை நம் வீட்டிலேயே எளிமையாக தயார் செய்யலாம்.

ஃபில்டர் காஃபியை வீட்டிலேயே எளிமையாக எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து காண்போம்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்வது எப்படி?

தேவையான பொருள்கள்

காஃபி தூள் – 3 டீஸ்பூன்

பால்

சர்க்கரை

ஃபில்டர் காபி செய்யும் முறை

முதலில், ஃபில்டர் காபி செய்வதற்கு தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு, ஒரு காஃபி ஃபில்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின், அதில் 3 ஸ்பூன் காஃபி தூள் சேர்த்து ஃபில்டரை அதன் மீது வைக்கவும்.

பின் நன்கு கொதித்த சுடு தண்ணீரை அதில் பாதியளவு ஊற்ற வேண்டும். அதிகமாக தண்ணீர் சேர்த்தால், டிகாஷன் ஸ்ட்ராங்காக இருக்காது.

சூப்பரான முட்டை பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும். பால் கொதித்த பின் இறக்கி, டம்ளரை எடுத்து, அதில் முதலில் சர்க்கையை இடவும். பின்னர் அந்த டிகாஷனைச் சேர்த்து பால் சேர்க்க வேண்டும்.

ஸ்ட்ராங் காஃபி வேண்டுமென்றால் டிகாஷனை அதிகமாகவும், ஸ்ட்ராங் கம்மியாக வேண்டுமென்றால் டிகாஷனை குறைவாகவும் சேர்த்துக் கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்