Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Jasmine Tea at Home: இதய நோய் வரமால் இருக்க இந்த தேநீர் குடிங்க... உடல் எடையும் குறையும்...!!

Nandhinipriya Ganeshan June 29, 2022 & 10:45 [IST]
How to Make Jasmine Tea at Home: இதய நோய் வரமால் இருக்க இந்த தேநீர் குடிங்க... உடல் எடையும் குறையும்...!!Representative Image.

How to Make Jasmine Tea at Home: பல நூற்றாண்டுகளாக மல்லிகை தேநீரை குடித்து வருகிறார்கள். இந்த தேநீர் முதன் முதலில் சீனாவில் தான் பிரபலமாக இருந்தது. அதன் பின் படிப்படியாக மற்ற நாடுகளிலும் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாம் இப்போது குடித்து வரும் கிரீன் டீ போல தான் இதுவும் இருக்கும். இதுவும் ஏகப்பட்ட நன்மைகளை கொண்டுள்ளது. இப்போது மல்லிகை தேநீர் எப்படி தயாரிப்பது, அதன் பயன்கள் என்னென்ன, யார் இந்த தேநீரை குடிக்க கூடாது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

5-6 மல்லிகை பூ

இஞ்சி - அரை துண்டு

லவங்கம் - 4

2 டம்பள் தண்ணீர்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ரி காய்ந்ததும் லவங்கம், இஞ்சியை தட்டி அதில் போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

இப்போது மல்லிகை பூவைவும் சேர்த்து 10 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி, சுவைக்கு ஏற்ப 2 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான்! சுவையான ஆரோக்கியமான மல்லிகை பூ டீ ரெடி!

மல்லிகை பூவிற்கு பதிலாக மல்லிகை பொடி இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். 

மல்லிகை தேநீர் பயன்கள்:

❖ மல்லிகை தேநீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க (jasmine tea benefits in tamil) உதவுகிறது. 

❖ இதில் இருக்கும் எல்-தியானைன் மற்றும் காஃபின் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகின்றன. இதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கிறது. 

❖ முக்கியமாக வாய்வழி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது இந்த மல்லிகை தேநீர். ஏனென்றால் இந்த டீ இருக்கும் பாலிபினால்கள் பல் சொத்தை ஏற்படுத்தும் கிருமிகளை கொன்று பல் சிதைவிலிருந்து பாதுக்கிறது. அதுமட்டுமல்லாமல், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் குறையும், இதனால் வாய்துர்நாற்றத்திலிருந்தும் விடுபடலாம். 

❖ நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை வகை 2 நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்க (health benefits of jasmine tea in tamil) உதவுகிறது. 

❖ உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

❖ மேலும், இந்த டீயில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் தோல் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. 

குறிப்பு: மல்லிகை பொதுவாக பாதுகாப்பான உணவு பொருளாக இருந்தாலும், அவ்வப்போது ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் இந்த டீயை தவிர்க்க வேண்டும். 


21 வயசுக்கு அப்புறம் உயரமா வளரனுமா..? அதுவும் ஒரே மாசத்துல.. அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்