Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதவிடாய் காலங்களில் மனமாற்றங்களை கட்டுப்படுத்துவது எப்படி | how to control mood swings in periods

Vaishnavi Subramani Updated:
மாதவிடாய் காலங்களில் மனமாற்றங்களை கட்டுப்படுத்துவது எப்படி | how to control mood swings in periodsRepresentative Image.

மாதவிடாய் காலங்களில் மனம் என்பது ஒரு நிலையாக இருக்காது. அதில் பலவகையான மாறுப்படுகள் ஏற்படும். அந்த மாற்றுப்பட்டிற்குப் பெயர் தான் மோடு ஸ்விங் (Mood Swings) ஆகும். ஒவ்வொரு மாதமும் இந்த  மாதவிடாய் காலங்களில் மனமாற்றம் என்பது எப்பொழுது ஏற்படக் கூடிய ஒன்று. அது எதற்கு மாறுபடுகிறது என்பது தெரியாத ஒன்று. அதனால் மனம் மற்றும் உடலில் நிகழும் இந்த பிரச்சனையை எப்படிக் கட்டுப்படுத்துவது மற்றும் கையாளுவது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மாதவிடாய் காலங்களில் மனமாற்றங்களை கட்டுப்படுத்துவது எப்படி | how to control mood swings in periodsRepresentative Image

மனம் அலைபாய்வது (Mood Swings) என்றால் என்ன?

ஒவ்வொரு மாதமும் இந்த மாதவிடாய் நிகழ்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, இந்த மோடு ஸ்விங் ஆரம்பித்து மாதவிடாய் நாட்களில் முடிவடையும். இதனால் மனதில் பல விதமான மாற்றங்கள் ஏற்படும்.புத்துணர்ச்சியாகவும், சுருசுருப்பாகவும் இருக்கும் போது தீடிரென மனதில் பல மாற்றங்கள் அதாவது சோகம்,எரிச்சல், கோபம், கவலை எனப் பல மாற்றங்கள் ஏற்படும்.

இந்த மாதிரியான மனமாற்றங்களை இரண்டு வகைப்படுத்தலாம்

1.மாதவிடாய் முன் டிஸ்போரிக் கோளாறு. Premenstrual dysphoric disorder(PMDD)

2. மாதவிலக்கு. permentural syndrome

மாதவிடாய் காலங்களில் மனமாற்றங்களை கட்டுப்படுத்துவது எப்படி | how to control mood swings in periodsRepresentative Image

1.மாதவிடாய் முன் டிஸ்போரிக் கோளாறு. Premenstrual dysphoric disorder(PMDD)

✤ இந்த பிரச்சனை தொடக்கமானது மாதவிடாய் வருவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு முதல் மாதவிடாய் நாட்களில் முடிவடையும்.இந்த மன மாற்றம் ஆனது மிகவும் கடுமையாகவும், சோகமாகவும் இருக்கும். பல விதமான உணர்ச்சிகளை உள்ளடக்கியது. இந்த மன நிலை மாற்றம் மிகவும் கடினமாக இருக்கும்.

மாதவிடாய் காலங்களில் மனமாற்றங்களை கட்டுப்படுத்துவது எப்படி | how to control mood swings in periodsRepresentative Image

2. மாதவிலக்கு. permentural syndrome

✤ இந்த மாதவிலக்கு என்பது மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஆரம்பித்து அது மாதவிடாய் காலங்களில் முடிவடையும். இதில் மனமானது மிகவும் பதற்றமாகவும், எந்த முடிவுகளும் எடுக்க முடியாத அளவிற்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மனம் மிகவும் சோர்வாகவும், அதிகளவில் கோபம் வரும்.

மாதவிடாய் காலங்களில் மனமாற்றங்களை கட்டுப்படுத்துவது எப்படி | how to control mood swings in periodsRepresentative Image

மனம் மாற்றம் ஏன் ஏற்படுகிறது

✤ மனம் அலைபாய்வது (Mood Swings) என்பதற்கு உறுதியான விளக்கம் என எதுவும் இல்லை. ஆனால் மாதவிடாய் காலங்களில் மற்றும் அதற்கு முன்பாக, ஏற்படும்ஹார்மோன் மாற்றங்களால் தான் இந்த மோடு ஸ்விங் ஏற்படுகிறது.

✤ ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒரு முறை வரும் நிகழ்வு. அதில் ஹார்மோன்கள் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். அதில் 21 முதல் 28 நாட்களில் இந்த இடைப்பட்ட நாட்களில் மட்டும் இந்த மோடு ஸ்விங் ஏற்படும்.

✤ ஒரு மாதவிடாய் சுழற்சி முடிவடைந்த பிறகு, மீண்டும் கருமுட்டை வளர ஆரம்பிக்கும் போது இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மெதுவாக அதிகரிக்க ஆரம்பிக்கும். அது இரண்டு முதல் மூன்று வாரங்களில் முழுமையாக உச்சநிலை அடையும்.

✤ கருமுட்டை முழுமையடைந்து, நான்காம் வாரத்தில் அந்த ஹார்மோன்கள் வடிய ஆரம்பிக்கும். அத்துடன் புரோஜெஸ்டிரானின் ஹார்மோன் மாற்றம் அடையும். இந்த நிலை தான் மோடு ஸ்விங் ஆகும்(Mood Swings).

✤ இந்த நிலையில் மனம் மிகவும் பதற்றம் மற்றும் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாற்றங்கள், சோகம், கோபம் போன்றவை மனதளவில் பிரச்சனைகள் இருக்கும்.

✤ உடலளவில் முதுகுத் தண்டுவடத்தில் வலி மற்றும் வயிற்று வலி, தலை வலி போன்றவை வலிகள் அதிகளவில் இருக்கும்.இதில் வயிற்று வலி என்பது மிகவும் அதிகமாகவும் மற்றும் அடிவயிறு கனமாகவும்,வாந்தி வருவது போல் இருக்கும்.

மாதவிடாய் காலங்களில் மனமாற்றங்களை கட்டுப்படுத்துவது எப்படி | how to control mood swings in periodsRepresentative Image

இந்த மோடு ஸ்விங்கை எப்படிக் கையாளுவது மற்றும் பழைய நிலைமைக்கு மாறுவது எப்படி

✤ இந்த மோடு ஸ்விங் ஆனது முதலில் கோபம், எரிச்சல் தொடங்கி தற்கொலை எண்ணங்கள் வருவதற்குக் கூட வாய்ப்புள்ளது. அதனால் இதை எப்படிக் கையாளுவது மற்றும் அதிலிருந்து சாதாரண மன நிலைக்கு எப்படி மாறுவது என்பதைப் பார்க்கலாம்.

✤ இந்த மோடு ஸ்விங் பல விதமான மனமாற்றங்கள் அதாவது கவனம் சிதறல், கோபம், அழுகை, எரிச்சல், மயக்கம், அதிக தூக்கம் மற்றும் அதிகமாகச் சோர்வாக இருப்பதில் ஆரம்பித்துப் பல மனமாற்றங்களை ஏற்படுத்தும்.

✤ இதை ஆரம்ப நிலை என்றால் மாத்திரைகள் தேவையில்லை. இந்த மோடு ஸ்விங் ஆரம்பிக்கும் போது யோகா மற்றும் தியானம், மூச்சுப்பயிற்சி எனச் செய்தால் இதைக் கையாளுவது எளிமையாக மாற்றலாம்.

✤ தினமும் இது போன்று செய்யலாம் அல்லது மனமாற்றங்கள் ஏற்படும் போது இந்த முறையைச் செய்வதால் மனம் அலைபாய்வதைக் கட்டுப்படுத்த முடியும்.

மாதவிடாய் காலங்களில் மனமாற்றங்களை கட்டுப்படுத்துவது எப்படி | how to control mood swings in periodsRepresentative Image

✤ இந்த மோடு ஸ்விங்கை உணவுகள் முறை மூலமாகவும், எதிர்கொள்வதற்கு, சிட்ரஸ் அதிகமாக இருக்கும் பழங்கள் மற்றும் எலுமிச்சை டீ மற்றும் கிரீன் டீ எனப் பல உள்ளது. இதைப் போன்று சாப்பிட்டால் மோடு ஸ்விங்கை கட்டுப்படுத்தலாம்.

✤ இந்த மனமாற்றங்களைச் சரிசெய்வதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், சீஸ், கீரைகள், தானியங்கள் போன்றவைகள் சாப்பிடுவதால் குறைக்க முடியும். அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் சிக்கன், மீன் போன்றவை சாப்பிடலாம்.

✤ இந்த யோகா மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் இது போன்று எதுவும் செய்யாமல் இருந்தால் அந்த மோடு ஸ்விங் மிகவும் அதிகரிக்கும். அதைச் சரிசெய்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும்.

✤ இந்த மோடு ஸ்விங்கில் ஹார்மோன் மாற்றங்கள் உச்சக்கட்டத்தை அடையும் போது மட்டும் மருத்துவரிடம் ஆலோசனைகள் பெற்று மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும். வாந்தி அல்லது உடலில் அதிகளவில் வலிகள் இருந்தால் இந்த மாத்திரைகள் எடுக்கலாம். இந்த மோடு ஸ்விங் மிகவும் அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனைகள் பெற்று மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவும்.

✤ ஒவ்வொரு மாதமும் இந்த மோடு ஸ்விங்கை எதிர்கொள்பவர்களாக இருந்தால் மாதவிடாய்க்கு ஒரு வாரத்திற்கு, முன்பாக இந்த மனமாற்றங்கள் இருந்தால் மேல் குறிப்பிட்ட வழிகளைப் பின்பற்றவும். இதனால் இந்த பிரச்சனைகளை எளிதில் சரிசெய்து கொள்ளலாம். இந்த மனமாற்றத்திற்கு வேறுயாரும் காரணம் இல்லை நம் உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றங்கள் தான் எனப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்