Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,357.21
413.53sensex(0.57%)
நிஃப்டி22,288.10
140.20sensex(0.63%)
USD
81.57
Exclusive

ஸ்ட்ராபெரி சீஸ் கேக் தீயில்லாமல் செய்வது எப்படி | How to make Strawberry Cheesecake without fire

Vaishnavi Subramani Updated:
ஸ்ட்ராபெரி சீஸ் கேக்  தீயில்லாமல் செய்வது எப்படி | How to make Strawberry Cheesecake without fireRepresentative Image.

நம்மில் பலர்  கேக் என்றால் அதில் மைதா பண்கள் மற்றும் முட்டை ஊற்றிச் செய்த கீரிம் சேர்த்து செய்வார்கள் எனத் தெரியும். அதைப் பார்ப்பதற்கு அழகாக இருப்பதற்குப் பல ரசயான பொடிகள் சேர்ப்பதால் பலர் சாப்பிட மாட்டார். அதனால் இதை எதையும் பயன்படுத்தாமல் அதுவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் கூட இந்த மாதிரி புதுவிதமான ரெசிபியை செய்து அசத்தலாம். அந்த ரெசிபி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த ரெசிபி தான் ஸ்ட்ராபெரி சீஸ் கேக். இந்த கேக் செய்வதற்கு எந்த ஒரு ஓவன் மற்றும் அடுப்பு தேவையில்லை.சரிவாங்க இந்த பதிவில் அந்த ஸ்ட்ராபெரி சீஸ் கேக் ஓவன் மற்றும் அடுப்பைப் பயன்படுத்தாமல் (Fireless cooking) எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

 

ஸ்ட்ராபெரி சீஸ் கேக்  தீயில்லாமல் செய்வது எப்படி | How to make Strawberry Cheesecake without fireRepresentative Image

தேவையான பொருள்கள்

✤ பிஸ்காஃப்  குக்கீகள் – 200 கிராம் அல்லது ஓரியோஸ் குக்கீகள்

✤வெண்ணெய் – 100 கிராம் (உப்பு சேர்க்காத வெண்ணெய்)

✤ கீரிம் சீஸ் – 500 கிராம் அல்லது மஸ்கார்போன் சீஸ்

✤ ஐசிங் சர்க்கரை – 1 ¼ கப்

✤ ஸ்ட்ராபெர்ரி – 200 கிராம்(1 கப் தோல் உரிக்கப்பட்ட து)

✤ வெண்ணிலா பேஸ்ட் – 1 தேக்கரண்டி

✤ ஸ்ட்ராபெர்ரி தூள் – 1டீஸ்பூன்

✤ கெட்டியான கிரீம் - 250 மில்லி

✤ ஸ்ட்ராபெர்ரி – 1கப் (அலங்கரிக்க)

ஸ்ட்ராபெரி சீஸ் கேக்  தீயில்லாமல் செய்வது எப்படி | How to make Strawberry Cheesecake without fireRepresentative Image

செய்முறை

✤ முதலில் ஒரு பாத்திரத்தில் 200 கிராம் அளவிற்கு குக்கீகளை பொடித்துப் போட்டு தூள் ஆக்கிக் கொண்டு  அதன் பின்,அதில் உருக்கிய வெண்ணெய்யைச் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கிக் கொள்ளவும்.

✤ ஒரு கேக் டின்னில் பேக்கிங் பேப்பர் முழுவதுமாக உள் பக்கத்தில் போட்டுக் கொள்ளவும்.

✤ அதில் கலக்கிய கலவையைச் சேர்த்து நன்றாக வட்டவடிவில் தேய்த்துச் சமப்படுத்தி 20 நிமிடங்கள் குளிரூட்டவும்.

ஸ்ட்ராபெரி சீஸ் கேக்  தீயில்லாமல் செய்வது எப்படி | How to make Strawberry Cheesecake without fireRepresentative Image

✤ மற்றொரு பாத்திரத்தில் கீரிம் சீஸ் மற்றும் ஐசிங் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

✤ தோல் உரித்த ஸ்ட்ராபெர்ரியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து அந்த சாற்றை நன்றாக வடிகட்டிக் கொள்ளவும்.

✤ வடித்த சாறு மற்றும் வெண்ணிலா பேஸ்ட் இரண்டையும்  கலக்கிய கீரிம் சீஸியில் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

✤ அத்துடன் கெட்டியான கீரிம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

✤ குளிரூட்டிய கேக் டின்னில் முதல் படி குக்கீகள் இருக்கும் இரண்டாம் படியில் கலக்கிய கலவை ஊற்றி நன்றாக வட்ட வடிவில் தேய்த்து 8 மணி நேரம் குளிரூட்டவும்.

✤ குளிரூட்டிய பிறகு, அதை எடுத்து அதன் மேலே ஸ்ட்ரபெர்ரி சிறிய துண்டுகளாக வெட்டு அதை கேக்கீன் மேல் அலங்கரிக்கவும்.

✤ அத்துடன் ஸ்ட்ரபெர்ரி பவுடர் தூவினால் சுவையான ஸ்ட்ராபெரி சீஸ் கேக் தயார். இதற்கு அடுப்பு மற்றும் ஓவன் தேவையில்லை மற்றும் இதில் முட்டை மற்றும் எந்த அசைவம் சேர்க்காமல் செய்தால் சைவ பிரியர்கள் சாப்பிடலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்