Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குளிர்காலத்தில் உண்டாகும் மூட்டு வலி! இது தான் காரணம்! | Joint Pain Reasons in Tamil

Gowthami Subramani Updated:
குளிர்காலத்தில் உண்டாகும் மூட்டு வலி! இது தான் காரணம்! | Joint Pain Reasons in TamilRepresentative Image.

குளிர்காலம், கோடைக்காலம் என எந்தவொரு காலமாக இருந்தாலும், அதற்கு ஏற்றாற் போல நாம் பல்வேறு விளைவுகளைச் சந்திக்க நேரிடும் சூழல் உள்ளது. அந்த வகையில், குளிர் காலத்தில் நாம் பெரும்பாலும் மூட்டு வலி ஏற்படுவதை உணர்ந்திருப்போம். இது குளிர்காலத்தில், தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் அழுத்தத்தை குறிப்பதாக உள்ளது. இந்த அழுத்தமானது விறைப்பு மற்றும் வலியை உண்டாக்குகிறது. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் ஆகும்.

குளிர்காலத்தில் உண்டாகும் மூட்டு வலி! இது தான் காரணம்! | Joint Pain Reasons in TamilRepresentative Image

குளர்காலத்தில் ஏற்படும் உடல்வலி

நம்மில் பலர் குளிர்காலத்தில் உடல் வலியால் அவதிப்படுவோம். அதனால், இதற்கான காரணங்களைத் தெரிந்து கொண்டு வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம், இது போன்ற உடல் வலிகளிலிருந்து விடுதலை பெறலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர்காலத்தில் உடல் வலி, மூட்டுவலி போன்றவை ஏன் ஏற்படுகிறது மற்றும் அதற்கான காரணங்கள் சிலவற்றை காணலாம்.

அதிக ஈரப்பதம்

குளிர்காலத்தில் ஏற்படும் ஈரப்பதம் உடல் திசுக்களை வறட்சியை உண்டாக்குகிறது. இது உடலில் காயத்தை ஏற்படுத்துகிறது.

குளிர்காலத்தில் உண்டாகும் மூட்டு வலி! இது தான் காரணம்! | Joint Pain Reasons in TamilRepresentative Image

அதிக நேரம் உட்கார்ந்திருத்தல்

வெகு நேரமாக, உட்கார்ந்திருப்பவர்கள் குளிர்காலத்தில் பல்வேறு விளைவுகளைச் சந்திப்பர். இதனால், அவர்களுக்கு உடல் செயல்பாடு குறைகிறது. இது அவர்களின் தசை மற்றும் மூட்டு வலியினை அதிகரிப்பதாக அமைகிறது.

குறைவான சூரிய ஒளி

நம் அன்றாட வாழ்வில் தேவையான ஒன்றாக விளங்குவது சூரிய ஒளி ஆகும். ஆனால், குளிர்காலத்தில் குறைவான சூரிய ஒளியே நமக்குக் கிடைக்கிறது. இதனால், உடலில் குறைந்த அளவிலான வைட்டமின் டி உற்பத்தி செய்யப்படுகிறது. இது எலும்பு மற்றும் தசை வலியை ஏற்படுத்துபவையாக அமைகிறது.

குளிர்காலத்தில் உண்டாகும் மூட்டு வலி! இது தான் காரணம்! | Joint Pain Reasons in TamilRepresentative Image

குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு வலியை எப்படி குறைக்கலாம்?

குளிர்காலத்தில் உண்டாகக்கூடிய உடல் வலிகளைக் குறைப்பதற்கு நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் படி, நல்ல உடல் தகுதியைப் பராமரிப்பது அவசியம் ஆகும். இதற்கு,

✤ முதலில் நாம் செய்யவேண்டியது உடல் உறுப்புகளை அசையச் செய்வது அதாவது உடலை நீட்டி, வளைத்து யோகா செய்வது நமக்கு நெகிழ்வுத் தன்மையைத் தரும்.

✤ இது உடலின் வலிமையை அதிகரிப்பதோடு, உடல் வலியைக் குறைக்கிறது. அதே போல, வெது வெதுப்பான ஆடைகளை அணிவது, உடல் வலிகளைத் தடுக்க உதவுகிறது.

✤ அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் முட்டை, கொழுப்பு உள்ளிட்டவற்றைச் சேர்க்கும் போது, நமது தசை மற்றும் எலும்பு வலி குறைய வாய்ப்பு உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட பின், உடல் வலியைச் சந்திப்பவராக இருப்பின், மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்