Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தப் பொங்கலுக்கு சிறுதானிய பொங்கல் தயார் செய்வது எப்படி? | Millet Pongal Recipe

Gowthami Subramani Updated:
இந்தப் பொங்கலுக்கு சிறுதானிய பொங்கல் தயார் செய்வது எப்படி? | Millet Pongal RecipeRepresentative Image.

பொங்கல் பண்டிகை என்றாலே, அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பொங்கல் தான். அதே சமயம், நம் ஆரோக்கியத்தியக் கவனத்தில் கொள்வதும் முக்கியமானதாகும். எனவே, சிறு தானியங்களை வைத்து எப்படி பொங்கல் செய்யலாம் என்பது பற்றி காணலாம். சிறுதானியங்களில் 25% புரதமும், அதிக அளவிலான நார்ச்சத்தும் உள்ளது. இதனால், இது உடல் நலத்திற்கு நன்மை தருபவையாக அமையும். ஆரோக்கியமான பொங்கல் லிஸ்டில் கம்பு, சோளம், சாமை, வரகு, திணை, குதிரைவாலி, கேழ்வரகு உள்ளிட்டவவைகளிலும் பொங்கல் செய்யலாம். குறிப்பாக, சிறுதானியங்களை வைத்து இந்த ஆண்டு ஆரோக்கியமான பொங்கல் தயார் செய்யலாம்.

இந்தப் பொங்கலுக்கு சிறுதானிய பொங்கல் தயார் செய்வது எப்படி? | Millet Pongal RecipeRepresentative Image

தேவையான பொருள்கள்

பாசிப்பருப்பு – ¼ டம்ளர்

திணை – 1 டம்ளர்

வெல்லம் – 1 டம்ளர் (பொடித்து வைக்கப்பட்டது)

தண்ணீர் – 4½ டம்ளர்

தேங்காய் துருவல் – ¼ டம்ளர்

முந்திரி பருப்பு – 6-8

ஏலக்காய் – 4

இந்தப் பொங்கலுக்கு சிறுதானிய பொங்கல் தயார் செய்வது எப்படி? | Millet Pongal RecipeRepresentative Image

செய்முறை

✤ முதலில், திணை மற்றும் பாசிப்பருப்பை எடுத்து தனித்தனியாக அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

✤ அதன் பின், பாத்திரம் ஒன்றில் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு பாசிப்பருப்பை ஒரு முறை கழுவி அதனை கொதிக்கும் நீரில் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

✤ இதில் பாசிப்பருப்பு வெந்த பிறகு, அதில் ஊற வைத்த திணை அரிசியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

✤ இத்துடன் மீதமுள்ள 3½ டம்ளர் தண்ணீரையும் சேர்த்து, அடிபிடிக்க விடாமல் கிளறி விட வேண்டும்.

✤ பொடியாக எடுத்து வைத்த வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து ¼ குவளை அளவு நீர் ஊற்றி, 3 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின், இதனை வடிகட்டி வைத்துக் கொள்ளலாம். வெல்லம் சுத்தமானதாக இருந்தால், அதனை அப்படியே பயன்படுத்தலாம்.

✤ தனி பாத்திரம் ஒன்றை எடுத்து, அதில் முந்திரி பருப்பை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

✤ திணை அரிசி, பாசிப்பருப்பு இரண்டும் நன்றாக வெந்தபின், குழைவான பதத்தை அடைந்ததும், அதில் வெல்லம் அல்லது வெல்லக் கரைசலைச் சேர்த்து, 5 நிமிடம் அடுப்பில் வைத்து பின் இறக்கி விடவும்.

✤ பின் அதில் நெய்யில் வறுத்து வைத்த முந்திரி பருப்பையும், ஏலக்காய்தூளையும் சேர்த்து கிளற வேண்டும். பொங்கல் சூடு சற்று குறைந்த பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடலாம்.

இப்போது சூடான சிறுதானிய பொங்கல் தயாராகி விடும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்