Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்து பயன்படுத்துவது எப்படி | How to Make Sunscreen at Home in Tamil

Vaishnavi Subramani Updated:
வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்து பயன்படுத்துவது எப்படி | How to Make Sunscreen at Home in TamilRepresentative Image.

பொதுவாக வெயில் காலம் என்றாலே நம்மில் பலர் முதலில் செய்வது கடைகளில் விற்கும் சன்ஸ்கிரீன் வாங்கி பயன்படுத்துவது. அதில் பல ரசாயனப் பொருள்கள் கலந்து விற்கிறார்கள். அதைப் பயன்படுத்துவதால் உடலில் பல பிரச்சனைகள் விரைவில் வர வாய்ப்புள்ளது. அதனால் நாம் நம் வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயாரித்து பயன்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பருவக்  காலங்களை விடக் கோடைக் காலங்களில் சூரிய வெப்பத்திலிருந்து வெளியேறும் அல்ட்ரா வயலட் (Ultra Violet) கதிர்வீச்சுகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் உடலில் உள்ள சருமத்தில் பல சுருக்கங்கள் ஏற்படுகிறது. அல்ட்ரா வயலட் கதிர்கள் என்றால் மூன்று வகை உள்ளது. சூரிய கதிர்கள் ஏ,பி,சி(UVA,UVB,UVC) என வகைப்படும். ஏ மற்றும் பி கதிர்கள் அதிகளவில் சரும பிரச்சனைகளை ஏற்படுத்திடும். சரிவாங்க இந்த பிரச்சனை சரிசெய்வதற்கு வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயாரிக்கலாம்.

வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்து பயன்படுத்துவது எப்படி | How to Make Sunscreen at Home in TamilRepresentative Image

சன்ஸ்கிரீன் செய்வதற்கான வழிமுறைகள்

நீங்கள் அதிகளவில் வெயிலில் செல்பவராக இருந்தால் உங்களுக்கு சன்ஸ்கிரீன்பயன்படுத்துவது அவசியம். சூரிய கதிர்கள் அதிகளவில் சருமத்தில் படுவதால் தோலில் உள்ள மெலமனின் அதிகமாக உற்பத்தி செய்து அது தோலில் உள்ள நுண் குழாய்களைச் சேதப்படுத்தும். இதனால் தோல் சுருக்கம் மற்றும் புற்று நோய் வருவதற்குக் கூட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனை இயற்கைமுறையில் சரிசெய்வதற்குப் பல வகையான பொருள்கள் உள்ளது.

பொதுவாக ஒரு சன்ஸ்கிரீனில் எஸ்பிஎஃப் 30 என்ற அளவை கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம். ஆனால் இயற்கைமுறையில் வீட்டிலேயே செய்வதால் அது இரட்டிப்பாக்கலாம். இயற்கையான பொருள்களில்  பல மருத்துவ குணங்களைக் கொண்ட சந்தன மரம் ஒன்று. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், குங்குமப்பூ போன்ற பல வகைபொருள்களில் வைட்டமின் ஈ சத்துகள் அதிகளவில் உள்ளது. வீட்டில் தயார் செய்யும் போது துத்தநாக ஆக்ஸைடை மிக்ஸி, ஜாரில் அரைத்து கவனமாகக் கையாள வேண்டும்.

வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்து பயன்படுத்துவது எப்படி | How to Make Sunscreen at Home in TamilRepresentative Image

சன்ஸ்கிரீன் வீட்டில் தயார் செய்வதன் முதல் வழி

கிளிசரின் சிலதுளிகள் மற்றும் ரோஸ் வாட்டர், அத்துடன் கற்றாழை சாறு கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி  ஃப்ரிட்ஜ்ஜில் சேமித்து வைக்கவும்.  இதை வெயிலில் செல்லவதற்கு முன்பு பயன்படுத்தலாம்.  இதனைப் பயன்படுத்துவதால்  சருமத்தை எளிதில் வெயிலிருந்து பாதுகாக்கலாம்.

சன்ஸ்கிரீன் வீட்டில் தயார் செய்வதன்  இரண்டாவது வழி

கிளிசரின் என்பது  சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு ஒரு நல்ல  மருந்தாகப் பயன்படுத்தலாம். இது காயத்தைச் சரிசெய்யவும், தழும்புகள் வராமல் தடுக்கவும், காயம் மேலும் பெரிதாகாமல் தடுக்கும். கிளிசரின் கொண்டு தயாரிக்கப்படும் சோப்புகள் மற்றும் பாடி வாஷ்களை பயன்படுத்துவது நல்லது.

வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்து பயன்படுத்துவது எப்படி | How to Make Sunscreen at Home in TamilRepresentative Image

சன்ஸ்கிரீன் வீட்டில் தயார் செய்வதன் மூன்றாவது வழி

இதில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டு அதை டபுள் பாயிலிங் முறையில் சூடாக்கவும். எண்ணெய் உருகி வரும் போது அதில் வைட்டமின் ஈ எண்ணெய் சில துளிகள் சேர்த்துக் கொள்ளவும். இதில் அரைத்த துத்தநாக ஆக்ஸைடை சேர்த்துப் பயன்படுத்தினால் எஸ்பிஎஃப் (SPF) ஆனது 15-18 வரை கிடைக்கும். இதை வறண்ட சருமம் இருப்பவர்கள் பயன்படுத்துவது நல்லது. 

வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்து பயன்படுத்துவது எப்படி | How to Make Sunscreen at Home in TamilRepresentative Image

சன்ஸ்கிரீன் வீட்டில் தயார் செய்வதன் நான்காம் வழி

இந்த முறையில் ஒரு சிட்டிகை அளவிற்கு மஞ்சள் மற்றும் கற்றாழையிலிருந்து பிரித்து எடுத்த ஜெல் சேர்த்துக் கொள்ளவும். இதில் மஞ்சள் சேர்ப்பதால் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. இது வியர்வையிலிருந்து சருமத்தை எளிதில் பாதுகாக்கும். இந்த ஜெல்லை ஐஸ் க்யூபாக மாற்றி விட்டிலிலிருந்து வெளியேறும் சிறிது நேரம் முன்பு சருமத்தில் ஆப்ளைசெய்து உலரவிடவும். இந்த ஜெல்லை எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில் பயன்படுத்தலாம்.

சன்ஸ்கிரீன் வீட்டில் தயார் செய்வதன்  ஐந்தாவது வழி

 

ஒரு டீஸ்பூன் கிளிசரின் அல்லது  இயற்கையான கற்றாலை ஜெல் எடுத்து அதில் 50 மில்லி மினரல் வாட்டர் சேர்த்துக் கலக்கவும். அதில் அரை டீஸ்பூன் அளவிற்குச் சூரியகாந்தி எண்ணெய் ஊற்றி கிரீம் போல் கலக்கிக் கொள்ளவும். இதில் 3-4 டீஸ்பூன் துத்தநாக ஆக்ஸைடு கலக்கவும். கிரீம் அளவு  60 மில்லியாக இருந்தால் அதில் 4 டீஸ்பூன் அளவிற்குத் துத்தநாக ஆக்ஸைடு சேர்க்கவும். இதில் எஸ்பிஎஃப் அளவானது 15 ஆக இருக்கும். உங்கள் சருமம் மிகவும் வறண்ட சருமம் என்றால் அதில் வைட்டமின் ஈ எண்ணெய் 4 செட்டு சேர்த்துக் கலக்கவும். வெயிலில்  செல்லவதற்கு முன்பு இந்த கிரீம் சருமத்தில் ஆப்ளை செய்து உலரவிடவும். இதை முகத்தில் மற்ற கிரிம் பயன்படுவதற்கு முன் இதனை முதல் படி கிரிம் ஆகப் பயன்படுத்துவது நல்லது.

வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்து பயன்படுத்துவது எப்படி | How to Make Sunscreen at Home in TamilRepresentative Image

சன்ஸ்கிரீன் எஸ்பிஎஃப் (SPF Sun Protection Factor)

வீட்டில் தயாரிக்கப்பட்ட சன்ஸ்கிரீன் அல்லது கடைகளில் வாங்கும் சன்ஸ்கிரீன் ஆனது முகத்தில் பயன்படுத்துவதற்கு முன், அந்த சன்ஸ்கிரின் எஸ்பிஎஃப் (SPF) (Sun Protection Factor SPF) அளவைப் பற்றி அறிவது அவசியம். ஏன் என்றால் நம் முகத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும் சன்ஸ்கிரீன் எஸ்பிஎஃப் (SPF) அளவு 10 என்றால் 10*5 நிமிடங்கள் சேர்த்து 50 நிமிடங்கள் பாதுகாப்பு அளிக்கும். இதனை எப்பொழுது யோசித்து வாங்குங்கள். அத்துடன் நம் சருமம் பற்றித் தெரிந்து  சன்ஸ்கிரீன் தயார் செய்வதும், வாங்குவதும் அவசியம். வறண்ட சருமம் என்றால் எண்ணெய் கலந்த எஸ்பிஎஃப் சன்ஸ்கிரீனும், எண்ணெய்ப் பசை உள்ள சருமம் என்றால் ஜெல் போன்ற சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

 

 

 

வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்து பயன்படுத்துவது எப்படி | How to Make Sunscreen at Home in TamilRepresentative Image

சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கான வழிமுறையில்

சன்ஸ்கிரீன் முகத்தில் ஆப்ளை செய்தவுடன் வெயிலில் செல்லவதை தவிர்க்கவும். வெயிலில் செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்பு சன்ஸ்கிரீன் ஆப்ளை செய்வது நன்மை. முகத்தில் மற்றும் வெயில் அதிகமாகப்படும் இடத்தில் சன்ஸ்கிரீனை ஆப்ளை செய்யவும். காலையில் பயன்படுத்திய சன்ஸ்கிரீனை மாலை வரை விடுவது தவறு. சன்ஸ்கிரீன் குறிப்பிட்ட நேரம் தான் பாதுகாக்கும். அதனால் காலையில் பயன்படுத்திய சன்ஸ்கிரீனை மதியம் நன்றாகக் கழுவிய பின், சிறிது நேரத்திற்குப் பின் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். எந்த வகை சருமம் ஆக இருந்தாலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்