Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹார்ட் சேப் கேக் செய்வது எப்படி| How to make heart shape cake

Vaishnavi Subramani Updated:
ஹார்ட் சேப் கேக் செய்வது எப்படி| How to make heart shape cakeRepresentative Image.

வருகின்ற பிப்ரவரி 14 அன்று நம் மனதிற்குப் பிடித்த காதலர் தினம் அதை எப்படி ஸ்பெஷலாக கொண்டாடுவது எனப் பலரும் நினைப்பது உண்டு. இந்த வருடக் காதலர் தினத்தை எல்லோருக்கும் பிடித்த இந்த ரெசிபி செய்து உங்கள் காதலர், காதலிலை அசத்துங்கள். அந்த ரெசிபி தான் இதய வடிவில் கேக்.(Heart Shape Cake).

இந்த ரெசிபி செய்து காதலை சொன்னால் எளிதாக உங்கள் காதலி அல்லது காதலன் உங்களை ஏற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது. சரிவாங்க அந்த ரெசிபி எப்படிச் செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

ஹார்ட் சேப் கேக் செய்வது எப்படி| How to make heart shape cakeRepresentative Image

தேவையான பொருள்கள்

✤ அனைத்து பயன்பாட்டு மாவு -2 1/2கப்(கேக் மாவு)

✤ கோக்கோ பவுடர் – 1/4கப்

✤ பேக்கிங் சோடா – 1/2டேபிள்ஸ்பூன்

✤ பேக்கிங் பவுடர் – 1 டேபிள்ஸ்பூன்

✤ தானிய சர்க்கரை – 1/2கப்

✤ உப்பு- 1/2டேபிள்ஸ்பூன்

✤ மோர் – 1 1/2கப் (அறை வெப்பநிலை)

✤ தாவர எண்ணெய் – 1 கப்

✤ முட்டை – 2 (பெரியது  அறை வெப்பநிலை)

✤ வெள்ளை வினிகர் – 1 டேபிள்ஸ்பூன்

✤ வெண்ணிலா சாறு – 2 டேபிள்ஸ்பூன்

✤ சிவப்பு உணவு கலர் – 2 டேபிள்ஸ்பூன்

 

ஹார்ட் சேப் கேக் செய்வது எப்படி| How to make heart shape cakeRepresentative Image

கீரிம் செய்யத் தேவையான பொருள்கள்

✤ கீரிம் சீஸ் – 1 பவுண்டு (அறை வெப்பநிலை)

✤ வெண்ணெய் – 8 அவுன்ஸ் (உப்பு சேர்க்காத  வெண்ணெய் அறை வெப்பநிலை)

✤ வெண்ணிலா சாறு  – 1டேபிள்ஸ்பூன்

✤ தூள் சர்க்கரை  –  1/2கப்

ஹார்ட் சேப் கேக் செய்வது எப்படி| How to make heart shape cakeRepresentative Image

செய்முறை

✤ சமமான அளவில் உள்ள ஒரு கிண்ணத்தில் அனைத்து பயன்பாடு மாவு, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

✤ அதில் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

✤ பெரிய கிண்ணத்தில் மோர், எண்ணெய், முட்டை, வினிகர், வெண்ணிலா சாறு மற்றும் சிவப்பு உணவு கலர் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

✤ இந்த கலவையை மாவு கலவையுடன் சேர்த்து மிருதுவாக வரும் வரை மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

✤ 8 அங்குல அளவில் வட்டம் மற்றும் சதுரப் பாத்திரத்தில் பேன் ஸ்ப்ரேயை நன்றாகத் தெளித்துக் கொள்ளவும். அதில் பேக்கிங் பேப்பர் பேன் முழுவதுமாக வைத்து கேக் வெளியேறாமல் பேக்கிங் பேப்பர் வைத்துக் கொள்ளவும்.

✤ அதில் கலக்கிய மாவு இரண்டு பகுதியாகப் பிரித்து, ஒன்றை வட்டவடிவில் இருக்கும் பாத்திரத்தில் ஊற்றவும். மற்றொரு பகுதி மாவைச் சதுர வடிவில் இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி விடவும்.

✤ அதை 30-40 நிமிடங்கள் நன்றாக வேகவைக்கவும்.

ஹார்ட் சேப் கேக் செய்வது எப்படி| How to make heart shape cakeRepresentative Image

கீரிம் செய்முறை

✤ ஒரு பாத்திரத்தில் அல்லது  மிக்ஸி,ஜாரில்  வெண்ணெய் மற்றும் கீரிம் சீஸ் சேர்த்து நன்றாக  கீரிம் ஆகும் வரை அடித்து கொள்ளவும்.

✤ அதில் வெண்ணிலா சாற்றை ஊற்றி நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். அதற்குப் பிறகு அதில் தூள் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கி பஞ்சு போன்று வரும்வரை நன்றாகக் கலக்கி வைக்கவும்.

ஹார்ட் சேப் கேக் செய்வது எப்படி| How to make heart shape cakeRepresentative Image

கேக் அலங்காரம்

✤ வேகவைத்த கேக்கை எடுத்து அதை 10 முதல் 20 நிமிடங்கள் குளிரூட்டு வேண்டும். அதன் பின், அந்த வட்ட வடிவில் இருக்கும் கேக்கை எடுத்து அதை நடுவிலிருந்து இரண்டு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

✤ அலங்காரிக்கும் தட்டில் வெட்டிய கேக்கை ஒரு பகுதியை இட து பக்கம் மற்றொரு பகுதி வலது பக்கம் வைக்கவும்.

✤ அதற்குப் பிறகு, சதுர வடிவில் இருக்கும் கேக்கை எடுத்து அதன் நடுவில் வைத்தால் இதய வடிவம் கிடைக்கும். அதில் செய்து வைத்திற்கும் கீரிம் அதன் மேல் முழுவதுமாக தேய்த்துக் கொள்ளவும்.

✤ அதன் மேல் மனத்திற்கு விருப்பமான பெயர் அல்லது கேக் டிசன்ஸ் செய்தால் உங்கள் பிடித்தமான இதய வடிவ கேக் தயார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்