Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,319.00
466.06sensex(0.63%)
நிஃப்டி22,567.95
165.55sensex(0.74%)
USD
81.57
Exclusive

லவ்வர்ஸ் டேவை கொண்டாடுவதற்கு முன்பு இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. | Lovers Day 2023 List in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
லவ்வர்ஸ் டேவை கொண்டாடுவதற்கு முன்பு இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. | Lovers Day 2023 List in TamilRepresentative Image.

காதலின் மாதம் என்றாலே அது பிப்ரவரி தான். ஏனென்றால் அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் காத்திருக்கும் லவ்வர்ஸ் டே 'பிப்ரவரி 14' இந்த மாதத்தில் தான் வருகிறது. இதை நான் சொல்ல உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. ரோஸ் டேயில் தொடங்கி காதலர் தினம் வரை ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த காதல் கொண்டாட்டம் காதலர்களுக்கு ஒரு திருவிழா போலதான் இருக்கும். இந்த 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒரு பரிசையும், ஒரு கொண்டாட்டத்தையும் குறிக்கிறது. அந்தவகையில், ஒவ்வொரு நாளும் எதற்காக கொண்டாடப்படுகிறது என்று தெரிந்துக் கொள்வோம் வாங்க.

லவ்வர்ஸ் டேவை கொண்டாடுவதற்கு முன்பு இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. | Lovers Day 2023 List in TamilRepresentative Image

பிப்ரவரி 7 - Rose Day

காதலர் தின கொண்டாட்டங்கள் முதல் நாளான ரோஸ் டேவுடன் தொடங்கும். இந்த நாளில் ஒருவருக்கொருவர் ரோஜா பூக்களை கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். இந்த நாளை காதலர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்பது கிடையாது. நண்பர்களும், திருமண ஜோடிகளும் இந்த நாளில் தங்களது அன்பை பகிர்ந்துக் கொள்ளலாம். ஆனால், ரோஜா பூவின் நிறத்தில் மட்டும் சற்று கவனமாக இருங்கள். அதாவது, உங்க காதலருக்கோ/ காதலிக்கோ, கணவருக்கோ/மனைவிக்கோ கொடுப்பதாக இருந்தால் சிவப்பு நிற ரோஜாவை பரிசாக கொடுக்கலாம். அதுவே, நண்பர்களாக இருந்தால் மஞ்சள் ரோஜாவை கொடுத்து அன்பை பகிர்ந்துக் கொள்ளுங்கள். 

லவ்வர்ஸ் டேவை கொண்டாடுவதற்கு முன்பு இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. | Lovers Day 2023 List in TamilRepresentative Image

பிப்ரவரி 8 - Propose Day

காதலர் வாரத்தின் இரண்டாவது நாள் ப்ரோபோஸ் டே. பெயர் குறிப்பிடுவது போல இந்த நாளில் நீங்கள் உங்கள் உணர்வுகளை தங்கள் அன்புக்குரியவரிடம் வெளிப்படுத்தலாம். இந்த நாளில் நீங்கள் உங்க காதலர் முன்பாக மண்டியிட்டு கையில் மோதிரம் ஏந்தி ப்ரோபோஸ் செய்யலாம். இந்த தருணம் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருவருக்குமே இருக்கும்.

லவ்வர்ஸ் டேவை கொண்டாடுவதற்கு முன்பு இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. | Lovers Day 2023 List in TamilRepresentative Image

பிப்ரவரி 9 - Chocolate Day

மூன்றாவது நாள் சாக்லேட் டே. இந்த நாளில் வாழ்க்கையில் உள்ள அனைத்து கசப்புகளையும் மறந்துவிட்டு, உங்க அன்பானவருக்கு சாக்லேட் அல்லது ஏதாவது ஒரு இனிப்பை பரிசாக கொடுக்கலாம். இதற்காகவே பல விதமான சாக்லேட்கள் கடைகளில் கிடைக்கிறது, அதை வாங்கி கொடுங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்.

லவ்வர்ஸ் டேவை கொண்டாடுவதற்கு முன்பு இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. | Lovers Day 2023 List in TamilRepresentative Image

பிப்ரவரி 10 - Teddy Day

காதலர் வாரத்தின் 4வது நாள் டெடி டே. பொம்மைகள் என்றாலே பெண்களுக்கு பெரும்பாலும் மிகவும் பிடிக்கும். எனவே, இந்த நாளில் ஒரு டெடி பியர் பொம்மையை வாங்கி உங்க பார்ட்னருக்கு பரிசாக கொடுங்கள். இதன் மூலம் நீங்கள் அவர்களின் மீது எவ்வளவு அன்பாக இருக்கிறீர்கள் என்பதை புரிந்துக் கொள்வார்கள். 

லவ்வர்ஸ் டேவை கொண்டாடுவதற்கு முன்பு இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. | Lovers Day 2023 List in TamilRepresentative Image

பிப்ரவரி 11 - Promise Day

உங்க வாழ்க்கை துணை உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் நாள். அதாவது, எந்த காரணத்திற்காகவும், எந்த சூழ்நிலையிலும் ஒருவரையொருவர் பிரியாமல் ஒன்றாக இருப்போம் என்று வாக்குறுதி கொடுக்கலாம். 

லவ்வர்ஸ் டேவை கொண்டாடுவதற்கு முன்பு இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. | Lovers Day 2023 List in TamilRepresentative Image

பிப்ரவரி 12 - Hug Day

காதலர் வாரத்தின் ஆறாவது நாள் ஹக் டே. இந்த நாளில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து உங்கள் காதலாகவும், பாதுகாப்பாகவும் உணரவைக்கும் சிறப்பான நாள். அதாவது, காதலர்களுக்கு இடையேயான் நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு கட்டியணைப்பதன் மூலம் உடலில் உள்ள செரட்டோனின் உள்ளிட்ட ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கம் என்று அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. 

லவ்வர்ஸ் டேவை கொண்டாடுவதற்கு முன்பு இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. | Lovers Day 2023 List in TamilRepresentative Image

பிப்ரவரி 13 - Kiss Day

காதலர் தினத்திற்கு முன்னாடி நாள் கிஸ் டே. அன்பு மற்றும் மரியாதையின் தூய்மையான வடிவத்தை வெளிப்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த நாளில் உங்க பார்ட்னரை முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்துங்கள். காதலர் வாரத்திலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் நாளாகவும் இதை சொல்கிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்