Sun ,Apr 14, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

How to Remove Hand Wrinkles Permanently at home: உங்க கை சுருக்கமாகி வயதான மாறி இருக்கா..? இந்த மாதிரி பண்ணுங்க… கை மென்மையா இருக்கும்...!

Gowthami Subramani June 02, 2022 & 17:15 [IST]
How to Remove Hand Wrinkles Permanently at home: உங்க கை சுருக்கமாகி வயதான மாறி இருக்கா..? இந்த மாதிரி பண்ணுங்க… கை மென்மையா இருக்கும்...!Representative Image.

How to Remove Hand Wrinkles Permanently at home: வெயில் காலத்தில் அனைவருக்கும் முதலில் தோன்றுவது, எங்கே வெயிலில் சென்றால் அழகு குறைந்து விடுமோ என்பது தான். அந்த வகையில், நாம் உடல் முழுவதும் பொலிவுடன் இருப்பதையும், பராமரிப்பதையும் பெரிதாக கருதுகிறோம். குறிப்பாக, வெயில் காலத்தில் உடலில் உள்ள சருமங்கள் வறட்சியின் காரணமாக சுருக்கங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு (How to Remove Hand Wrinkles).

வெயில் காலங்களில் ஏற்படக் கூடிய தோல் உராய்தலால் காரணத்தால் அதிக அளவிலான விளைவுகள் உண்டாகும். எனவே, இந்த கோடை காலங்களில் கை மற்றும் கால்களுக்கு இடையே சீரான இடைவெளி கொடுப்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது (How to Remove Hand Wrinkles Tamil).

இந்தப் பதிவில், கைகளில் ஏற்படும் சுருக்கத்தை எவ்வாறு சரி செய்வது என்பது பற்றி பார்ப்போம். இது முற்றிலும் வீட்டிலேயே உள்ள பொருள்களை உபயோகப்படுத்தி செய்யலாம் மற்றும் இந்த முறை ஒரு நிரந்தர தீர்வைத் தரக் கூடியதாக அமையும் (How to remove wrinkles From Hands Naturally at Home). கீழ்க்கண்ட முறைகளைப் பயன்படுத்தி, கைகளில் வரக் கூடிய சுருக்கங்களைக் குணப்படுத்தலாம். இதனைச் செய்வதால், சருமம் மென்மையாகவும், இளமையாகவும் இருப்பதை உணரலாம்.

நாம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருள்களில் அதிக அளவிலான வைட்டமின் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவ்வாறு எடுத்துக் கொள்ளும் சத்தான உணவுப் பொருள்களின் மூலம், நம் உடல் முழுவதும் ஆரோக்கியத்துடனும், சரும பராமரிப்புடனும் காணப்படும் (Best Treatment for Wrinkled Hands).


Representative Image. கிரீம் எல்லாத்தையும் விடுங்க. இந்த ஜூஸ மட்டும் குடிங்க…. சருமம் எப்படி பொலிவா இருக்கும்னு பாருங்க.


அன்னாச்சி

A picture containing tree, plant, pandanus, pineapple

Description automatically generated

அன்னாச்சி பழத்தில், வைட்டமின் சி சத்து நிரம்பி காணப்படுகிறது. இதனால், சருமப் பிரச்சனைக்கு நல்ல தீர்வைக் கொடுக்க அன்னாச்சி பழம் சிறந்து விளங்குகிறது. அன்னாச்சிப் பழம் சருமத்தில் உள்ள சுருக்கங்களை மறைக்கும் (How to get rid of Hand Wrinkles Permanently).

 • அன்னாச்சிப் பழத்தினுடைய சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • பின்பு, அதனைக் கைகள் முழுக்கத் தடவிக் கொள்ள வேண்டும்.
 • அதன் பின், 20 நிமிடங்கள் அப்படியே வைத்துப் பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கையைக் கழுவி விடவும் (How to Remove Hand Wrinkles Permanently at Home).

அரிசி மாவு

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவான அரிசியில் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால், அரிசி உட்புறம் மட்டுமல்ல, வெளிப்புறத்திலும் சருமத்துக்குப் பலன்களைத் தரக் கூடியதாக அமைகிறது. அரிசி மாவை வைத்து எப்படி சுருங்கிய தோலை எவ்வாறு மென்மையாக மாற்றலாம் என்பதைப் பார்க்கலாம் (How to Remove Wrinkles Quickly).

 • ஒரு கிண்ணத்தில் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • பின் அதில், சிறிதளவு நீர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல செய்ய வேண்டும்.
 • இந்த பேஸ்டை கைகளில் உள்ள சுருக்கங்கள் இருக்கும் பகுதிகளில் தடவி அதனை நன்றாகக் காய விட வேண்டும்.
 • சிறிது நேரம் கழித்து கையை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தற்போது உங்கள் சருமம் மென்மையாக இருப்பதை உணரலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம், சுருக்கங்கள் நன்றாகக் குறையும்.

Representative Image. பெட்ரோல் டேங்கிற்கு பெட்ரோல் எப்படி வருது..? இதுல யார் யாருக்குலாம் லாபம்…? நீங்க கண்டிப்பாக தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்….!


பால்

A glass of milk with a straw

Description automatically generated with medium confidence

பாலில் புரதம் மற்றும் வைட்டமின் ஏ, பி1, பி2, பி12, டி போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும், பாலில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன (Homemade Wrinkle Remover).

பால் நம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் போது, நம் உடலில் ஏற்படும் சரும மாற்றங்களை எளிதில் உணரலாம். எனவே, பால் சருமப் பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கும், ஈரப்பதம் கிடைக்கவும் பால் உதவுகிறது.

 • பால் மூலம் எவ்வாறு கையில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
 • இதைச் செய்யும் முன்பு, கையை நன்றாக ஸ்கிரப் செய்து கொள்ள வேண்டும்.
 • ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் அளவிற்கு பாலை சேர்க்க வேண்டும்.
 • அதனுடன் வாசனை வேண்டுமானால், இரண்டு சொட்டு பாதாம் எண்ணெய் அல்லது ரோஸ் எண்ணெயைக் கலந்து கொள்ளலாம்.
 • பின், அந்த பாத்திரத்தினுள் கையை வைத்து சுமார் 15-20 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும்.
 • அதன் பிறகு, கைகளை வெளியே எடுத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்வதன் மூலம் சுருக்கங்கள் குறைவதை நாம் உணரலாம்.

வாழைப்பழம்

A plate of food

Description automatically generated with low confidence

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் சருமத்தைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. இதன் மூலம், சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கலாம் (Hand Wrinkles Home Remedy).

 • வாழைப்பழத்தைச் சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
 • பின் அதனை பேஸ்ட் போலச் செய்து சுருக்கம் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.
 • குறைந்தது 30 நிமிடங்களுக்கு வாழைப்பழ பேஸ்டை அப்படியே வைக்க வேண்டும்.
 • அதன் பிறகு, வெது வெதுப்பான நீரில் கைகளை அலச வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்து வர சருமத்தில் சுருக்கங்கள் குறையும்.

Representative Image. PM Kisan-ல் ரூ.2000 அனுப்பியாச்சு… நீங்க இன்னுமா செக் பண்ணாம இருக்கீங்க…!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்