Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஹேர் ஜெல் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

Vaishnavi Subramani Updated:
ஹேர் ஜெல் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் Representative Image.

ஆண்கள் மட்டும் பயன்படுத்தும் ஹேர் ஜெல் இப்பொழுது பெண்களும் பயன்படுத்துகின்றனர். அவர்களின் முடியின் அமைப்பு மாறாமல் இருக்கவும் மற்றும் முடியில் ஈரப்பதம் குறையாமல் இருப்பதற்கும் உதவும். இதை வெளியில் செல்லும் போது அதிகமாகவும் மற்றும் விழாக்களில் பார்ப்பதற்கு அழகாக இருப்பதற்கும் இதை அதிகளவில் ஆண்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் பெண்கள் கல்யாண விழாக்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் போது புதிதாக ஹேர் ஸ்டைல் செய்தாலும் இதைப் பயன்படுத்துவார்கள். இந்த பதிவில் ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றி பார்க்கலாம்.

ஹேர் ஜெல் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் Representative Image

ஹேர் ஜெல் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள்

✤ ஹேர் ஜெல் என்பது முடிக்கு ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதம் உள்ளதாகப் பார்த்து வாங்க வேண்டும். கடைகளில் முடிக்கு என விற்கும் மாய்சுரைஸர் வாங்கி பயன்படுத்த வேண்டும். அது முடிக்கு ஆரோக்கியத்தையும் மற்றும் அதிகளவில் முடி வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

✤ கடைகளில் விற்கும் ஹேர் ஜெல் எந்த ஜெல்லில் குறைந்த அளவில் ரசாயன கலவைகள் உள்ளது எனப் பார்த்து வாங்க வேண்டும். சிலரது முடிக்குச் சேராமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

✤ அதனால் கடைகளில் ஹேர் ஜெல் வாங்கும் போது கவனமாக வாங்க வேண்டும். இல்லை. என்றால் உங்கள் முடிக்குப் பலவிளைவுகளை ஏற்படுத்தும். அதை நாம் இங்குத் தீமைகளில் பார்க்கலாம்.

✤ ஜெல் பயன்படுத்தினால் உங்கள் முடி களையாமல் மற்றும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வெளியில் காற்று மற்றும் தூசிகள் அடித்தாலும் இது களையாமல் இருக்கும்.

✤ வானிலை மாற்றங்கள் அதிகமாக இருந்தாலும் உங்களது முடிகள் மாறாமல் அப்படியே இருக்கும். பல ஹேர் ஸ்டைல் செய்தாலும் அந்த ஹேர் ஸ்டைலுக்கு ஏற்றமாறி மாறும். அந்த ஸ்டைலை மாறினாலும் ஹேர் ஜெல் பயன்படுத்திய பிறகு அதற்கு ஏற்ற மாறி முடி மாறிவிடும். முடிகளின் ஹேர் ஸ்டைலுக்கு எப்படி மாறும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

ஹேர் ஜெல் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் Representative Image

முடியின் அடர்த்தி

✤ முடியின் அடர்த்தி மிகவும் குறைவாக இருந்தாலும் இந்த ஹேர் ஜெல் பயன்படுத்திய பிறகு, முடி முன்பை விட இப்பொழுது அடர்த்தியாகக் காட்டும். முடியில் எந்த விதமான ஹேர் ஸ்டைல் செய்தாலும் இந்த ஹேர் ஜெல் பயன்படுத்திய பிறகு, அந்த ஹேர் ஸ்டைல் மாறாமல் வைத்துக் கொள்ளும். அதிகமாக காற்றுவீசுவது மற்றும் தூசிகள் அதிகமாகப் பறப்பது இது போன்றவையில் இருந்து இது பாதுகாக்கும். வெயிலிருந்து கூட பாதுகாப்பாக வைத்து இருக்கும்.

ஹேர் ஜெல் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் Representative Image

முடிக்கான புதிய ஹேர் ஸ்டைல்

✤ சாதாரணமாக எப்பொழுது முடிக்கு ஹேர் ஸ்டைல் செய்து வெளியில் சென்று வீடுதிரும்பினால் போகும்போது இருந்த ஹேர் ஸ்டைலும் வந்த உடன் இருந்தால் ஹேர் ஸ்டைலும் முழுவதுமாக மாறி இருக்கும். இந்த ஹேர் ஜெல் பயன்படுத்தினால் முடிக்கு ஒரு முறை ஹேர் ஸ்டைல் செய்து இந்த ஹேர் ஜெல் தேய்த்தால் வெளியில் சென்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தால் எப்படி ஹேர்ஸ்டைல் இருந்தது அதே போல் வரும் போதும் இருக்கும். எந்த விதமான மாறுபாடுகளும் மற்றும் முடி களைவது மற்றும் ஒன்றுடன் ஒன்று ஒட்டுவது என எதுவும் இருக்காது.

ஹேர் ஜெல் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் Representative Image

முடியின் இயல்பான அமைப்பு

✤ பலருக்கும் சாதாரணமாக நேராக இருக்கும் முடிக்கு ஹேர் ஜெல் பயன்படுத்துவது என்பது எளிது. ஆனால் சுருள்முடி மற்றும் வளைந்து நெளிந்து இருக்கும் முடிகளின் அமைப்பாக இருந்தால் அதில் சாதாரணமாக தலைசீவினால் அதைச் சரிசெய்வது என்பது கடினம். ஆனால் இந்த ஹேர் ஜெல் பயன்படுத்தினால் சுருள் முடிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மற்றும் களையாமல் இருக்கும். சரியான நேரத்தில் மாஸ்சுரைஸர் செய்தால் போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உங்களது ஹேர்ஸ்டைல். இதைத் தலைக்குக் குளித்து ஈரமாக இருக்கும் போது இந்த ஹேர் ஜெல் பயன்படுத்தினால் நன்றாக ஹேர் ஸ்டைல் களையாமல் இருக்கும்.

ஹேர் ஜெல் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் Representative Image

ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

✤ இதில் அதிகளவில் ரசாயன உள்ள ஹேர் ஜெல் வாங்கி பயன்படுத்தினால் அது விரைவில் முடியில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் வறட்சி எனப் பல பிரச்சனைகள் வரும். அதனால் ஹேர் ஜெல் வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும்.

✤ இதைத் தினமும் பயன்படுத்தினால் பொடுகுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இது முடியின் வேர் வரை செல்வதால் அதில் உண்டாக்கும் எண்ணெய்ப் பசை உடன் இந்த ஹேர் ஜெல்லின் வேதிப்பொருள்கள் வினைப்புரிந்து காலப்போக்கில் பொடுகுகள் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமையும்.

ஹேர் ஜெல் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் Representative Image

✤ முடிகளின் ஈரப்பதம் குறைந்து வறட்சியாக மாறிய பிறகு, அது தொடர்ந்தால் விரைவில் முடி உதிர்வு ஆரம்பிக்கும் அது விரைவில் மிக அதிகமாக முடி உதிர்வு ஏற்படும்.

✤ அதனால் முடியில் எரிச்சல் மற்றும் அரிப்புகள் எனப் பல பிரச்சனைகள் ஏற்படும். ஹேர் ஜெல்லில் உள்ள அமிலங்களால் முடியின் வேர்வரை செல்வதால் இந்த அரிப்பு மற்றும் எரிச்சல் எனப் பல ஏற்படும். இதனால் முடியில் ஈரப்பதம் அதிகளவில் குறையும்.

✤ இந்த ஹேர் ஜெல் வாங்கும் போது பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதைச் சிலநாட்கள் பயன்படுத்திய பிறகு, முடியில் மாற்றங்கள் அரிப்பு போன்றவை ஏற்பட்டால் உடனே அந்த ஹேர் செல்லைப் பயன்படுத்துவதை நிறுத்தி விடவேண்டும். சிலநாட்களுக்கு எந்த ஹேர் ஜெல் பயன்படுத்தாமல் முடியைப் பழைய மாதிரி கொண்டு வர வேண்டும். அதற்குப் பின் வேறு ஏதாவது ஹேர் ஜெல் பயன்படுத்தலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்