Thu ,Feb 29, 2024

சென்செக்ஸ் 72,304.88
-790.34sensex(-1.08%)
நிஃப்டி21,951.15
-247.20sensex(-1.11%)
USD
81.57
Exclusive

How to Remove Upper Lip Hair at Home: பெண்களே.. ஒரே வாரத்தில் உதட்டின் மேலிருக்கும் முடி காணாமல் போய்விடும்... இத பண்ணுங்க...

Nandhinipriya Ganeshan May 26, 2022 & 15:00 [IST]
How to Remove Upper Lip Hair at Home: பெண்களே.. ஒரே வாரத்தில் உதட்டின் மேலிருக்கும் முடி காணாமல் போய்விடும்... இத பண்ணுங்க...Representative Image.

Face Beauty Tips for Women: பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனையே உதட்டிற்கு மேலே வளரும் மீசை முடிதான். இதற்கு என்ன காரணம் என்று யோசித்திருக்கிறீர்களா? பெண்களுக்கு இந்த மாதிரி உதட்டிற்கு மேல் முடி வளர்வதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தான் காரணம். இதனால், பல பெண்கள் பியூட்டி பார்லருக்கு சென்று த்ரெட்டிங் செய்வார்கள்.

ஆனால், அது வேதனையான வலியை கொடுக்கும். அந்த நேரத்தில் தான் பெண்கள், வலியே இல்லாமல் மீசை முடியை நீக்குவதற்கான வழியை தேடி அலைவார்கள். உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க பல அழகு சாதனப் பொருட்கள் இருக்கின்றன. ஆனால், அதெல்லாம் உதட்டின் மேல் இருக்கும் முடியை போக்காது. ஆனால், வீட்டில் இருக்கும் சில பொருட்களை (Home remedy for upper lip hair) வைத்து உதட்டின் மேல் வளரும் முடியை ஈஸியாக நீக்கிவிடலாம். 

மீசை முடியை அகற்றுவதற்கான வீட்டு வைத்தியம்:

சோள மாவு: 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு, 2 டீஸ்பூன் பால் இரண்டையும் சேர்த்து பேஸ்ட் செய்து, உதட்டிற்கு மேலே தடவி காய வைத்து வேகமாக உரித்து எடுத்தால், உதட்டின் மீது இருக்கும் முடி நீங்கிவிடும். அதுமட்டுமல்லாம்ல், உதட்டிற்கு மேலே வளரும் முடியின் வளர்ச்சியும் தடுக்கப்படும். 

Also Read: உங்க வீட்டை அலங்கரிக்கும் அழகான குட்டி குட்டி செடிகள்...!! இனி உங்க வீடும் மாடர்னாக தான் இருக்கும்..!!

கடலை மாவு: 1 ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் தயிர் அல்லது பால், 1 சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றை கலக்கி, அதை உதட்டிற்கு மேலே தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். பின்னர், 15-20 நிமிடங்கள் அதை காயவிட்டு மெதுவாக தேய்க்கவும். இறுதியில், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால், உதட்டிற்கு மேலே வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். 

Also Read: கோடை வெயிலை சமாளிக்க புத்துணர்ச்சி தரும் சூப்பரான டிப்ஸ்...!!

முட்டையின் வெள்ளைக்கரு: ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு, 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொண்டு, அதை உதட்டிற்கு மேல் பகுதியில் தடவி, 15-20 நிமிடம் விட்டு எதிர் திசையை நோக்கி உரித்து எடுக்கவும். பின்னர், குளிர்ந்த நீரால் கழுவிடுங்க.

Also Read: சம்மர்ல முகத்துல ஆயில் அதிகமா வடியுதா...? இதோ சிம்பிளான ஆயுர்வேதிக் ஃபேஸ் பேக்ஸ்....!!

உருளைக்கிழங்கு ஜூஸ்: 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை இரவில் ஊறவைத்து காலை அதை எடுத்து அரைத்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு, 1 டேபிள் ஸ்பூன் தேன், மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை உதட்டிற்கு மேலே தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவிடுங்க. வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால், உதட்டிற்கு மேல் இருக்கும் முடி காணாமல் போய்விடும். 

Also Read: செலவில்லா ப்யூட்டி டிப்ஸ், கருமையான முடி வேண்டுமா! வீட்டிலே பெறலாம்… இந்த வழிமுறையை செய்து பாருங்க ரிசல்ட் கண் முன்னே தெரியும்! 

தேன்: சர்க்கரை 3 டேபிள் ஸ்பூன், தேன் 1 டேபிள் ஸ்பூன் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் வைத்து சூடேற்ற வேண்டும். பின்னர் அதை இறக்கி அதில் எலுமிச்சை சாறு சில துளி சேர்த்து கலந்து, உதட்டின் மேல் தடவிக் கொள்ளவும். பின் அதன் மீது காட்டன் துணி அல்லது வேக்ஸிங் ஸ்ட்ரிப் வைத்து காய விடவும். பின் அதை உரித்து எடுத்து, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடுங்கள். அதன்பின், மாய்ஸ்சுரைசரை தடவி கொள்ளுங்கள். 

Also Read: உங்களுக்கு சுருட்டை முடியா..?? அடிக்கடி முடி சிக்கு பிடிக்குதா...? அதை தடுக்க சில கிச்சன் பொருட்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்