Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

குளிர்கால ஸ்னாக்ஸ் ரெசிபி: மழைக்கு சூடா மட்டன் கீமா சமோசா.. ரெசிபி இதோ..

Nandhinipriya Ganeshan November 12, 2022 & 16:00 [IST]
குளிர்கால ஸ்னாக்ஸ் ரெசிபி: மழைக்கு சூடா மட்டன் கீமா சமோசா.. ரெசிபி இதோ..Representative Image.

வெஜிடபிள் சமோசா, ஆனியன் சமோசா, உருளைக்கிழங்கு சமோசா என சமோசாவில் நிறைய வகை இருக்கு. ஆனால், இந்த மழைக்கு புதுவிதமான சமோசா செய்யலாம் வாங்க. இது அசைவ பிரியர்களுக்கு என்றே ஸ்பெஷலான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட. மழை நேரத்தில் சூடான டீயுடன், மொறு மொறு சமோசா சாப்பிட்டால் அப்படி இருக்கும். மட்டன் கீமா சமோசா எப்படி செய்வது? 

மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி: அவல் இருக்கா? சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க...

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

மட்டன் - 1/2 கிலோ (சிறு துண்டுகளாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

கரம் மசாலா பொடி - 1 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

பொதினா - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

மைதா மாவு - 300 கிராம்

எண்ணெய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

தயிர் - 1 டீஸ்பூன்

பஜ்ஜி மாவு இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் மொறு மொறு பஜ்ஜி செய்வது எப்படி?

குளிர்கால ஸ்னாக்ஸ் ரெசிபி: மழைக்கு சூடா மட்டன் கீமா சமோசா.. ரெசிபி இதோ..Representative Image

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் மைதா மாவை கொட்டி அதில் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளுங்கள். 10 நிமிடம் கழித்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து, சப்பாத்தி போல் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும். 

ரொட்டிகளை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், மட்டனை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதங்கியதும் மட்டனை சேர்த்துக் கொள்ளவும்.

KFC சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்.. 

பின்பு, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் நிறம் மாறும் வரை வதக்கவும். இத்துடன் தயிர், கரம் மசாலா, கொத்தமல்லி, பொதினா சேர்த்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்துவிட்டு ஆற வையுங்கள்.

அடுத்ததாக, சுட்டு வைத்துள்ள சப்பாத்திகளை கோன் வடிவில் சுருட்டி அதில் மசாலாவை நிரப்பி மூடி விடவும். தற்போது கடாயில் வறுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொன்னிறமாக பொறித்து எடுத்தால், சுவையான மொறுமொறு மட்டன் கீமா சமோசா ரெடி.

மொறு மொறு சமோசா இப்படி செஞ்சி பாருங்க...!!

இதனை உங்களுக்கு விருப்பமான சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னி சேர்த்து சாப்பிட்டால், சுவை தூக்கலாக இருக்கும். இந்த மழைக்கு டீயுடன் சேர்த்து சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்