Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How To: தீயாய் பரவும் தட்டம்மை நோய்.. இக்கொடிய நோயிலிருந்து உங்க குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

Nandhinipriya Ganeshan Updated:
How To: தீயாய் பரவும் தட்டம்மை நோய்.. இக்கொடிய நோயிலிருந்து உங்க குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?Representative Image.

குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய வைரஸ் பாதிப்புகளில் ஒன்று தான் அம்மை. அதிலும், தட்டம்மை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்மை நோய்களில் ஒன்று. ஏன் சிலநேரங்களி உயிருக்கே ஆபத்தாகும் அளவிற்கு கொடியது இந்த தட்டம்மை நோய். அதுமட்டுமல்லாமல், இது எளிதில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இந்தநிலையில், தற்போது மும்பையில் திடீரென்று தட்டம்மை ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பல மாநிலங்களிலும் இந்த நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. எனவே, உங்க குழந்தைகளை இந்நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். வாங்க, தட்டம்மை நோய் என்றால் என்ன, அறிகுறிகள், வராமல் தடுப்பது எப்படி, வந்தால் குணப்படுத்துவது எப்படி, வராமல் தடுக்க தடுப்பூசிகள் இருக்கிறதா? பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

How To: தீயாய் பரவும் தட்டம்மை நோய்.. இக்கொடிய நோயிலிருந்து உங்க குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?Representative Image

தட்டம்மை நோய் என்றால் என்ன?

சின்னம்மை, அக்கி அம்மை, அம்மைக்கட்டு என இதில் பலவகைகள் இருந்தாலும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது தட்டம்மை தான். பாராமேக்ஸிவைரஸ் குடும்பத்தில் இருக்கும் 'மீசிஸ்ட்' என்ற வைரஸ் கிருமி தான் இக்கொடிய தட்டம்மை நோயை ஏற்படுத்துகிறது. இந்த நோய் முதலில் நுரையீரல் அமைப்பு, மூச்சு குழாய்களை பாதித்து, இரத்தம் வழியாக உடல் முழுவதும் பரவுகிறது. 

தட்டம்மை அறிகுறிகள் என்ன?

பொதுவாக, எந்த வைரஸ் தொற்றாக இருந்தாலும் ஒரு நபரை பாதிப்பதற்கு குறைந்த 7 நாட்கள் தேவைப்படும். ஆனால், தட்டம்மை நோய்க்கு, 10-12 நாட்களில் தான் அறிகுறிகளை கண்டுபிடிக்க முடியும். 

  • கடுமையான காய்ச்சல்
  • மூக்கு ஒழுகுதல்
  • தொடர் இருமல்
  • தும்மல்
  • தொண்டை வலி
  • கண்கள் சிவப்பாக மாறி நீர் வடிதல்
  • உடல் முழுவதும் சிவப்பு நிற தடுப்பிகள்
How To: தீயாய் பரவும் தட்டம்மை நோய்.. இக்கொடிய நோயிலிருந்து உங்க குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?Representative Image

தட்டம்மைக்கான சிகிச்சைகள்:

வைரஸ் தொற்றால் ஏற்படும் இந்த தட்டம்மை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே வைரஸை வெளியேற்றும் வரை, இதற்கு நேரடி மருந்துகள் கிடையாது.

சிலர் தட்டம்மை வந்ததை அறிந்து வேப்பிலையை அரைத்து பூசுவார்கள். ஆனால், இது மற்ற அம்மை போல் கிடையாது. உயிரையே குடிக்கும் அளவிற்கு கொடியது இந்த வைரஸ் அதனால் அசால்ட்டாக எண்ணிவிட கூடாது. எனவே, அறிகுறிகள் தெரிந்தவுடன் சற்றும் தாமதிக்காமல், மருத்துவரை சந்திப்பது நல்லது. 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுவதற்கு உரிய மருந்துகள், அந்தந்த வயதினருக்கு ஏற்றவாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். குறிப்பாக, வைட்டமின் ஏ மருந்துகள் பரிந்துரைப்பர். அதுமட்டுமல்லாமல், வைட்டமின் ஏ சத்துநிறைந்த உணவுகளை இந்த சமயத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம். 

How To: தீயாய் பரவும் தட்டம்மை நோய்.. இக்கொடிய நோயிலிருந்து உங்க குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?Representative Image

தட்டம்மை பாதிப்பை தடுக்கும் தடுப்பூசி:

அம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். இதை தடுக்க குழந்தை பிறந்த 9வது மாதத்தில் ஒரு தடுப்பூசியும் 15 - 18 மாதங்களுக்கு ஒரு தடுப்பூசியும் போடப்பட வேண்டும். 'எம்.எம்.ஆர் தடுப்பூசி' என்ற தடுப்பூசி 15-18 மாதங்களில் போடப்படும். இது குழந்தைகளுக்கு தட்டம்மையும் பாதிப்பு, அறிகுறிகள் தீவிரமாக மாறாது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் தட்டம்மையின் முழுவதுமாக தவிர்க்க முடியும். அதுமட்டுமல்லாமல், மீசில்ஸ், ரூபெல்லா, மம்ஸ் போன்ற மற்ற அம்மை வைரஸ்களில் இருந்தும் குழந்தை பாதுகாப்பாக இருக்கும். எனவே, கட்டாயம் உங்கள் குழந்தைகளுக்கு போட்டுக்கொள்ளுங்கள். 

How To: தீயாய் பரவும் தட்டம்மை நோய்.. இக்கொடிய நோயிலிருந்து உங்க குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?Representative Image

தட்டம்மை வராமல் தடுப்பது எப்படி?

குழந்தையோ பெரியவர்களோ தட்டம்மை பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

முதலில் நாம் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

காலை, மாலை என இரண்டு வேளையும் குளிக்க வேண்டும்.

அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். 

இளநீர், பிரஷ் ஜூஸ், பழங்கள், பால், மோர் என நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவுடன் தினமும் ஒரு கீரை வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்