Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,390.50
-19.89sensex(-0.03%)
நிஃப்டி22,932.45
-24.65sensex(-0.11%)
USD
81.57
Exclusive

Nayanthara Wedding Gifts: நடிகை நயன்தாராவுக்கு வந்த திருமண பரிசுகள் ஒவ்வொன்றும் எவ்வளவு விலை தெரியுமா...??? பரிசுனா இப்படி இருக்கனும்...!!

Nandhinipriya Ganeshan June 11, 2022 & 13:00 [IST]
Nayanthara Wedding Gifts: நடிகை நயன்தாராவுக்கு வந்த திருமண பரிசுகள் ஒவ்வொன்றும் எவ்வளவு விலை தெரியுமா...??? பரிசுனா இப்படி இருக்கனும்...!!Representative Image.

Nayanthara Wedding Gifts: தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும், நயன்தாராவுக்கும் பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் கலந்துக் கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு தம்பதியராக முதன் முதலில் நேற்று காலை திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்கள்.

கடந்த ஒரு வாரமாகவே இவர்களை பற்றிய செய்தி தான் சோசியல் மீடியா முழுவதும் அனல் பறக்க பரவிவருகிறது. அந்த வகையில், இந்த ஜோடிக்கு திருமண பரிசுகள் பல்வேறு திரைப்பிரபலங்களிடம் இருந்து குவிந்த வண்ணம் இருக்கின்றது. அதன் படி, நயன்தாராவிற்கு இந்திய நடிகைகள் என்னென்ன பரிசுகளை அளித்துள்ளார்கள் என்று பார்க்கலாம். ஆனால், அந்த பரிகளெல்லாமே ஹை ரேட் தானாம். 


Nayanthara Wedding Jewellery: நயன்தாரா திருமணத்தில் தாலி மட்டும் தான் தங்கம்.... வாய்பிளக்க வைக்கும் நகைகளின் மதிப்பு....!!!


அதற்கு முன்பு, நயன் தனது கணவருக்காக மிகப்பெரிய பரிசு ஒன்றை அளித்துள்ளார். அதுதான் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அது என்னனு தான கேட்கிறீங்க.. நம்ம நயன்தாரா தனது கணவருக்காக 20 கோடி ரூபாயில பங்களா ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறாராம். இதை பார்த்த விக்னேஷ் சிவன் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாராம்.

அதுமட்டுமல்லாமல், நயன்தாரா விக்னேஷ் சிவனின் சகோதரி ஐஸ்வர்யாவுக்கும் 30 சவரன் தங்க நகைகளை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், அவர்களது உறவினர்களுக்கும் பல பரிசுகளையும் வாரி வழங்கியுள்ளாராம். பின்ன 7 வருச காதல்னா சும்மாவா? இந்த காதல் ஜோடியின் திருமணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பப் பார்க்க வைத்துள்ளது. 

சரி இப்போது நடிகைகள் நயன்தாராவிற்கு என்னென்ன பரிசுகளை கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம். நடிகை சமந்தாவும் நயன்தாராவும் சமீபத்தில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருப்பார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே, இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாம். நயன் திருமணத்திற்கு சில தவிர்க்க முடியாத காரணங்களால் சமந்தாவால் வரமுடிவில்லையாம். ஆனால், நயன்தாராவிற்காக கல்யாண பரிசை மட்டும் தவராமல் கொடுத்திருக்கிறாராம். நயன்தாராவிற்கு தோடு ரொம்ப பிடிக்குமாம். அதனால், சமந்தா நயனுக்காக வைர தோடு (Cartier brand) ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். 

அதேபோல், ரஷ்மிகா மந்தனா நயன்தாராவிற்காக வைர கற்கள் பதித்த காலணிகளை (Stilettos) பரிசாக அளித்துள்ளார். அதோடு விக்னேஷ் சிவனுக்கு விலையுயர்ந்த ஒயின் பொக்கேவை (Expensive Wine Bouquet) பரிசாக கொடுத்திருக்கிறாராம். இந்த மாதிரி மற்ற நடிகைகளும் பரிசுகளை வழங்கியுள்ளார்களாம். அதை சுருக்கமாக பார்க்கலாம்.

தமன்னா - வைர கற்கள் பதித்தி கொலுசு (blue nile brand)

காஜல் அகர்வால் - டிசைனர் ஜிவல்லரி பாக்ஸ் (Louis vuition)

ராகுல் ப்ரீத் சிங் - 20 வெல்வெட் மேட் லிப்ஸ்டிக்ஸ் (christian Louboutin rough brand)

கீர்த்தி சுரேஷ் - ஜோடி டிசைனர் சன்கிளாசஸ் (prada brand)

சாய் பல்லவி - மெட்டாலிக் ஹீல் ஷூஸ் (Gucci brand)

டாப்ஸி - விலையுயர்ந்த பர்வியூம் செட் (giorgio armani)

அனுஷ்கா ஷெட்டி - வைர நெக்லஸ்

ராசி கண்ணா - தங்கம் மற்றும் வைரத்தால் ஆன விநாயகர் சிலை

த்ரிஷா - அழகான வைரம் பதித்த ரோஜா தங்க நெக் பீஸ்

ஸ்ருதிஹாசன் - வைர கற்கள் பதித்த வளையல் ( chopard brand)


Nayanthara Wedding Saree: நயன்தாரா திருமணத்தில் அணிந்திருந்த புடவையில் இத்தனை அம்சங்களா....??


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்