Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Cure Madras Eye at Home in Tamil: 'மெட்ராஸ் ஐ' குணமாக என்ன பண்ணனும்?

Nandhinipriya Ganeshan July 29, 2022 & 16:45 [IST]
How to Cure Madras Eye at Home in Tamil: 'மெட்ராஸ் ஐ' குணமாக என்ன பண்ணனும்?Representative Image.

How to Cure Madras Eye at Home in Tamil: இமையையும் விழியையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றே 'மெட்ராஸ் ஐ' (விழி வெண்படல அழற்சி) என்று அழைக்கப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் இந்நோயானது ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் என்ற வைரஸால் ஏற்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் கோவப்பழம் போன்று சிவந்திருக்கும். அதனால் அவர்களை பார்ப்பதாலே நமக்கும் வந்துவிடும் என்று பயந்து ஓடுவோம். ஆனால், உண்மையில் கண்களை பார்ப்பதனால் இந்நோய் பரவுவது கிடையாது. 

முதல் முறை உடலுறவின் போது இந்த 4 விஷயத்தை மறந்திட கூடாது..

அறிகுறிகள்:

கண்களில் வீக்கம்

எரிச்சல்

நீர் வடிதல்

சிவந்து காணப்படுதல்

அரிப்பு

கண்களில் பச்சை நிற கழிவு

கண்களில் அதீத வலி

பெண்களே உங்க மார்பு ரொம்ப சின்னதா இருக்கா? ஒரே மாதத்தில் பெரிதாக்க இத ட்ரை பண்ணுங்க.. 

எப்படி பரவுகிறது?

இந்நோயை ஏற்படுத்தக் கூடிய வைரஸானது காற்றில் எளிதில் பரவக்கூடியது. இதனால் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானலும் தொற்றிக் கொள்ளலாம். உதாராணமாக, இந்த வைரஸ் நம் விரல்களில் இருந்தால் நாம் கண்களை தொடும்போது எளிதில் கண் விழிக்குள் தங்கிவிடும். நாட்கள் செல்ல செல்ல இரண்டு கண்களிலும் பரவத்தொடங்கும்.

இதனால் கண்கள் வீங்கி, கண்களிலிருந்து திரவம் வடிந்து கொண்டே இருக்கும். அப்போது அவர்கள் பயன்படுத்திய பல பொருட்களை மற்றொருவருர் பயன்படுத்துவதன் மூலமும் எளிதில் பரவுகிறது. 

இந்த கஷாயத்த குடித்தால் எப்படியாபட்ட சளி, இருமலும் ஒரே நாளில் பறந்துப்போய்விடும்.. வெறும் நாலே பொருள் தான்..

சில ஆலோசனைகள்!

மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவக்கூடியது என்பதால், வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலேயே தனித்திருப்பது நல்லது.

மெட்ராஸ் ஐ’ வந்தவர்கள், நாள்தோறும் மூன்று முறை குளிர்ந்த நீரினால் கண்களை கழுவ வேண்டும். 

கண்ணில் மருந்து போட்டுக் கொள்ளும்போது அல்லது கண்ணில் கை வைத்தாலோ உடனே கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

நீங்க பயன்படுத்திய தலையணை, துண்டு, கைக்குட்டை, சோப்பு போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிரக்கூடாது. 

அடிக்கடி கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். டிவி மற்றும் மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 

கண்களில் வெயில் படாமல் இருக்கவும், பரவுவதை தடுக்கவும் கூலிங்கிளாஸ் அணியலாம்.

பாதிக்கப்பட்டவர்கள் அந்த சமயத்தில் நீச்சல் குளம், உடற்பயிசிக்கூடம் போன்ற இடங்களை தவிர்க்கலாம்.

மெட்ராஸ் ஐ’ 5 நாட்களில் குணமடையக் கூடியது என்றாலும், ஒரு சிலருக்கு பார்வையிழப்பை ஏற்படுத்தலாம். அதனால் அலட்சியம் காட்டாமல் கண் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது.

சானிட்டரி நாப்கின்களில் மறைந்திருக்கும் ஆபத்து.. தப்பிப்பது எப்படி? 

வீட்டு வைத்தியங்கள்:

வெதுவெதுப்பான பால் மற்றும் தேனை சம அளவு எடுத்து கலந்து, அதில் பஞ்சை நனைத்து கண்களின் மீது வைப்பதன் மூலம் சற்று நிவாரணம் கிடைக்கும்.

தினமும் இரண்டு முறை ஒரு சொட்டு தேனை கண்களில் விடுவதன் மூலம் கண் எரிச்சல், அரிப்பு நீங்கும்.

கற்றாழை ஜெல்லை தண்ணீரில் கலந்து கண்ணைக் கழுவினால் விரைவில் மெட்ராஸ் ஐ’ குணமாகும். இயற்கையான கற்றாழை ஜெல்லை பயன்படுத்துங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்