பொங்கலின் போது மதிய உணவானது தலைவாழை இலையில் எல்லா சுவைகளுடன் கூடிய உணவுகளால் நிரப்பப்பட்டு பரிமாறுவது தான். அன்று நாம் சாப்பிடும் மதிய உணவை அடுச்சுக்க அளவே இல்லை. அப்படி வாழ இலையில் சாப்பாடு, சாம்பார், கூட்டு, பொரியல், இனிப்பு, ரசம், தயிர், அப்பளம் என்று தடபுடலா இருக்கும். அதில் முக்கியமாக பூசணிக்காய் பொரியல் இல்லாமல் விருந்து இருக்கவே இருக்காது. இதனை கடவுளுக்கும் படைப்பது வழக்கம். இந்த பதிவில் பொங்கலின் மதிய உணவாக பூசணிக்காய் பொரியல் எப்படி செய்யலாம் என்று பாப்போம்.
மஞ்சள் பூசணிக்காய் - 1/4 கிலோ
பச்சை மொச்சை - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 12
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - தேவைக்கேற்ப
முதலில் பச்சை மொச்சையை குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைக்கவும், சூடான பின்பு எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்துக்கொள்ளவும்.
அவை பொறித்த பின்னர் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பொன்னிறமாக மாறிய பின்னர் அதில் நறுக்கி வைத்த பூசணிக்காயை சேர்த்து கிளறிவிடவும்.
பூசணிக்காய் வதங்கிய பின்னர் வேக வைத்த பச்சை மொச்சையை சேர்த்து ஒன்று சேர கிண்டு விடுங்கள்.
எல்லாம் நன்கு வதங்கிய பின்பு உப்பு, சாம்பார் தூள் சேர்த்து கிளறிய பிறகு தேங்காய் துருவலை சேர்க்கவும்.
இறுதியாக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும். அவ்ளோ தான் சூடான சூப்பரான பூசணிக்காய் பொரியல் தயார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…