Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் சிவப்பு அவல் பொங்கல் செய்வது எப்படி? | Red Aval Pongal Recipe in Tamil

Priyanka Hochumin Updated:
உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் சிவப்பு அவல் பொங்கல் செய்வது எப்படி? | Red Aval Pongal Recipe in TamilRepresentative Image.

நம்முடைய கலாச்சாரத்தின் படி பொங்கலன்று சூரிய கடவுளை வேண்டி பொங்கல் வைப்பது வழக்கம். அதிலும் சக்கரைப் பொங்கல் மற்றும் வென் பொங்கல் வைத்து சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் இந்த பொங்கலில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட தீர்மானம் செய்பவர்களுக்கு இந்த பதிவு சிறந்ததாக இருக்கும். குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருக்கும் புத்துணர்ச்சியான சிவப்பு அவல் பொங்கல் எப்படி செய்வது என்று பாப்போம்.

உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் சிவப்பு அவல் பொங்கல் செய்வது எப்படி? | Red Aval Pongal Recipe in TamilRepresentative Image

சிவப்பு அவலின் நன்மைகள்

அவல் சீக்கிரம் செரிமான ஆகும் என்பதால் உடலுக்கு வரவிருக்கும் பல நோய்களை தடுக்கும். மேலும் எந்தெந்த காரணங்களால் நோய்கள் வருமோ அதனை தடுக்கும். உதாரணமாக ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களை அதிகரித்து உடற்சோர்வு ஆகாமல் தடுக்கும். நம் உடலில் இருந்து வெளியேறாமல் தங்கியிருக்கும் தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை அதிகரிக்காமல் காக்கும். சுற்றுச்சூழல் மாற்றத்தினால் உடல் சூடாகி சரும பிரச்சனை, வாய்ப்புண் உள்ளிட்ட நோய்கள் ஏற்படலாம். அவற்றை தடுக்க அவல் பெரிய பங்கு வகிக்கிறது.

இப்படி பல நன்மைகளைக் கொண்ட சிவப்பு அவலை எப்படி பொங்கல் பண்டிகையின் போது செய்யலாம் என்று பார்க்கலாம்.

உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் சிவப்பு அவல் பொங்கல் செய்வது எப்படி? | Red Aval Pongal Recipe in TamilRepresentative Image

தேவையான பொருட்கள்

அவல் - 1/2 கப்

பாசிப்பருப்பு - 1/4 கப்

பெருங்காயதூள் - சிறிதளவு

மிளகு, சீரகம் - சிறிதளவு

நறுக்கிய பச்சை மிளகாய் - 3

நறுக்கிய இஞ்சி - 1 துண்டு

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு

எண்ணெய், நெய் - தேவையான அளவு

உப்பு - தேவைக்கேற்ப

உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் சிவப்பு அவல் பொங்கல் செய்வது எப்படி? | Red Aval Pongal Recipe in TamilRepresentative Image

செய்முறை

  • முதலில் பாசிப்பருப்பை குக்கரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடான பின்பு நெய்யை ஊற்றி சூடேற்றவும்.
  • அதில் பொடியாக நறுக்கிய மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றையு சேர்த்து வதக்கவும்.
  • இப்போது சிவப்பு அவலை அதில் சேர்த்து வதக்கவும்.
  • ஒரு பதத்திற்கு வதங்கிய பின்னர் அதில் பாசிப்பருப்பு, பெருங்காயதூள், உப்பு சேர்த்து நன்கு கிண்டி விடவும்.
  • வேண்டும் எனில் தண்ணீர் சிறிது சேர்த்து வேக வையுங்கள்.
  • பொங்கல் பதத்திற்கு வந்த பின்பு அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறி சாப்பிடுங்கள்.
  • இப்படியும் ஆரோக்கியமாக பொங்கல் செய்து சாப்பிடலாம் என்று பலருக்கும் கூறி இந்த பொங்கலை ஆனந்தமாக கொண்டாடுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்