Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள சில வழிகள் !!!

Vaishnavi Subramani Updated:
நகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள சில வழிகள் !!!Representative Image.

பொதுவாக நகம் வளர்த்துவது என்பது சிலருக்குப் பிடிக்கும் மற்றும் சிலருக்கு நகம் வளர்த்துவது பிடிக்காது. நகம் அதிகமாக வளர்த்தினால் அதில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகளால் உடலுக்குப் பல நோய்கள் வரும்.

காய்ச்சலில் ஆரம்பித்து வயிறு உபாதைகள் என பல வகையான பிரச்சனைகள் வரும் எனப் பலர் சொன்னாலும் அதைக் கேட்காமல் பலரும் நகம் வளர்த்துவது மிகவும் பிடிக்கும் என வளர்த்துவார்கள். சிலர் ஸ்டைல் என வளர்த்துவது இப்பொழுது அதிகமாகி வருகிறது.

இதனால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதால் காய்ச்சல் எனப் பல பிரச்சனைகள் ஏற்படும். இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் நகத்தைச் சுத்தமாக வைத்து வளர்த்துவது எப்படி என சில வழிகளைப் பார்க்கலாம். இந்த பதிவில் நகத்தைச் சுத்தம் செய்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

நகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள சில வழிகள் !!!Representative Image

நகங்களைச் சுத்தம் செய்வது எப்படி

✤ முதலில் நீங்கள் அதிகமாக நகங்கள் வளர்க்க விரும்பினால் அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களே அதே போல் அதைச் சுத்தம் ஆக வைப்பதற்கும் முக்கியத்துவம் தருவது அவசியம்.

✤ இல்லை என்றால், அதில் அதிகமாக அழுக்குகள் சேர்த்து அது அப்படியே வயிற்றுக்குள் செல்லும். அதனால் நீங்கள் அதைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

✤ அதுவும் வெயில் காலத்தில் அதிகமாக வியர்வை வருவதால் அதில் அழுக்குகள் சேரும். அதைச் சுத்தம் செய்ய வேண்டும். உடலில் சத்து குறைந்தால் கூட இது போன்ற பிரச்சனைகள் வரும்.

நகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள சில வழிகள் !!!Representative Image

✤ அதிகமாக வெளியில் சென்று வேலை செய்தால் நகத்தில் அழுக்குகள் சேரும். அதனால் அதைத் தவிர்க்க கை மற்றும் கால்களுக்கு உறை அணிந்து கொள்ள வேண்டும். இதனால்  வியர்வை அதிகமாக இருந்தாலும் நகத்தில் சேரும் அழுக்குகள் குறையும்.

✤ நம் சாப்பிடும் உணவுகள் மூலம் நகங்களில் சத்துகள் அதிகமாகும். இந்த ஓமேகா என்ற மூன்று கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள உணவுகளைச் சாப்பிட்டால் நகத்தில் சத்துகள் அதிகமாகும். இது போன்று பல உணவுகள் உள்ளது.

✤ நீச்சல் பயிற்சி செய்வது மற்றும் வயல் வேலை, தோட்ட வேலைகள் என இது போன்ற வேலைகள் செய்து முடித்த பிறகு, நகங்களில் அழுக்குகள் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் அதைத் தவிர்ப்பதற்கு, வேலைகள் செய்து முடித்த உடன் நகங்களில் உள்ள அழுக்குகள் முழுவதுமாக போகக் கழுவ வேண்டும்.

நகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள சில வழிகள் !!!Representative Image

✤ கோடைக்காலத்தில் அதிகமாக வெயில் இருப்பதால் நகங்களில் அழுக்குகள் சேர்வதால், அதைத் தவிர்ப்பதற்கு, மாய்சுரைஸர் செய்வதால் ஈரப்பதம் இருக்கும் அதனால் நகங்களில் அழுக்குகள் சேரும். பொதுவாக கோடைக்காலத்தில் நகம் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

✤ நகம் வளர்க்க வேண்டும் என்றால் முதலில் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடலில் முக்கிய நீர்ச்சத்து அதிகமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அதிகமாக நகம் வளர்த்தினால் உடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நகங்கள் பார்ப்பதற்கும் அழகாக இருக்காது.

✤ நகம் வளர்த்த வேண்டும் என ஆசைப்பட்டால் முதலில் உடலில் அதிகமாக நீர்ச்சத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாகத் தண்ணீர் குடித்தால் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாகவும் மற்றும் நகங்களுக்கு அதிகமாகச் சத்துகள் தரும். அதனால் நகங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

✤ ஊட்டச்சத்துகள் இல்லாதா உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால் அது நகம் வளர்ச்சி தடுப்பது உடன் உடலில் ஆரோக்கியம் மிகவும் குறையும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் நகம் விரைவில் உடையும். இது போன்று வராமல் இருக்கச் சத்து இல்லாதா உணவுகளைச் சாப்பிடும்  பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். நகங்களை அதிகமாக வளர்க்காமல் வெட்ட வேண்டும்.

✤ நகங்கள் அதிகமாக வளர்த்தினால் அதில் சேரும் அழுக்குகளால் உடலில் பல பிரச்சனைகள் மற்றும் நோய்கள் வரும் அதைத் தவிர்க்க நகங்களை வளர்ப்பதைத் தவிர்த்து நகங்களை வெட்டி சுத்தம் ஆக வைக்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்