Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair Fall

Vaishnavi Subramani Updated:
முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image.

முடி உதிர்வைக் குறைப்பதற்கு எனப் பலவழிகளைப் பின்பற்றியும் மற்றும் கடைகளில் விற்கும் க்ரீம் வாங்கிய பயன்படுத்தினாலும் முடி உதிர்வைத் தடுக்க முடியவில்லை என யோசிக்கிறீர்களா. எந்த க்ரீம் பயன்படுத்தினால் அதில் சிறிதளவு ரசாயனம் கலந்து தான் தயாரிப்பார்கள். அதைப் பயன்படுத்தி முடி உதிர்வு குறைந்தாலும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் குறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

✤ பலரும் தினமும் வேலைக்குச் செல்வதால் அவர்களுக்கு முடியை பராமரிக்க நேரம் எனத் தனியாக இருக்காது. அதனால் தினமும் சாப்பிடும் உணவு முறைகளில் இயற்கையான உணவைச் சேர்த்துக் கொண்டால் சில நாட்களில் முடி உதிர்வு குறைவதுடன் முடி வளர்ச்சி மற்றும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவும். இந்த பதிவில் உணவு சாப்பிடுவதால் முடி உதிர்வு குறையுமா எனப் பார்க்கலாம்.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

இயற்கையான உணவுகளைச் சாப்பிடுவதால் முடி உதிர்வைக் குறைக்கலாமா

✤ இந்த பதிவில் இயற்கையான உணவுகளைச் சாப்பிடுவதால் முடி உதிர்வு குறையும் மற்றும் முடி வளர்ச்சி அதிகமாகும். உடலுக்குப் பல நன்மைகள் உள்ளது. இந்த 7 வகையான உணவுகளைச் சாப்பிட்டால் முடி உதிர்வுகள் குறையும் மற்றும் அதனால் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கியத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

பால்

✤ நீங்கள் சைவம் மட்டும் சாப்பிடுபவர்களாக இருந்தால் முட்டைக்குப் பதிலாகப் பால் குடிக்கலாம். பாலில் புரதச் சத்து மற்றும் உடல் வலிமை பெறுவதற்கு, இதில் வைட்டமின் டி சத்து உள்ளது.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

✤ தினமும் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டால் உடலின் வலிமை அதிகரிக்கும். கால் மற்றும் கைகளில் வலிகள் இருந்தால் அது குணமாகும்.

✤ இதில் கால்சியம் சத்து உள்ளது எலும்புகள் நன்றாக பலம் பெறுவதற்கும் உதவும். இது முடியின் அடர்த்தி அதிகரிக்கவும், முடியின் வளர்ச்சி அதிகரிக்கவும் மற்றும் முடி உதிர்வைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

பெரிய நெல்லிக்காய்

✤ தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலில் ஒரு சொட்டு ரத்தம் சுரக்கும். இந்த நெல்லிக்காயில் பல வகையான சத்துகள் உள்ளது.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

✤ வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்துகள் உடலுக்கு வலுமை தருவதுடன் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ளதால் அது முடி உதிர்வைக் குறைக்கும்.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

முட்டை

✤ முட்டை என்பது மிகவும் ஆரோக்கியம் நிறைந்தவை. இதில் வைட்டமின் டி சத்துகள் உள்ளது அது முடி வளர்ச்சிக்கு உதவும். இதில் பல வகையான சத்துகள் உள்ளது.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

✤ முட்டையில் பயோட்டின் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது உடலுக்கு வலுவான தன்மை தருவதுடன் தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் கால் மற்றும் கைகளில் உள்ள எலும்புகளுக்கு மிகவும் சத்து அதிகமாகத் தரும். இதில் வைட்டமின் டி உள்ளதால் அது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

பசலைக் கீரை

✤ இந்த கீரையை மற்ற கீரைகளை விட அதிகப்படியான சத்துகள் நிறைந்து உள்ளது. பொதுவாகக் கீரை என்பது வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வீட்டில் சமைக்கக் கூடிய ஒரு உணவு.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

✤ அதனால் இந்த கீரையைச் சாப்பிட்டால் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ சத்துகள் அத்துடன் புரதச் சத்துகள், இரும்புச்சத்து எனப் பல வகையான சத்துகள் இந்த கீரையில் உள்ளது.

✤ இதனால் உச்சந்தலையில் உள்ள ஈரப்பதம் குறையாமல் இருக்கும். முடி வறட்சி ஏற்படாது. முடி வளர்ச்சி அதிகரிக்கும். முடி உதிர்வைக் குறைக்கும்.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

ஆளி விதை

✤ ஆளி விதை என்பது ஒரு பயிர் வகையைச் சார்ந்தது. விதை என்பது அதிகப்படியான சத்துகளைக் கொண்டது. இந்த ஆளி விதையில் கொழுப்பு அமிலங்கள் உள்ளது.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

✤ அது நம் முடியின் வேர்வரை சென்று அதில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது.

✤ இதைத் தினமும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் முடியின் வளர்ச்சி அதிகமாகவும் முடி உதிர்வு குறைவாகவும் இருக்கும்.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

பீன்ஸ்

✤ கேரட், பீன்ஸ் என்பது அனைவரும் உணவுகளில் சேர்த்துச் சாப்பிடக்கூடிய ஒரு உணவு. கேரட்டில் எந்த அளவிற்குச் சத்துகள் நிறைந்துள்ளதே அந்த அளவிற்கு பீன்ஸிலும் சத்துகள் நிறைந்துள்ளது.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

✤ பீன்ஸில் பல வகைகள் உள்ளது. அதில் உள்ள சத்துகள் புரதச் சத்துகள் மற்றும் வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது.

✤ அது முடியின் உதிர்வைக் குறைக்கும் மற்றும் முடிக்கு உள்ள ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். இதனால் முடியின் வளர்ச்சி அதிகமாகும்.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

வால்நட்ஸ்

✤ இது முந்திரி, பாதாம் போல் அதிக சத்துகள் கொண்டது. இதை அளவாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால் முடியின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி என அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

✤ முடி உதிர்வைக் குறைக்கும். முடியின் வறட்சி தன்மை குறைந்து ஈரப்பதம் மிக்க முடியாக மாற்றும். இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று சாப்பிட வேண்டும்.

முடி உதிர்வை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் | Foods to Avoid Hair FallRepresentative Image

✤ இது போன்று இயற்கையான உணவுகளைச் சாப்பிடும் போது ரசாயன க்ரீம் மற்றும் பேஸ்ட் என எதுவும் முடிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. அத்துடன் இயற்கையாக ஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம். வீட்டில் செய்து மட்டும் பயன்படுத்த வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்